Announcement

Collapse
No announcement yet.

गोदा स्तुति: கோதா ஸ்துதி : 16 / 29 . வண்டுகளின் , மங

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • गोदा स्तुति: கோதா ஸ்துதி : 16 / 29 . வண்டுகளின் , மங


    गोदा स्तुति: கோதா ஸ்துதி : 16 / 29



    .


    வண்டுகளின் , மங்கள வாத்யம் !











    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम :



    .


    श्रीमान् , वेङ्कट - नाथार्य: , कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य - वर्य: , मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||


    .


    त्वत् , मौलि , दामनि , विभो: , शिरसा , गृहीते ,


    स्वच्छन्द , कल्पित , सपीति , रस , प्रमोदा: ।


    मंजु , स्वना , मधु - लिहो , विदधु: , स्वयम् , ते ,


    स्वायम्वरम् , कम् - अपि , मंगल - तूर्य , घोषम् ।।


    .


    த்வத் , மௌளி , தாமநி , விபோ: , சிரஸா , க்ருஹீதே ,


    ஸ்வச்சந்த ,கல்பித , ஸபீதி , ரஸ , ப்ரமோதா: |


    மஞ்சு , ஸ்வநா , மது - லிஹோ , விதது: , ஸ்வயம் , தே ,


    ஸ்வாயம்வரம் , கம் - அபி , மங்கள - தூர்ய , கோஷம் ||


    .


    विभो: ..... பிரபுவான , உன் நாயகனுடைய ,


    शिरसा .... திரு முடியால் ,


    गृहीते ...... ஏற்றுக்கொள்ளப் பட்ட ,


    त्वत् ........ உனது ,


    मौलि ....... திரு முடி ,


    दामनि ...... மாலையில் ,


    स्वच्छन्द .... தம் , விருப்பப்படி ,

    कल्पित ..... செய்யப்பட்ட ,


    सपीति ...... ஒன்று கூடிப் , பருகும்


    रस ......... சுவையால் ,


    प्रमोदा: ..... மகிழ்ந்த ,


    मंजु ......... இனிய ,


    स्वना ....... ஒலி உடைய ,


    मधु - लिहो .வண்டுகள் ,


    ते ............ உன்னுடைய


    स्वायम्वरम् .. சுயம்வரத்திக்கு ஏற்ப ,


    कम् - अपि . விசித்ரமான ,


    मंगल - तूर्य .. மங்கள வாத்யங்களின்


    घोषम् ........ ஒலியை

    स्वयम् ........ தாமாக


    विदधु: ........ செய்தன.





    .




    ஶ்ரீ. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை:




    * கோதாப்பிராட்டியே ! உன் திருமுடியில் சூடிக் களைந்த , மாலையை , உன் நாயகன் , மிக்க ஆர்வத்துடன் , ஏற்றுத் தன் திருமுடியில் , சூடிக் கொள்கிறான்.


    * அம்மாலையில் , வண்டுகள் புகுந்து , ஒன்று கூடி , தம் இஷ்டப்படி , அதிலுள்ள தேனைப்
    பருகுகின்றன. அதனால் அவற்றுக்கு , மகிழ்ச்சி பொங்கி , இனிமையாக ரீங்காரத்துடன் , பாடுகின்றன.


    * அந்த ஒலி , உனது சுயம்வரத்திற்காக , வண்டுகள் தாமாகவே செய்த , பல்வகை மங்கள வாத்யங்களின் முழக்கமாக , அமைந்தது.


    [ இச்சுலோகத்தில், கோதையின் திருமண விழாவில் , விருந்தும் , வாத்ய ஒலியும் , குறிக்கப்பட்டுள்ளதாக , ரஸிகர் , கூறுவர்]














Working...
X