Announcement

Collapse
No announcement yet.

गोदा स्तुति: கோதா ஸ்துதி : 10 / 29. . கோதை , சூடிக் கொ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • गोदा स्तुति: கோதா ஸ்துதி : 10 / 29. . கோதை , சூடிக் கொ

    गोदा स्तुति: கோதா ஸ்துதி : 10 / 29.


    .


    கோதை , சூடிக் கொடுத்த மாலையின், பெருமை !


    .


    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम :

    .


    श्रीमान् , वेङ्कट - नाथार्य: , कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य - वर्य: , मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||


    .




    तात: तु , ते , मधु - भिद: , स्तुति - लेश - वश्यात् ,


    कर्ण - अमृतै: , स्तुति - शतै: , अनवाप्त - पूर्वम् |


    त्वत् , मौळि , गन्ध - सुभगाम् , उपह्रुत्य , मालाम्


    लेभे ! महत् - तर , पद - अनुगुणम् , प्रसादम् ||


    .


    தாத: து , தே , மது - பித: , ஸ்துதி - லேச - வச்யாத் ,



    கர்ண - அம்ருதை : , ஸ்துதி - சதை: , அநவாப்த - பூர்வம் |




    த்வத் ,மௌளி - கந்த , ஸுபகாம் , உபஹ்ருத்ய , மாலாம் ,




    லேபே ! மஹத் - தர , பத - அனுகுணம் , பிரஸாதம் ||




    .


    ते ...................... உன்னுடைய

    तात: तु ................ தந்தையான பட்டர் பிரான்

    स्तुति - लेश .......... சிறிதளவு தோத்திரத்திற்கு

    वश्यात् ................ வசப்படுபவனான

    मधु - भिद: ........... எம்பெருமான்

    कर्ण - अमृतै: ......... செவிக்கு இனிய அமிர்தம் போன்ற ,

    स्तुति - शतै: .......... நூற்றுக்கணக்கான துதிகளால் ,


    अनवाप्त - पूर्वम् ...... இதற்கு முன் , கிடைக்காத ,


    महत् - तर ............. "பெரியாழ்வார்" என்ற ,

    पद ..................... பெயரைப் , பெறுவதற்கு ,

    अनुगुणम् .............. ஏற்ற ,

    प्रसादम् ................ திரு அருளை ,


    त्वत् ..................... உன் ,


    मौळि ................... திருமுடியின் ,

    गन्ध ..................... மணத்தால் ,

    सुभगाम् .................பெருமை பெற்ற ,

    मालाम् .................. மாலையை ,

    उपह्रुत्य .................. ஸமர்ப்பித்து ,

    लेभे ! .................... அடைந்தார் !


    .

    ஶ்ரீ உப.வ.ந. ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்க உரை:


    * கோதைப் பிராட்டியே ! உன் நாயகனான எம்பெருமானைச் சிறிதளவு புகழ்ந்தாலும் போதும்.உடனேயே அவன் வசப்பட்டு விடுவான்.

    * அத்தகைய எம்பெருமானை , மற்றைய ஆழ்வார்களும், உன் தந்தையான பட்டர்பிரானும் , செவிக்கு அமுதம் போல் இனிய , நூற்றுக் கணக்கான , பாசுரங்களைப் பாடிப் புகழ்ந்துள்ளனர். அவற்றுக்குக் கூட எம்பெருமான் வசப்படவில்லை.

    * ஆனால், உன் திருமுடியில் சூடி , அதனால் தெய்வீக மணம் பெற்ற , பூமாலையைக் களைந்து , அதை எம்பெருமானுக்குக் கொண்டு போய் ஸமர்ப்பித்தார்.

    * அதனால் ,மிக உகந்த அவனுக்கு , முன் சுரக்காத பெரும் திரு அருள் பெருகியது. உன் தந்தையைப் போற்றி , 'பெரியாழ்வார்' என்ற திரு நாமத்தைத் தந்தான்.

    * ஆகவே , அருளிச் செயலைப் பாடி அருளிய , மற்றைய ஆழ்வார்களாலும் , உன் தந்தையால் , நீ சூடிய பூமாலையை ஸமர்ப்பிப்பதற்கு முன்பும் பெறப்படாத ,ஒரு பெரிய விருதை , உன் தந்தைக்கு மட்டும் , எம்பெருமான் அருளயதற்குக் காரணம் , உன்னிடம் , அவனுக்கு உள்ள , அளவிலாக் காதல் அன்றோ ?












Working...
X