गोदा स्तुति: கோதா ஸ்துதி : 06 / 29. கோதையும் , நதிகளும்
.
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम :
.
श्रीमान् , वेङ्कट - नाथार्य: , कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य - वर्य: , मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
.
शोणा , अधरे - अपि ; कुचयो: , अपि , तुंग - भद्रा ;
वाचाम् , प्रवाह , निवहे: अपि , सरस्वती ; त्वम् |
अप्राकृतै: - अपि , रसै: , विरजा , स्व - भावात् ,
गोदा - अपि , देवि ! , कमितु: , ननु , नर्मदा ; असि ||
.
சோணா , அதரே - அபி ; குசயோ: , அபி , துங்க - பத்ரா ;
வாசம் , ப்ரவாஹ , நிவஹே , அபி , ஸரஸ்வதீ ; த்வம் |
அப்ராக்ருதை: - அபி , ரஸை: , விரஜா , ஸ்வபாவாத் ,
கோதா- அபி , தேவி ! கமிது: , நநு , நர்மதா -அஸி ||
.
देवि ............... கோதைப் பிராட்டியே !
त्वम् ............... தாங்கள் ,
अधरे .............. திரு உதடுகளில் ,
शोणा अपि ...... சிவந்த நிறமாயும் ( சோணை நதி ஆகவும்) ;
कुचयो: ........... ஸ்தனங்களில் ,
तुंग - भद्रा अपि... உயர்ந்த மிடுக்குடனும் (துங்க பத்ரை நதி ஆகவும்) ;
वाचाम् ............ வாக்குகளின் ,
प्रवाह .............. பெருக்குக்களின்,
निवहे .............. கூட்டத்தில் ,
सरस्वती अपि .... ஸரஸ்வதி தேவியாகவும் (ஸரஸ்வதி நதி ஆகவும்) ;
अप्राकृतै: ......... ப்ரக்ருதி ஸம்பந்தம் இல்லாத ,
रसै: ............... பக்தி ரஸங்களால் ( தீர்த்தங்களால்)
विरजा अपि ...... ரஜோ குணம் இல்லாத ,
कमितु: ............ எம்பெருமானுக்கு ,
स्व - भावात् ...... இயற்கையாக ,
गोदा - अपि ...... ஸ்தோத்ரங்களை அருள்பவளாகவும் ,
नर्मदा ............. பரிஹாஸங்களைப் பேசுபவளாகவும் (நர்மதை நதி ஆகவும்)
असि ननु .......... இருக்கிறீர்கள் அல்லவா ?
.
ஶ்ரீ உப. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை:
* இந்த ச்லோகம் , பல நதிகளின் , பெயர்களைக் கூறுவதாய் உள்ளது
* பிராட்டியே ! நீ ,சோணை நதி ஆகவும் , துங்கபத்ரை நதி ஆகவும் , பெரு வெள்ளம் இட்டு ஓடும் , ஸரஸ்வதி நதி ஆகவும் , இந்த ஸம்ஸார லோகத்தில் இல்லாத , திவ்ய தீர்த்தம், நிரம்பிய , விரஜா நதி ஆகவும் , கோதாவரி நதி ஆகவும் , நர்மதை நதி ஆகவும் , உள்ளாய் என்ற முரண்பட்ட நிலையைச் சொல்வதாக அமைந்துள்ளது.
* இதன் உண்மைப் பொருள்:
. கோதைப் பிராட்டியே ! உன் திரு அதரம் செம்மை நிறம்கொண்டுள்ளது .
. உன் ஸ்தனங்கள் , பெரு மிடுக்குடன் , மங்களமாய்ப் பொலிகின்றன.
. உன் அமுதத் திரு வாக்குகளின் , வெள்ளத்தைக் காணும்போது , கல்விக் கடவுள் எனப்படும் ஸரஸ்வதி தேவி , நீயே என்னும்படி , உள்ளது .
. நீ உன் காதலனான எம்பெருமானைப் பற்றி , தூய ஸத்வ குணத்தின் விளைவுகளன , அனுபவங்களாலும் , மனோரதங்களாலும் , நிறைந்து , அவற்றை , உன் இரண்டு ஶ்ரீ ஸூக்திகளின் வாயிலாக , அவனுக்குத் , தானாக , ஸமர்ப்பிக்கௌன்றாய்.
. இத்தனைச் சிறப்புகளைக் கொண்ட நீ , உன் நாயகனான எம்பெருமானுக்குப் , பல பரிஹாஸச் சொற்களால் , இன்சுவையைப் பெருக்குகிறாய்.