Announcement

Collapse
No announcement yet.

गोदा स्तुति: கோதா ஸ்துதி : 03 / 29

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • गोदा स्तुति: கோதா ஸ்துதி : 03 / 29

    गोदा स्तुति: கோதா ஸ்துதி : 03 / 29


    .


    தாயே ! எனக்கு , நல்ல வாக்கை , அருள்வாய் !


    .


    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम :


    .


    श्रीमान् , वेङ्कट - नाथार्य: , कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य - वर्य: , मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||


    .


    त्वत् - प्रेयस: , श्रवणयो: , अमृतायमानाम्


    तुल्याम् , त्वदीय , मणि - नूपुर , शिंचितानाम् |


    गोदे ! त्वम् , एव , जननि ! त्वत् , अभिष्टव - अर्हाम् ,


    वाचम् , प्रसन्न - मधुराम् , मम , संविदेहि ! ||


    .


    த்வத் - ப்ரேயஸ: , ச்ரவணயோ: , அம்ருதாயமாநாம் ,


    துல்யாம் , த்வதீய , மணி - நூபுர , சிஞ்சிதாநாம் |


    கோதே ! த்வம் , ஏவ , ஜநநி ! த்வத் , அபிஷ்டவ - அர்ஹாம் ,


    வாசம் , ப்ரஸந்ந - மதுராம் , மம , ஸம்விதேஹி ! ||


    .


    जननि .............தாயே !


    गोदे ...............கோதைப் பிராட்டி !


    त्वत् ...............உன்னுடைய ,


    प्रेयस: ........... நாயகனுடைய ,


    श्रवणयो: .........திருச் செவிகளுக்கு ,


    अमृतायमानाम् ....அமுதம் , போன்றதும் ;


    त्वदीय ........... உன்னுடைய ,


    मणि नूपुर ........இரத்தினச் சிலம்புகளின் ,


    शिंचितानाम् ......ஒலிகளுக்கு ,


    तुल्याम् ........... ஒப்பானதும் ;


    त्वत् ................உன்னைத் ,


    अभिष्टव ...........துதிப்பதற்கு ,


    अर्हाम् ..............ஏற்றதாய் ;


    प्रसन्न ..............தெளிந்தும் ;


    मधुराम् .............இனிமையாகவும் , உள்ள ,


    वाचम् ...............வாக்கு வன்மையை ,


    मम .................எனக்கு ,


    त्वम् एव ............நீயே ,


    संविदेहि ............அளிக்க வேண்டும் !


    .


    ஶ்ரீ உப. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யர் விளக்கவுரை :


    * தாயே ! கோதைப் பிராட்டி ! உன்னைத் துதிப்பதற்கு ஏற்ற , பேச்சுத் திறனை , நீயே , எனக்கு , அருளவேண்டும்.


    * இவ்வாறு , நீ செய்தால் , நீ , எனக்கு அளித்த , வாக்கு , உன் நாயகனான , எம்பெருமானுடைய திருச் செவிகளுக்கு , அமுதமாய் , இருக்கும் .


    * நீ , நடந்து வரும்போது , உன் திருவடிகளில் அணிந்த , மணிச் சிலம்பின் , ஒலிகளைக் கேட்டு , எம்பெருமான் உள்ளம் , மிக பூரிப்பு அடையுமன்றோ!


    * அவ்வாறே , உன்னைப் பற்றி , நான் செய்யும் தோத்திரத்தைக் , கேட்கும்போதும் , அவன் மகிழ்ச்சி கொள்வான் .


    *நீ எனக்கு அருளும் வாக்கு , கேட்பவர்களுக்குக் , கருத்து , தெளிவாகவும் , செவிக்கு , மிக இனியதாய் , இருக்க வேண்டும் .


    * இத்தகைய வாக்கை , நீயே , எனக்கு , அருள வேண்டும் .
Working...
X