Announcement

Collapse
No announcement yet.

गोदा स्तुति: கோதா ஸ்துதி : 01 / 29

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • गोदा स्तुति: கோதா ஸ்துதி : 01 / 29







    गोदा स्तुति: கோதா ஸ்துதி : 01 / 29



    கோதை நாச்சியாரைச் , சரணம் , அடைதல்
    .

    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम :


    .

    श्रीमान् , वेङ्कट - नाथार्य: , कवि - तार्किक - केसरी |

    वेदान्त - आचार्य - वर्य: , मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    .








    ஶ்ரீ உப வ.ந. ஶ்ரீராமதேசிகாசார்யரின் முன்னுரை :

    * இந்த ஸ்தோத்ரம் , ஶ்ரீ வில்லிபுத்தூரில் , பெரியாழ்வாருக்குச் செல்வத் திருமகளாய் அவதரித்த , ஆண்டாளைப் (கோதா + ஸ்துதி - கோதைப் பிராட்டி) யைப் பற்றிப் பாடியதாகும்,
    இந்தத் திருநாமமும் ஶ்ரீ தேசிகனை தானே இட்டு , அருளியது ஆகும். இது 29 சுலோகங்கள் கொண்டது .


    * ஆண்டாளுக்கு கோதை (மாலை போல் இனியவள் , சிறந்த வாக்கை அருளுபவள்) , சூடிக் கொடுத்த நாச்சியார் ( தான் சூடிக் கொடுத்த மாலையை , எம்பெருமான் , ஆதரத்துடன் , அணியுமாறு , கொடுத்தவள் ) என்ற திருநாமங்களும் உண்டு.


    * இந்தச் சூடிக் கொடுத்த வரலாற்றையே , முக்கியமாகக் கொண்டு அவதரித்தது , இந்த ஸ்தோத்ரம். கோதைப் பிராட்டியை , பூமி தேவியின் அம்சம் என்றும் , நீளாதேவியின் அம்சம் என்றும் , கூறுவர்.


    * இதில் :
    . முதலில் , ஶ்ரீ தேசிகன் , கோதாப்பிராட்டியைச் சரணம் அடைந்து ;

    . வேதங்களுக்கும் எட்டாத,அவள் பெருமையைப் , பேசத் துணந்த , தமக்கு, சிறந்த வாக்கை அருளுமாறு வேண்டுவது ;


    . பின் , இவள் அருளால் , வால்மீகி முதலிய கவிகளும் , சிறந்த நாவன்மை பெறுதல் ;


    . அவளால் , எம்பெருமான் , அடியார்க்கு , வசப்படல் ;


    . ஆழ்வார்களும் , இவளைப் பின் பற்றி , அனுபவித்தல் ;


    . பெரிய பிராட்டியோடு , ஒற்றுமை ;


    . இவளால் , பெரியாழ்வாருக்கு , வந்த பெருமை ;


    . இவள் அவதரித்த , தென் திசையின் , ஏற்றம் ;


    . கோதாவரி நதிக்கு , இவள் பெயரால் , வந்த , பெருமை ;


    . தோழிகளின் நகைச் சொற்களின் , உண்மைப் பொருள் ;


    . இவள் மாலைக்கு , வனமாலையினும் ஏற்றம் ;


    . இவள் ஸ்வயம்வரத்திற்கு , வண்டுகளின் , மங்களம் பாடல் ;


    . இவள் சூடிய மாலையில் , திருவரங்கனுக்கு , உள்ள மதிப்பு ;


    . மாலை மாற்று வர்ணனை ;


    . பழைய அரசரும் , இவள் அருளால் , அரசாளுதல் ;


    . பாவிகளுக்காகக் , கணவனிடம் , பரிந்து , பேசி , அவர்களைக் காத்தல் ;

    . இவளை , அடைவதால் , ஸம்ஸார தாபம் , ஒழிதல் ;


    . உலகுக்குத் தாயாய் இருத்தல் ;


    முதலியவற்றை , விளக்கி ,


    * ஒரு த்யான சுலோகத்துடன் ;


    * திருவரங்கனுக்கு , சாசுவத கைங்கர்யம் , செய்வதையே , நூற்பயனாக்கூறித் தோத்திரத்தைத் தலைக்கட்டுகிறார்



    01


    श्री विष्णु - चित्त , कुल , नन्दन , कल्प -वल्लीम् ,


    श्री रंग - नाथ , हरि - चन्दन , योग - ध्रुश्याम् |


    साक्षात् , क्षमाम् , करुणया , कमलाम् , इव अन्याम्

    गोदाम् , अनन्य - शरण्य: , शरणम् प्रपद्ये ||


    .

    01


    ஶ்ரீ விஷ்ணு - சித்த , குல , நந்தன , கல்ப வல்லீம் ,


    ஶ்ரீ ரங்க - நாத , ஹரி - சந்தன , யோக - த்ருச்யாம் |


    ஸாக்*ஷாத் , க்ஷமாம் , கருணயா , கமலாம் , இவ அன்யாம் ,






    கோதாம் , அநந்ய - சரண: , சரணமடைந்த , ப்ரபத்யே ||








    श्री विष्णु - चित्त .பெரியாழ்வாரினழ

    कुल .................குலம் ஆகிய

    नन्दन .............. நந்தனவனத்திற்குக்

    कल्प -वल्लीम् ..... கற்பகக் கொடி போன்றவளாய் ;

    श्री रंग - नाथ ....... திரு அரங்கப் பெருமானாகிய

    हरि - चन्दन .......,,,ஹரி சந்தன மரத்தோடு

    योग ................,.சேர்ந்து இருப்பதால் ,

    ध्रुश्याम् ...............காண அழகியாய் ;

    साक्षात् ..............நேராக ,

    क्षमाम् ...............,பொறுமையும் , பூமி தேவியின் வடிவும். கொண்டவளாய் ;

    करुणया ..............கருணையால்

    अन्याम् .........,,,,,,,மற்றொரு

    कमलाम् , इव.........பெரிய பிராட்டி போன்றவளாயும் உள்ள

    गोदाम् ................ஶ்ரீ ஆண்டாளை ,

    अनन्य - शरण्य: , வேறு புகல் இல்லாத்தால்

    शरणम् ..சரணமாக

    प्रपद्ये .....அடைகிறேன்

    ஶ்ரீ உப வ.ந. ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :

    * தேவ லோகத்தில் உள்ள , இந்திரனது , பூங்காவிற்கு , நந்த வனம் என்று பெயர் . அதில் உள்ள கற்பக மரம் , எல்லாப் பலனையும் தர வல்லது. கொடி , எப்பொழுதும் , மரத்துடன் சேர்ந்தே இருக்கும்.


    * பெரியாழ்வார் குலம் ஒரு நந்தவனமாகும்.அக்குலத்தை , விளக்க வந்த கற்பகக் கொடி போன்றவள் , ஆண்டாள் .


    * திருவரங்கப் பெருமான் , அடியார்களுக்கு , எல்லா பலனையும் , கொடுக்கும் , ஹரி சந்தன மரம் போன்றவன்.


    * ஆண்டாள் எனும் கொடி , திரு அரங்கன் , எனும் , ஹரி சந்தன மரத்தை , அணைந்து , நிற்பது , கண் கொள்ளாக் காட்சி ஆகும்.


    * கோதைப் பிராட்டி , பொறுமையே , அல்லது , பூமி தேவியே , வடிவெடுத்து , நேரில் வந்தாற்போன்று , உள்ளாள்.


    * இவளது , கருணையோ , பெரிய பிராட்டியே, மற்றொரு வடிவு கொண்டு வந்தாளோ என்ற நினைவைத் தருகிறது.


    * வேறு புகல் அற்ற , அடியேன் , கோதைப் பிராட்டியைச் , சரணம் அடைகிறேன் .





    .






    Last edited by bmbcAdmin; 15-01-18, 22:20.
Working...
X