Niti-207 Eyes of a Brahmin
श्रुति स्म्रुति विप्राणां चक्षुषी द्वे विनिर्मिते।
स्यात् द्वाभ्या मंध प्रकीर्तितः॥
பொருள் :
வேதமும் சாஸ்த்திரமும் ப்ராஹ்ணமணனுக்கு இரு கண்களைப் போன்றது!
இதில் ஒன்றை பெறாதவன் - பொட்டைக் கண்ணன்
இரண்டையும் பெறாதவன் பிறவிக் குருடன்
திருவள்ளுவர் வாக்கு:
குறள் 393:
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.
கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்.
குறள் 400:
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.
மு.வ உரை:
ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.
குறிப்பு:- இங்கு மாடு என்ற சொல் செல்வம் என்ற பொருளில் வள்ளுவரால் கையாளப்பட்டுள்ளது.
அந்தணர் மாடு என்று வேதத்தைக் குறிப்பிடுவர்.
எனவே அந்தணர்கான கல்வி என்பது வேதமும் சாஸ்த்ரமும் ஆகிய இரண்டும் ஆகும்.
இவ்விரண்டும் இல்லாத அந்தணர்கள் (வேறு எதைக் கற்றிருந்தாலும்) அவர்கள் முகத்தில் இருப்பது கண் அல்ல புண் என்றே அறியவேண்டும்.
Comment