சிற்றினம் சேராமை - Niti-210
सन्तप्तायसि संस्थितस्य पयसो नामापि नश्रूयते मुक्ताकारतया तदेव नलिनी पत्रस्थितं द्रुश्यते।
अंतः सागर शुक्तिमध्य पतितं तन्मौक्तिकं जायतेप्रायेणाथ ममध्य मोत्तम जुषां येवं विधा व्रुत्तयः॥
பொருள் :
இதிலும் உத்தம - மத்யம - அதமர்கள் எப்படி உருவாகிறார்கள் என்பது பற்றி பேசப்படுகிறது.
1. காய்ந்த இரும்பில் விழுந்த நீர்த்துளி ஆவியாகிவிடுகிறது.
2. தாமரையில் விழுந்த நீர்த்துளி முத்துப்போல் தோற்றமளிக்கிறது.
3. சிப்பியில் விழுந்த நீரோ முத்தாகவே மாறிவிடுகிறது.
அதுபோல் -
1. தீயவர்களின் தொடர்பைப் பெற்றவன் அழிந்துபோகிறான்.
2. நல்லவர்களின் நட்பைப் பெற்றவன் நல்லவனாகத் தோற்றமளிக்கிறான்.
3. மஹான்களின் அருளைப் பெற்றவன் மஹானாகவே ஆகிவிடுகிறான்.
திருவள்ளுவர் வாக்கு:
குறள் 452:
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.
பொருள்:
சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும் அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்.
மு.வ உரை:
சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.
Translation:
The waters' virtues change with soil through which they flow;
As man's companionship so will his wisdom show.
Explanation:
As water changes (its nature), from the nature of the soil (in which it flows), so will the character of men resemble that of their associates.
Comment