Announcement

Collapse
No announcement yet.

மூன்றுவித மனிதர்கள்-Three type of persons

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மூன்றுவித மனிதர்கள்-Three type of persons



    प्रारभ्यतेन खलु विघ्न भयेन नीचैः प्रारभ्य विघ्न विहता विरमंति मध्याः।
    विघ्नैर्मुहुर्मुहुरपि प्रतिहन्य मानाः प्रारब्धं उत्तमगुणा न परि त्यजन्ति॥
    பொருள் :
    தோல்விக்கு அஞ்சி தொடங்காமலே விடுபவர் கீழ்மக்கள்
    தொடங்கிய செயலை இடையில் விடுபவர் -இரண்டுங்கெட்டான்
    எத்தனை தடை வந்தாலும் வெற்றிபெரும்வரை தொடர்பவரே - மேன்மக்கள்!!


    திருவள்ளுவர் வாக்கு:
    குறள் 611:
    அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
    பெருமை முயற்சி தரும்.

    நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.
    நம்மால் இதைச் செய்யமுடியாது என்று மனம் தளரக்கூடாது. அதைச் செய்து முடிக்கும் ஆற்றலை முயற்சி தரும்.
    Translation:
    Say not, 'Tis hard', in weak, desponding hour,
    For strenuous effort gives prevailing power.
    Explanation:
    Yield not to the feebleness which says, "this is too difficult to be done"; labour will give the greatness (of mind) which is necessary (to do it).
    குறள் 612:
    வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
    தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
    எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும். இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும்.
    ஒரு செயலைச் செய்யும்போதே, அதைத் தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணிச் செய்யாது விட்டுவிடாதே. அவ்வாறு விட்டுவிடுபவரை இந்த உலகமும் விட்டுவிடும்.
    Translation:
    In action be thou, 'ware of act's defeat;
    The world leaves those who work leave incomplete!.
    Explanation:
    Take care not to give up exertion in the midst of a work; the world will abandon those who abandon their unfinished work.
    Last edited by ahobilam; 12-09-12, 20:04.

  • #2
    Re: மூன்றுவித மனிதர்கள்-Three type of persons

    உண்மை தான் சார் முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்திவிடும்

    Comment

    Working...
    X