மானமா? பொருளா-உயர்ந்தது எது? -Niti Sloka-212
अधमा धनम् इच्छन्ति धनमानौ हि मध्यमाः।
उत्तमा मानमिच्छन्ति मानोहि महान्धानम् ॥
அதமர்கள் (மானத்தை இழந்தும்) பொருளையே விரும்புவர்.
மத்திமர்கள் மானம் பொருள் இரண்டையும் விரும்புவர் ஆனால்
உத்தமர்கள் கௌரவத்தை மட்டுமே விருமப்புவர் ஏனெனில்
உத்தமர்களைப் பொறுத்தவரை கௌரவமே ஏற்புடைய சிறந்த பொருள்.
இதுபற்றி திருவள்ளுவர் என்ன சொல்கிறார்.
குறள் 967:
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.
தன்னை மதிக்காதவரின் பொருள் கொண்டு உயிர் வாழ்வதைக் காட்டிலும்
மானத்தோடு உயிரிழப்பதே மேலென்பது மேலோர் நிலை.
Comment