மனம் இருந்தால்
மார்க்கம் உண்டு.
எல்லாம் இருந்தும் எதற்க்கெடுத்தாலும் பிறரை குறை கூறுபவன்
உயிரோடு வாழும் பிணமே

மனஉறுதியின் மறுபெயர்: சமஸ்கிருத தேர்வில் சாட்சி!
கோவை: கோவையில் 28-7-2015 நடந்த சமஸ்கிருத எழுத்துத் தேர்வில், இரு கைகள், இரு கால்கள் இல்லாத கர்நாடக இசைக்கலைஞர் கிருஷ்ணமூர்த்தி உட்பட, 500க்கு மேற்பட்டோர் தேர்வு எழுதினர்.
'சமஸ்கிருத பாரதி' அமைப்பு சார்பில், அஞ்சல் வழியில் சமஸ்கிருதம் கற்பவர்களுக்கான எழுத்துத் தேர்வு, தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் 28-7-2015 நடந்தது. கோவையில், கிக்கானி மற்றும் சபர்பன் பள்ளிகளில் நடந்த தேர்வில், 500க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சமஸ்கிருத பாரதி அமைப்பின் தென் தமிழக தலைவர் அனந்த கல்யாணகிருஷ்ணன் கூறுகையில், ''தமிழகம் முழுவதும் அஞ்சல் வழி கல்வி திட்டத்தில், 8,000 பேர் சமஸ்கிருதம் கற்று வருகின்றனர். கோவையில் வாரம் ஒருமுறையும், பிற மாவட்டங்களில் மாதம் இரு முறையும், சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை எழுத்து தேர்வு நடத்தப்படுகிறது,'' என்றார்.
நேற்று பங்கேற்ற தேர்வர்களில், இரு கைகள் மற்றும் இரு கால்கள் இல்லாத, கர்நாடக இசைக்கலைஞர் கிருஷ்ணமூர்த்தியும் ஒருவர். இவர் தேர்வு எழுத வசதியாக, கிக்கானி பள்ளியில் சிறப்பு வசதி செய்து தரப்பட்டது. திடகாத்திரமான உடல் அமைப்பு கொண்ட ஏராளமானோர், தங்கள் முன்னேற்றத்துக்கு தடையாக அரசையும், சமுதாயத்தையும் குறை கூறிக் கொண்டிருக்கும் நிலையில், இரு கால்கள், கைகள் இல்லாமலே, உத்வேகத்துடன் தேர்வு எழுதிய கிருஷ்ணமூர்த்தி, அனைவரையும் உணர்வு பூர்வமாக கவர்ந்தார்.

Posted by Sri.Pattabi Raman
\