ஸ்வாமின்,
மேற் கண்ட ஸ்லோகத்தில் அக்னிஹோத்ரம் என்ற வார்த்தைக்குப்பிறகு க்ஷேத்ரம் க்ருஹம் என்றில்லாமல் க்ருஹம் க்ஷேத்ரம் என்று மாற்றி உபயோகித்திருப்பதின் காரணம் என்ன? சமஸ்கிருத ஸ்லோக மரபுப்படி இப்படித்தான் அமைக்கப்படவேண்டுமா?
ஶ்ரீ:
இந்தச் செய்யுளில் வரிசை ஒழுங்கிற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை.
மேலும், ஸம்ஸ்க்ருதத்தில் - எழுவாய், பயனிலை, செயப்படுபொருள், உரிச்சொல் என எந்தச் சொல்லை வேண்டுமானாலும் எந்த இடத்திலும் எழுதலாம் பொருள் சற்றும் மாறாது.
அதாவது, எழுவாய் பயனிலையாகவோ, பயனிலை எழுவாயாகவோ, இறந்த கால, நிகழ்கால மாற்றமோ நேராது. ஆங்கிலத்தில் கூட இந்த வசதி கிடையாது. கீழுள்ள சிறு உதாரணத்தைப் பார்க்கவும்.
I like your speech only. - நான் உங்கள் சொற்பொழிவை மட்டுமே விரும்புகிறேன்.
I like only your speech. - நான் உங்களின் சொற்பொழிவை மட்டுமே விரும்புகிறேன்.
I only like your speech. - நான் மட்டுமே உங்கள் சொற்பொழிவை விரும்புகிறேன்.
என்.வி.எஸ்.
வெறுங்கையுடன் போகக்கூடாத இடங்கள் பற்றி நீதி சாஸ்திரப்படி பல இடங்களை சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எந்த வயதித்தினரையும் வெறுங்கையுடன் சென்று பார்க்கலாமா? சாஸ்திரம் இதை அனுமதிக்கிறதா?
Comment