Announcement

Collapse
No announcement yet.

எந்தக் கீரையில் என்ன சத்து?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • எந்தக் கீரையில் என்ன சத்து?

    முளைக்கீரை/சிறுகீரை/ பாலக்கீரை
    தினமும் ஒவ்வொரு வகையான கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால், உடலுக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் கிடைத்துவிடும். பொதுவாகக் கீரை வகைகளில் கலோரியும் புரதமும் மிகக் குறைவாகவே இருக்கும். இதனால், சர்க்கரை நோயாளிகள் தாராளமாகக் கீரை சாப்பிடலாம். முதியவர்கள், கர்ப்பிணிகள், வளரும் குழந்தைகள் கீரையை அன்றாட உணவுப் பட்டியலில் சேர்த்துக்கொள்வது அவசியம். பொதுவாக உடல்ரீதியான பிரச்னை இருப்பவர்கள், உணவில் கீரைகளைச் சேர்த்துக்கொள்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம். நார்ச் சத்து நிறைந்து இருப்பதால் கீரையைச் சாப்பிட்டவுடன் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இரும்புச் சத்து உடலில் சேர வேண்டும் எனில், வைட்டமின் சி வேண்டும். எல்லாக் கீரைகளிலுமே வைட்டமின் சி இருக்கும். ஆனால், கீரையை அதிக நேரம் வேகவைப்பதால் வைட்டமின் சி ஆவியாகிவிடும். எனவே, வேகவைத்த கீரை நன்றாக ஆறிய பின், அதில் எலுமிச்சம் பழச்சாற்றைப் பிழிந்தால், கீரையில் உள்ள இரும்புச்சத்தை நம்மால் கிரகித்துக்கொள்ள முடியும். பயிர் செய்யப்படும் விளை நிலங்களைப் பொறுத்து, கீரையின் சத்துக்களும் ருசியும் சிறிது மாறுபடும். கீரையை ஃப்ரிட்ஜில் வைத்துச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்


    முளைக்கீரை
    கலோரி, புரதம், மாவுச்சத்தின் அளவு மிகக் குறைவு. கால்சியம், இரும்புச் சத்து, நார்ச்சத்து நிறைந்து இருக்கிறது. சோடியம், பொட்டாஷியம், பீட்டா கரோட்டின் ஓரளவு உள்ளது. ஆக்ஸாலிக் ஆசிட் இதில் மிகவும் அதிகம். சிறுநீரகப் பிரச்னை, கல் அடைப்பு, அலர்ஜி இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்.
    சிறுகீரை
    கலோரி, புரதம், பாஸ்பரஸ் குறைவான அளவில் உண்டு. ஓரளவுக்கு கால்சியமும் உண்டு. இரும்புச்சத்து அதிக அளவில் இருக்கிறது. பீட்டா கரோட்டின், நார்ச் சத்துகளும் உண்டு. சிறு பருப்புடன் சிறு கீரை சேர்த்துச் செய்த சமையலை எல்லா வயதினரும் சாப்பிடலாம்.
    பாலக்கீரை
    கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து குறைந்த அளவே இருந்தாலும் ஃபோலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் சி மிக அதிகம். மேலும் இதில் ஆக்ஸாலிக் ஆசிட் மற்றும் யூரிக் ஆசிட் அதிகமாக இருப்பதால் சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். தைமின், ரிபோஃப்ளோமின் மற்றும் நார்ச்சத்து ஓரளவுக்கு இருக்கிறது. பீட்டா கரோட்டின் நிறைந்து இருக்கிறது. வேகவைத்து அரைத்தப் பாலக் கீரையை சப்பாத்திக்கு சைட்-டிஷ்ஷாக வாரம் ஒரு முறை சேர்த்துக்கொள்ளலாம்.


    Varagooran Narayanan

Working...
X