Announcement

Collapse
No announcement yet.

மங்களூர் பன் ரெசிபி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மங்களூர் பன் ரெசிபி

    மாலையில் நல்ல சுவையான அதே சமயம் மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட ஆசைப்பட்டால், கர்நாடகத்தில் உள்ள மங்களூரில் மிகவும் பிரபலமான மங்களூர் பன் என்று அழைக்கப்படும் வாழைப்பழ பூரியை செய்து சாப்பிடுங்கள். இந்த ரெசிபி செய்வது மிகவும் ஈஸி. மேலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சரி, இப்போது அந்த மங்களூர் பன் அல்லது வாழைப்பழ பூரியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

    தேவையான பொருட்கள்: மசித்த வாழைப்பழம் - 1/2 கப் சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன் தயிர் - 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன் மைதா - 2 கப் எள் - 1 டீஸ்பூன் ஓமம் - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு பௌலில் மசித்த வாழைப்பழத்தைப் போட்டு, அத்துடன் எண்ணெயை தவிர மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு மென்மையாக பூரி மாவு போன்று பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை 2-3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடாவதற்குள், பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி, அதனை தேய்த்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான மங்களூர் பன் அல்லது வாழைப்பழ பூரி ரெடி!!! இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது தேங்காய் சட்னியுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

    boldsky.com/recipes/sweets/mangalore-buns-

  • #2
    Re: மங்களூர் பன் ரெசிபி

    இதைப் படித்ததும், பழம்பூரி ஸ்டால் நினைவுக்கு வருகிறது. நம்மூரில் பாணிபூரிஸ்டால்[தள்ளுவண்டி] உள்ளது போல் கோவையில் பழம்பூரிஸ்டால் என்று உண்டு அதில் ஈவினிங் டைமில், ந்ம்மூர் வாழைக்காய் பஜ்ஜிபோல் நேந்த்ரம் பழ பஜ்ஜி செய்து தருவார்கள் பஜ்ஜி மாவில் காரத்திற்கு பதில் சிறிது இனிப்பு சேர்த்திருப்பார்களென நினைக்கிறேன் சூடாகச்சாப்பிட மிக சுவையாக இருக்கும்

    Comment

    • #3
      Re: மங்களூர் பன் ரெசிபி

      Thanks for the recipe mama
      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

      http://eegarai.org/apps/Kitchen4All.apk

      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

      Dont work hard, work smart

      Comment

      • #4
        Re: மங்களூர் பன் ரெசிபி

        Originally posted by soundararajan50 View Post

        We also tasted this 'banana fruit bajji' in Sowdi Mama

        - - - Updated - - -

        • #5
          Re: மங்களூர் பன் ரெசிபி

          Originally posted by krishnaamma View Post
          We also tasted this 'banana fruit bajji' in Sowdi Mama

          - - - Updated - - -

          We also tasted this 'banana fruit bajji' in Sowdi Mama
          எங்கெங்கு மலயாளிகள் அதிகம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் பழம்பூரி,சக்கப்ரதமன் & நேந்திரம் சிப்ஸ் நிச்சயமாகக் கிடைக்கும்மா

          Comment

          • #6
            Re: மங்களூர் பன் ரெசிபி

            Originally posted by soundararajan50 View Post
            எங்கெங்கு மலயாளிகள் அதிகம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் பழம்பூரி,சக்கப்ரதமன் & நேந்திரம் சிப்ஸ் நிச்சயமாகக் கிடைக்கும்மா
            ம்... ரொம்ப சரி மாமா

            Working...
            X