ரொம்ப அருமையான recipe இது. எங்க வீட்டிலும் எங்க உறவினர் மற்றும் நண்பர்கள் வட்டாரத்திலும் மிகவும் பிரபலம்.
முதலில் பொடி செய்யும் முறையை பார்போம். இதை நான் APP – that is ‘ALL PURPOSE POWDER’ என் அழைப்பது வழக்கம். இதை கொண்டும் பல டிஷ் கள் தயாரிக்கலாம்.
தேவையானவை:
500gm தனியா
500gm கடலை பருப்பு
250gm குண்டு மிளகாய்
பெருங்காயம் – ஒரு சின்ன துண்டு
கொஞ்சம் எண்ணெய் (அரை ஸ்பூன் )

செய்முறை :
பெருங்காயத்தை துளி எண்ணெயில் பொரிக்கவும்.
தனி எ எடுத்துவைக்கவும்
அதே வாணலில் மற்றவற்றை போட்டு கருகாமல் வறுக்கவும்.
நன்கு ஆறினதும் மிக்சியில் போட்டு பொடிக்கவும்.
உங்கள் APP தயார்.

குறிப்பு: இந்த பொடி யை கொண்டு திடீர் புளியோதரை , புளி கூடு, அரைத்துவிட்ட சாம்பார், கத்தரிக்காய் எண்ணெய் குழம்பு , உருளை, வாழை மற்றும் கதிதரிகாய் பொடி போட்ட காய், தக்காளி சாதம் இன்னும் பல dish கள் செய்யலாம்.