Announcement

Collapse
No announcement yet.

கிள்ளு குழம்பு - வெடிக்க விட்ட குழம்பு

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கிள்ளு குழம்பு - வெடிக்க விட்ட குழம்பு

    கிள்ளு குழம்பு - வெடிக்க விட்ட குழம்பு

    இந்த குழம்பும் எங்க விட்டில் 'ஹிட்' இந்த குழம்புடன் வதக்கின கறியமுதுகள் ரொம்ப நல்லா இருக்கும். அதாவது உருளைக்ழங்கு அல்லது வாழைகாய் வதக்கல் ரொம்ப நல்லா இருக்கும்.

    தேவையானவை :

    1 கப் வெந்த துவரம் பருப்பு
    10 - 12 மிளகாய் வற்றல்
    2 டேபிள் ஸ்பூன் புளி பேஸ்ட் அல்லது 1 கப் புளி ஜலம்
    1/2 டீ ஸ்பூன் பெருங்காயப்பொடி
    கடுகு 1 டீ ஸ்பூன்
    உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன்
    1 டீ ஸ்பூன் வறுத்து அரைத்த வெந்தய பொடி
    1 டீ ஸ்பூன் மஞ்சள் பொடி
    கறிவேப்பிலை கொஞ்சம்
    உப்பு
    தாளிக்க எண்ணெய்

    செய்முறை :

    ஒரு ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விடவும்.
    கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் போட்டு வதக்கவும்.
    பிறகு கறிவேப்பிலை மற்றும் மஞ்சள் பொடி போடவும்.
    1 டம்பளர் தண்ணீர் விட்டு புளி பேஸ்ட் ஐ போடவும்.
    அல்லது புளி ஜலம் விடவும்.
    உப்பு போடவும்.
    மெந்தயபொடி மட்டும் பெருங்கயப்பொடி போடவும்.
    வெந்த பருப்பை நன்கு கரைத்து குழம்பில் விடவும்.
    நன்கு கிளறிவிடவும்.
    நன்கு கொதித்ததும் இறக்கவும்.
    ரொம்ப காரம் இல்லாமல் நல்லா இருக்கும்.

    இந்த குழம்பில் "தானாக ' குழம்பு வடாம் "வறுத்துப்போட்டல் ரொம்ப நன்னா இருக்கும்.
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart
Working...
X