Announcement

Collapse
No announcement yet.

மஞ்சுரியன் தோசை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மஞ்சுரியன் தோசை

    தேவையானவை :

    1 கப் உளுத்தம் பருப்பு
    4 கப் அரிசி
    1 டீ ஸ்பூன் வெந்தயம்
    2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
    10 -12 காரட்
    20 -25 பீன்ஸ்
    1/2 கப் பச்சை பட்டாணி
    5-6 பச்சை மிளகாய் (நறுக்கியது )
    சிறிதளவு இஞ்சி துருவவும்
    2 ஸ்பூன் சோள மாவு
    1/4 ஸ்பூன் அஜினோமோடோ
    2 ஸ்பூன் சோயா சாஸ்
    1 ஸ்பூன் சில்லி சாஸ்
    கொத்துமல்லி சிறிதளவு
    உப்பு
    எண்ணெய்

    செய்முறை :

    உளுத்தம் பருப்பு, அரிசி, வெந்தயம் மற்றும் கடலை பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் 1 -2 மணி நேரம் ஊறவைக்கணும்.
    பிறகு அவற்றை நன்றாக அரைக்கவும்.
    பிறகு அரைத்த மாவை 6 -8 மணி நேரம் வரை புளிக்க விடவும்.
    காரட் மற்றும் பீன்ஸ் சை பொடியாக நறுக்கி, பட்டாணியுடன் துளி உப்பு போட்டு நன்றாக வேகவைக்கவும்.
    வாணலி இல் சிறிதளவு எண்ணெய் விட்டு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்க்கவும்.
    பிறகு வேகவைத்த காரட் , பீன்ஸ் மற்றும் பச்சை பட்டாணி, சோயா சாஸ், அஜினமொடோ, சில்லி சாஸ் மற்றும் சிறிதளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
    சோள மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைக்கவும்.
    பிறகு இந்த சோள மாவை, வாணலி இல் உள்ள மஞ்சுரியனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும்.
    இறுதியாக பொடியாக நறுக்கிய வெங்காய தாள் மற்றும் கொத்துமல்லி சேர்த்து இறக்கவும்.
    இப்பொழுது மஞ்சுரியன் தயாராகி விட்டது.
    பிறகு தோசை கல்லை அடுப்பில் போட்டு தோசை வார்க்கவும்.
    ஒரு பக்கம் வெந்ததும் மறு பக்கம் திருப்பி போட்டு, மீண்டும் அதை பழைய படி போட்டு அதன் மேல் மஞ்சுரியன் வைத்து மூடி ( மசாலா போல ) எடுக்கவும்.
    இதை அப்படியே சாப்பிடலாம் தொட்டுக்கொள்ள எதுவும் வேண்டாம்
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart
Working...
X