Announcement

Collapse
No announcement yet.

முந்திரி ரவா தோசை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • முந்திரி ரவா தோசை

    தேவையானவை :

    கோதுமை மாவு 1 கப்
    அரிசி மாவு 2 கப்
    ரவை 3 கப்
    பச்சை மிளகாய் 3 - 4
    கடுகு 1/2 ஸ்பூன்
    சீரகம் 1/2 ஸ்பூன்
    மிளகு 1 டீ ஸ்பூன்
    தண்ணியான மோர் 2 கப்
    முந்திரி 1/2 கப் உடைத்தது
    கறிவேப்பிலை
    உப்பு
    எண்ணெய் தேவையான அளவு

    செய்முறை :

    கோதுமை மாவு, அரிசி மாவு மற்றும் ரவை , இவற்றை நன்றாக மோர் விட்டு கரைக்கவும்.( தோசை மாவு பதத்திற்கு).
    பச்சை மிளகாவை பொடி பொடியாக நறுக்கவும்.
    வாணலி இல் சிறிது எண்ணெய் விட்டு கடுகு , பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை தாளித்து , தோசை மாவில் போடவும்.
    முந்திரி போடவும்; சீரகம் ,மிளகு பொடித்து போடவும்.
    இந்த தோசை சாதாரண ரவா தோசையை விட 'மொறு மொறு ' வென்று இருக்கும்.
    எல்லா ரவா தோசைகளுக்கும் தேங்காய் சட்னி ரொம்ப நல்லா இருக்கும்.
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart
Working...
X