Announcement

Collapse
No announcement yet.

சாகு - " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு 

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • #16
    Re: சாகு - " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு

    Originally posted by P.S.NARASIMHAN View Post
    மாமிக்கு ஏதோ கோபம் போல இருக்கு. எனக்கு பதில் போடமாட்டார் போல இருக்கு. நான் என்ன தவறு செய்தேன் .ஏன் மாமி சொன்னால் தானே தெரியும் .இப்படி கம் நு இருந்தால் எப்படி

    அட கிருஷ்ணா..............எனக்கு ஏன் கோபம் மாமா, அதுவும் உங்க மேல.............கண்டிப்பாக கிடையாது, நான் இப்போ சௌதி இல் இருக்கேன், 'இவருக்கு' வெள்ளி சனி லீவு.அது தான் வரலை. இதோ இப்பவே ஒரு கொத்சு போட்டுடறேன். பாக்கி அப்புறம் போடறேன்.
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment

    • #17
      Re: சாகு - " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு

      Originally posted by ggmoorthyiyer View Post
      மாங்காய் கொதுசு :
      -------------------------------

      மாங்காய் --- 1
      தேங்காய் --- 1
      தயிர் --- 1 கப்
      நெய் --- 1 டீஸ்பூண்
      தாழிதம் --- மிளகாய் வத்தல் 2
      கடுகு
      எண்ணை

      செய்முறை :
      தேங்காய் + மாங்காய் இரண்டையும் துருவி, (மாங்காய் தோல் சீவி )
      நெய் விட்டு வதக்கவும் . தயிர் நன்றாக தூக்கி அடித்து கூழ் போல் ஆக்கவும்.
      வதக்கியதை தயிருடன் சேர்க்கவும். உப்பு சேர்க்கவும்.
      தாழிதம் செய்யவும்.

      அடை, கோதுமை தோசை,உப்புமா, இவற்றுக்கு சூப்பர் காம்பினேஷன்.

      ம்... படிக்கவே நன்னா இருக்கு மாமா, செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன் .நன்றி !
      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

      http://eegarai.org/apps/Kitchen4All.apk

      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

      Dont work hard, work smart

      Comment

      • #18
        Re: சாகு - " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு

        கத்திரிக்காய் தக்காளி கொஸ்து

        தேவையானவை :

        விதை இல்லாத பிஞ்சு கத்திரிக்காய் - 5 - 6 (பொடியாக நறுக்கவும்)
        தக்காளி - 2 (விதை எடுத்து பொடியாக நறுக்கவும் )
        எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
        கடுகு - 1 டீஸ்பூன்
        சீரகம் - 1 டீஸ்பூன்
        கறிவேப்பிலை - சிறிது
        மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
        மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
        உப்பு - தேவையான அளவு
        புளிபேஸ்ட் - 1 டீ ஸ்பூன்

        செய்முறை:

        ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
        பின்னர் அதில் கத்திரிக்காய் மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக வதக்கவும்.
        பின்பு அதில் உப்பு, மிளகாய் பொடி மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து கிளறி, பின் புளிபேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கினால், கத்திரிக்காய் தக்காளி கொஸ்து ரெடி!!!

        விருப்பம் போல எதுக்கு வேண்டுமானாலும் தொட்டுக்கலாம். அல்லது சாதத்திலும் கலந்து சாப்பிடலாம்
        Last edited by krishnaamma; 24-05-15, 10:40.
        என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

        http://eegarai.org/apps/Kitchen4All.apk

        http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

        Dont work hard, work smart

        Comment

        • #19
          சுட்ட கத்தரிக்காய் கொத்ஸு

          சுட்ட கத்தரிக்காய் கொத்ஸு

          தேவையானவை:

          ஒபர்ஜினி என்று சொல்லப்படும் குண்டு கத்தரிக்காய் 1 பெரியது
          புளி பேஸ்ட் 1 டீ ஸ்பூன்
          மிளகாய் வற்றல் 4 - 5
          எண்ணை 4 டீ ஸ்பூன்
          கடுகு 1/ 2 ஸ்பூன்
          உளுத்தம் பருப்பு 1/2 ஸ்பூன்
          கருவேப்பிலை கொஞ்சம்
          உப்பு தேவையான் அளவு
          பெருங்காயபொடி 1/4 ஸ்பூன்

          செய்முறை.

          கத்தரிக்காயை அலம்பி துடைத்து, அதன் மேலே கொஞ்சம் எண்ணெய் தவடவும்.
          காஸ் அடுப்பில், மெல்லிய தணலில் நன்றாக சுட்டுக்கொள்ளவும்.
          எல்லா பக்கமும் நன்கு வேகணும்.
          பக்கத்தில் ஒரு பேசினில் தண்ணி வைத்துக்கொண்டு, சுட்ட கத்தரிக்காயை அதில் போடவும்.
          ஆறினதும் தோலை எடுக்கவும்.
          நன்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
          புளி பேஸ்ட் மற்றும் உப்பு போட்டு, கொஞ்சம் தண்ணிர் விட்டு கரைக்கவும்.
          வாணலி இல் அல்லது இலுப்பக்கரண்டி இல் கடுகு, உளுந்து, பெருங்காயபொடி, கறிவேப்பிலை தாளித்து இதன் மீது கொட்டவும்.
          அருமையான சுட்ட கத்தரிக்காய் கொத்சு ரெடி.
          அரிசி உப்புமாவுடன் ரொம்ப நல்லா இருக்கும்.

          குறிப்பு: உப்புமா கொழுக்கட்டைக்கும் இது நல்லா இருக்கும்

          என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

          http://eegarai.org/apps/Kitchen4All.apk

          http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

          Dont work hard, work smart

          Comment

          • #20
            Re: சாகு - " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு

            Originally posted by ggmoorthyiyer View Post
            பாராட்டுக்கு நன்றி. அடுத்த கொத்சு தொடரும். ggmoorthyiyer

            போடுங்கோ .போடுங்கோ....படிக்க , பண்ணி பார்க்க காத்திருக்கேன் மாமா
            என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

            http://eegarai.org/apps/Kitchen4All.apk

            http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

            Dont work hard, work smart

            Comment

            • #21
              Re: சாகு - " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு

              Originally posted by P.S.NARASIMHAN View Post
              மாமா நீங்க. போ ட்ட மாங்கா கொத்சு சூப்பர் .நானே பண்ணிட்டேன் . இதை எல்லா பலகாரங்களுக்கும் உபயோகபடுத்தலாம் .ரொம்ப தேங்க்ஸ் மாமா
              நரசிம்ஹன் மாமா, 2 கத்தரிக்காய் கொத்சு போட்டிருக்கேன் பாருங்கோ, இன்னும் சில கொத்சுகள் நாளை போடுகிறேன் .ஓகே வா?
              என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

              http://eegarai.org/apps/Kitchen4All.apk

              http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

              Dont work hard, work smart

              Comment

              • #22
                Re: சாகு - " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு

                வழுதலங்காய் என்றால் நீள கத்திரிக்காய் - பச்சை கலரில் இருக்கும். இதையும் சுட்டு - சுடுவதறுக்கு முன்பு லைட் ஆக தேங்காய் எண்ணை தடவி - தோல் எடுத்து விட்டு - கொத்சு தயார் செய்யனும். ggmoorthyiyer

                Comment

                • #23
                  Re: சாகு - " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு

                  Originally posted by ggmoorthyiyer View Post
                  வழுதலங்காய் என்றால் நீள கத்திரிக்காய் - பச்சை கலரில் இருக்கும். இதையும் சுட்டு - சுடுவதறுக்கு முன்பு லைட் ஆக தேங்காய் எண்ணை தடவி - தோல் எடுத்து விட்டு - கொத்சு தயார் செய்யனும். ggmoorthyiyer
                  ஒ.சரி சரி........ஆத்தூர் கத்தரிக் காய் என்றும் சொல்லுவா
                  என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                  http://eegarai.org/apps/Kitchen4All.apk

                  http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                  Dont work hard, work smart

                  Comment

                  Working...
                  X