Announcement

Collapse
No announcement yet.

"மசால் தோசை"

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • "மசால் தோசை"

    ஸோ, மேலே சொன்ன மாவு தான் பேஸ். இனி வரும் குறிப்புகளில் அந்த தோசை மாவை வைத்து எப்படி பல விதங்களில் தோசை வார்க்கலாம் என்று பார்க்கலாம்.
    முதலில் எல்லோரும் விரும்பும் "மசால் தோசை" மசால் தோசை செய்ய முதலில் நாம் மசாலா செய்து கொள்ள வேண்டும்.

    தேவையானவை :

    தோசை மாவு 2 கப்
    வேகவைத்த உருளைக்கிழங்கு 2 -3 ( உதிர்த்து வைத்துக்கொள்ளவும்.)
    பச்சைமிளகாய் 4 -5 (பொடியாக நறுக்கவும் )
    இஞ்சி துருவியது 1 டேபிள் ஸ்பூன்
    கொத்துமல்லி, கறிவேப்பிலை கொஞ்சம்

    தாளிக்க :

    கடுகு 1 டீ ஸ்பூன்
    உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்
    கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
    மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
    எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்

    உப்பு
    தோசை வார்க்க எண்ணெய் மற்றும் நெய் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.

    செய்முறை :

    வாணலி இல் எண்ணெய் வைத்து தாளிக்கும் பொருட்களை போட்டு தாளிக்கவும்.
    நறுக்கிவைத்துள்ள பச்சை மிளகாயை போடவும்.
    கொஞ்சம் வதங்கினதும், உதிர்த்து வைத்துள்ள உருளைக்கிழங்கை போடவும்.
    நன்கு கிளறவும்.
    கொஞ்சம் தண்ணீர் விட்டு உப்பு போட்டு கிளறவும்.
    மசாலா நன்கு சேர்ந்து வந்ததும், கொத்துமல்லி கறிவேப்பிலை போட்டு கிளறி இறக்கவும்.
    அடுப்பில் தோசைகல்லை போட்டு மெல்லியதாக தோசை வார்க்கவும்.
    கலந்து தயாராய் வைத்துள்ள எண்ணெய் மற்றும் நெய் யை விட்டு இருபுறமும் மொறுமொறுப்பாக எடுக்கவும்.
    பிறகு அடுப்பை சின்னதாக்கி விட்டு , மசாலாவை ஒரு ஸ்பூன் எடுத்து தோசை இல் தடவவும்.
    பிறகு அதை மடித்து பரிமாறவும்.
    இதற்கு தேங்காய் சட்னி, சாம்பார் எல்லாமே நல்லா இருக்கும்.

    குறிப்பு: மசாலா வைக்கும் போது அத்துடன் ஒரு ஸ்பூன் வெண்ணை வைத்து மடித்தால், பட்டர் மசாலா தோசை ஆகிவிடும்
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart
Working...
X