தோசை............இது பிடிக்காதவாளே இருக்க மாட்டா என்பது என் எண்ணம் இந்த திரி இல் பல வித தோசைகளை பார்ப்போம். தோசை என்பது அரைத்து செய்வது மட்டும் அல்லாது ரவா தோசை, மைதா தோசை போல கரைத்தும் செய்யப்படுகிறது. மேலும் அடை போல கனமாக காரமாகவும் வார்க்கிறோம். இலுப்ப சட்டிகளில் வார்க்கப்படும் ஆப்பம் மற்றும் தவலைகளில் வார்க்கப்படும் தவலை தோசைகளும் தோசை பிரிவில் அடக்கம்.
வெல்ல தோசைகளும் , தேங்காய் தோசைகளும், aval தோசைகளும், மசால் தோசைகளும் இதில் அடக்கம்
மேலும் தோசைகள் எண்ணெய், நெய், வெண்ணெய் மற்றும் எண்ணெய் மற்றும் நெய் கலவை போன்றவற்றால் செய்யப்படுகிறது. எண்ணையே விடாமல் துடைத்து வார்க்கும் தோசைகளும் உண்டு. மூடி வைத்து வார்க்கும் தோசைகளும் உண்டு.
நான் இவை எல்லாவற்றுக்கான குறிப்புகளை இங்கே போடுகிறேன் உங்கள் பார்வைக்காக
முதலில் தோசை மாவு . இது நல்லா இருந்தாத்தான் நாம் வார்க்கும் தோசையும் நல்லா வரும். எங்க வீடுகளில் எப்பவும் பச்சரிசி தோசை தான். எனவே,
4 ஆழாக்கு பச்சரிசி
1 ஆழாக்கு உளுந்து
தனித்தனியாக 2 - 3 மணிநேரம் ஊர வைத்து மிக்சி அல்லது கிரைண்டர், ஆட்டுக்கல் என எதிலாவது அரிசி பருப்பு இரண்டையும் தனித்தனியாக நன்கு அரைக்கவும்.
உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
ஒரு 8 - 10 மணிநேரம் கழித்து தோசை வார்க்கலாம்.