Announcement

Collapse
No announcement yet.

பகோடா.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பகோடா.

    கிரிஷ்ணம்மா மாமி,
    இப்பொ இந்த பகோடா பத்தி தனியா போஸ்ட் ஆரம்பிச்சுப்ருக்கேன். மெது பகோடான்னு மின்னல்லாம்
    ஒட்டல்ல போடுவா. மிட்டாய் கடையிலேயே கிடைக்கும். தொட்டா பொடிபொடியாகிவிடும். இப்ப எல்லாம் அந்த மாதிரி பகோடா கிடைக்கவில்லயே. அந்த மாதிரி இப்ப செய்யமுடியுமா? நன்னா சொல்லுங்கோ.

  • #2
    Re: பகோடா.

    http://www.brahminsnet.com/forums/showthread.php/1780-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-!



    மாமா, உங்கள் சந்தேகங்களை தனி thread இல் கேட்பதைவிட, மேலே உள்ள லிங்க் இல் (சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்று ஒரு 'sticky thread ' இருக்கு பாருங்கோ) கேட்டால் எல்லோருக்கும் உபயோகமாக இருக்குமே என்றாலும் இங்கு பதில் போடுகிறேன், அங்கும் இதையே போடுகிறேன் சரியா ?
    அப்புறம், நீங்க பெரியவா, என்னை க்ருஷ்ணாம்மா என்றே கூப்பிடலாம்
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment


    • #3
      Re: பகோடா.

      கடை இல் கிடைகாட்டா என்ன மாமா? நாமே ஆத்துல தாராளமாய் பண்ணலாம். நான் இங்கு போடுகிறேன் அது தானா பாருங்கோ
      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

      http://eegarai.org/apps/Kitchen4All.apk

      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

      Dont work hard, work smart

      Comment


      • #4
        மெது பக்கோடா

        தேவையானவை :

        அரிசி மாவு ஒரு கப்
        கடலை மாவு அரை கப்
        இஞ்சி துருவியது ஒரு ஸ்பூன்
        நெய் இரண்டு டேபிள் ஸ்பூன்
        சோடா உப்பு அரை ஸ்பூன்
        உப்பு
        பெருங்கயப்பொடி
        கறிவேப்பிலை
        பொரிக்க எண்ணெய்
        பச்சை மிளகாய் தேவையானால்

        செய்முறை :

        ஒரு பெரிய பேசினில் நெய் மற்றும் சோடா உப்பை போட்டு நன்கு நுரை வரும் வரை தேய்க்கவும் .
        பிறகு அதில் மாவுகளை போட்டு நன்கு அழுத்தி கலக்கவும்.
        தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
        பிறகு இஞ்சி துருவல், பெருங்காயம், பச்சைமிளகாய், மற்றும் கறிவேப்பிலை போட்டு பிசையவும்.
        மாவு கொஞ்சம் மெத் என்று இருக்கணும்.
        வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு மாவை கையில் எடுத்து கிள்ளி கிள்ளி போடவும்.
        நன்கு பவுன் கலராய் எடுக்கவும்.
        'மெது பகோடா' ரெடி.

        குறிப்பு:1. ஜானவாசத்தில் இந்த பகோடா தான்போடுவா with காசி அல்வா

        2. இந்த பக்கோடா பண்ணும்போது, மாவு கலக்கும்போது, டால்டா அல்லது நெய் அல்லது அடுப்பில் காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெய் ஏதாவது ஒன்றை விட்டு பிசைவதால் பகோடா நல்ல கரகரப்பாக வரும். இது எல்லா பக்கோடாக்களுக்கும் பொருந்தும்.

        3. மேலும் சோடா உப்பு போடுவதால் நல்லா உதிர் உதிராக வரும்.

        என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

        http://eegarai.org/apps/Kitchen4All.apk

        http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

        Dont work hard, work smart

        Comment


        • #5
          Re: பகோடா.

          ரொம்ப சரி.இனிமேல அந்த லிங்க்லேயே போடரேன்.

          Comment


          • #6
            Re: பகோடா.

            Originally posted by P.S.NARASIMHAN View Post
            ரொம்ப சரி.இனிமேல அந்த லிங்க்லேயே போடரேன்.
            ஆத்திலே நேத்து பகோடா நீங்க சொன்ன மாதிரி போடச்சொன்னேன் . ஒரு சமையல்கார மாமி நெய்யுக்க பதிலா டால்டா போட்டு பிசையுங்கோன்னும் சொன்னா. அப்படி செய்து பார்தர்ப்போதும் நன்னா வந்தது.ரொம்ப நன்றி மாமி.

            Comment


            • #7
              Re: பகோடா.

              Originally posted by P.S.NARASIMHAN View Post
              ஆத்திலே நேத்து பகோடா நீங்க சொன்ன மாதிரி போடச்சொன்னேன் . ஒரு சமையல்கார மாமி நெய்யுக்க பதிலா டால்டா போட்டு பிசையுங்கோன்னும் சொன்னா. அப்படி செய்து பார்தர்ப்போதும் நன்னா வந்தது.ரொம்ப நன்றி மாமி.
              ஓ... சூப்பர் மாமா, ரொம்ப சந்தோஷம் நன்றி
              என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

              http://eegarai.org/apps/Kitchen4All.apk

              http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

              Dont work hard, work smart

              Comment

              Working...
              X