Announcement

Collapse
No announcement yet.

மோர் களி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மோர் களி

    இதில் பலவகைகள் இருக்கு ஒவ்வொன்றாக பார்போம்.

    தேவையானவை :

    அரிசி மாவு ஒரு கப்
    பச்சை மிளகாய் 4 - 5
    மோர் ஒரு கப்
    உப்பு
    கடுகு கொஞ்சம்
    உளுந்து கொஞ்சம்
    பெருங்காயம் கொஞ்சம்
    எண்ணெய் கொஞ்சம்
    கறிவேப்பிலை கொஞ்சம்

    செய்முறை :

    முதலில் மாவையும் மோரையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கரைக்கவும் .
    உப்புபோடவும்.
    வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்கயப் பொடி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் போட்டு தாளிக்கவும்.
    கரைத்து வைத்துள்ள மாவை கொட்டி கிளறவும்.
    அடுப்பை சின்னதாக வைக்கவும்.
    மாவு வேகும் வரை அப்ப அப்ப கிளறி விடவும்.
    நன்கு வெந்து பந்து போல உருண்டு வந்ததும் இறக்கவும்; கொஞ்சம் தள தள வென்று இருக்கும் போதே இறக்கிடணும்.
    அவ்வளவுதான், சுவையான மோர் களி தயார்

    குறிப்பு: பச்சை மிளகாய்க்கு பதில் மோர்மிளகாய் அல்லது சிவப்பு மிளகாய் உபயோகிக்கலாம் .
    வேண்டுமானால் மாவு கரைக்கும் போது ஒரு சிட்டிகை சோடா உப்பு போட்டுக்கலாம்.
    Last edited by krishnaamma; 15-06-13, 15:45.
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

  • #2
    கோதுமை மோர் களி

    தேவையானவை :

    கோதுமை மாவு ஒரு கப்
    மிளகாய் வற்றல் 4 - 5
    மோர் ஒரு கப்
    உப்பு
    கடுகு கொஞ்சம்
    உளுந்து கொஞ்சம்
    பெருங்காயம் கொஞ்சம்
    எண்ணெய் கொஞ்சம்
    கறிவேப்பிலை கொஞ்சம்

    செய்முறை :

    முதலில் மாவையும் மோரையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கரைக்கவும் .
    உப்புபோடவும்.
    வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்கயப் பொடி, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் போட்டு தாளிக்கவும்.
    கரைத்து வைத்துள்ள மாவை கொட்டி கிளறவும்.
    அடுப்பை சின்னதாக வைக்கவும்.
    மாவு வேகும் வரை அப்ப அப்ப கிளறி விடவும்.
    நன்கு வெந்து பந்து போல உருண்டு வந்ததும் இறக்கவும்.
    அவ்வளவுதான், சுவையான கோதுமை மோர் களி தயார்.
    தொட்டுக்கொள்ள பருப்பு சாம்பார் நல்லா இருக்கும்

    குறிப்பு: மிளகாய் வற்றலுக்கு பதில் மோர்மிளகாய் உபயோகிக்கலாம் அதுவும் நல்லா இருக்கும்.
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment

    Working...
    X