Announcement

Collapse
No announcement yet.

மாங்காய் வத்தல் ஊறுகாய்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மாங்காய் வத்தல் ஊறுகாய்

    இந்த ஊறுகாய் 'இன்ஸ்டன்ட் ஊறுகாய்' காய்ந்த மாங்காய் இருந்தால் போறும், சில நிமிடங்களில் தயாரிக்கலாம்.

    தேவையானவை:

    காய்ந்த மாங்காய் துண்டங்கள் - 1 கப்
    மிளகாய் பொடி - 4 டீ ஸ்பூன்
    தேவையானால் கொஞ்சமே கொஞ்சம் உப்பு
    வறுத்து பொடித்த வெந்தய பொடி 1/4 டீ ஸ்பூன்
    பெருங்காயப்பொடி 1/2 டீ ஸ்பூன்
    தாளிக்க கடுகு மற்றும் எண்ணெய்

    செய்முறை :

    மாங்காய் வற்றலை ஒரு 5 நிமிஷம் வென்னீரில் போடவும்.
    தண்ணிரை வடி கட்டவும்.
    வாணலி இல் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து மாங்காய் மேல் கொட்டவும்.
    அதிலேயே மிளகாய் பொடி, பெருங்காயப்பொடி, வெந்தயபொடி மற்றும் உப்பு போட்டு குலுக்கவும்.
    சுவையான ஊறுகாய் தயார்.

    - - - - - - - -- - - - - - - - - - - - - - - - - - - -- - - - - -- - - - - - -- - - - -- - - - -- - - - -- - - - - - - - - -- - - - -- - - -- - - -- - - --

    மாங்காய் வத்தல் - நல்ல புளிப்பு மாங்காய் களில் இதை போடலாம். நன்கு காய வைத்து வைத்துக்கொண்டால், மாங்காய் சீசன் இல்லாத போது, இந்த வத்தலை உபயோகித்து , குழம்பு மற்றும் ஊறுகாய் போடலாம். முதலில் மாங்காய் வத்தல் போடும் முறையை பார்ப்போம்.

    தேவையானவை:

    புளிப்பான மாங்காய் தேவையான அளவு.
    உப்பு

    செய்முறை:

    மாங்காயை நன்கு அலம்பி துடைக்கவும்,
    பிறகு அதை செதில் செதிலாக வெட்டவும்.
    உப்பு போட்டு குலுக்கி வைக்கவும்.
    'சல சல' வென தண்ணிர் விட்டுக்கொள்ளும்.
    மாங்காய் துண்டங்களை மட்டும் தினமும் வெயிலில் வைக்கவும்.
    மாலை இல் மீண்டும் உப்பு நீரில் போடவும்.
    இப்படி யே உப்பு நீர் முழுவதும் வற்றும் வரை செய்யவும்.
    பிறகும் மாங்காய் துண்டங்களை வெயிலில் நன்கு காய வைத்து எடுத்து பத்திரப்படுத்தவும்.
    குழம்பு செய்வதும் ஊறுகாய் போடுவதும் பின் வரும் பதிவுகளில்
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart
Working...
X