தேவையான பொருட்கள்:
புளிப்பான மாங்காய் - 10
மிளகாய்ப் பொடி - 200 கிராம்
உப்பு
வெந்தயம் - 100 கிராம்
வெள்ளை கொத்து கடலை 1/2 கிலோ
எண்ணெய் 1 கிலோ
செய்முறை:
இந்த ஊறுகாய்க்கு எல்லாமே பச்சையாகத்தான் போடணும்.
மாங்காயை நன்கு அலம்பி , துடைத்து, கொட்டையும் சேர்த்து, ஒரு காயை 16 துண்டுகளாக நறுக்க வேண்டும்.
எல்லா துண்டுகளுமே ஓட்டுடன் இருந்தால் நல்லது.
உள்ளிருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்றாகத் துணியால் துடைக்கவும்.
சுத்தமாக உலர்ந்த ஜாடியில் அல்லது ஒரு பெரிய பிளாஸ்டிக் பக்கெட்டில் மாங்காய் துண்டங்களை போடவும்.
அதன் மேலே உப்பு மற்றும் மிளகாய் பொடி போடவும்.
நன்கு குலுக்கவும்.
மாங்காய் துண்டங்களின் மேல் உப்பும் மிளகாய் பொடியும் நன்கு ஒட்டி இருக்கணும்.
இப்போது வெந்தயம் மற்றும் கொத்து கடலையை போடணும்; நன்கு குலுக்கணும்.
இப்போது எண்ணெய் விடணும், மாங்காய் இன் மேலே எண்ணெய் மிதக்கும்படி இருக்க வேண்டும். ஈரம், காற்று படக் கூடாது.
நன்கு மூடி வைக்கணும்.
தினமும் நன்கு 'அடி ஓட்ட' கிளறி விடணும்.
ஒரு வாரம் கழித்து உபயோகிக்க துவங்கலாம்.
அருமையான ஊறுகாய் இது.
தயிர் சாதம் என்று இல்லை பருப்பு சாம்பார் சாதம் மற்றும் பருப்பு பொடி சாதத்துக்கு கூட தொட்டுக்கலாம்; ஆவக்காய் சாதமே சாப்பிடலாம்
இந்த வருடம்போட்ட புதிய ஆவக்காய் இது