Announcement

Collapse
No announcement yet.

அவல் பாயசம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அவல் பாயசம்

    இந்த நாளில் அவல் பாயசம் அலல்துஅக்கார அடிசல் அலல்து ஏதாவது ஒரு பாயசம் பண்ணலாம். அவல் கிருஷ்ணருக்கு ரொம்ப பிடித்தது என்பதால் அதையே பண்ணலாம். அதை அவல் கேசரியாகவும் பண்ணலாம்

    முதலில் அவல் பாயசம் :

    தேவையானவை:

    மிஷின் (மெல்லிசு ) அவல் 1 /2 கப்
    சக்கரை 3/4 கப்
    ஏலப்பொடி 1/3 ஸ்பூன்
    முந்திரி திராக்ஷை 1 டேபிள் ஸ்பூன்
    நெய் 1 டேபிள் ஸ்பூன்
    பால் 1 கப்

    செய்முறை:

    ஒரு உருளி இல் நெய் விட்டு முந்திரி திராக்ஷை வறுக்கவும்.
    அதிலேயே அவலை போட்டு வறுகக்வும் .
    அவல் நன்கு வறுபட்டதும், பாலை விடவும்.
    வேண்டுமானால் தண்ணீர் சேர்க்கலாம்.
    அவல் நன்கு வெந்ததும் சக்கரை சேர்க்கவும்.
    ஏலப்பொடி போட்டு கிளறி இறக்கவும்.

    குறிப்பு: கெட்டி அவல் உபயோகிப்பதானால் அதை பலமுறை நன்கு களைந்து அலசனும்.அப்புறம் பிழிந்து வடியப்போடனும். அப்பவும் வறுக்க முடியாது எனவே மெல்லிசு அவல் தான் பாயசம் மற்றும் கேசரிக்கு சிறந்தது. கெட்டி அவல் கொண்டு, அவல் சக்கரை செய்யலாம், வெல்ல அவல் செயலாம் . மிஷின் அவல் வெள்ளையாக குப்பை இல்லாமல் இருக்கும். கெட்டி அவலில் தவிடு இருக்கும்.
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart
Working...
X