Announcement

Collapse
No announcement yet.

Gojju avalakki

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Gojju avalakki

    காலையில் ஏதேனும் சுவையான ருசியில் ஒரு வெரைட்டி ரைஸ் செய்ய வேண்டுமென்று நினைப்பவர்கள், கர்நாடகாவில் செய்யப்படும் ஒரு ரெசிபியான கெஜ்ஜூ அவலக்கி சிறந்ததாக இருக்கும். இந்த ரெசிபி அவலை வைத்து எளிதில் செய்யப்படும் வகையில் இருக்கும். இப்போது அந்த கொஜ்ஜூ அவலக்கியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

    தேவையான பொருட்கள்: அவல் - 1 பெரிய கப் புளி தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன் வெல்லத் தூள் - 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் சாம்பார் தூள் - 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு கடுகு - 1 டீஸ்பூன் வேர்க்கடலை - 1/2 கப் பெருங்காயத் தூள் - 1 பெரிய சிட்டிகை கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவையான அளவு

    செய்முறை: முதலில் அவலை லேசாக மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். (பொடி செய்துவிட வேண்டாம்.) பின் அதனை நீரில் கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் அவலைப் போட்டு, அதில் புளித் தண்ணீர், வெல்லத் தூள், மஞ்சள் தூள், சாம்பார் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து, 7 நிமிடம் ஊற வைத்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும். அடுத்து, அதில் வேர்க்கடலை போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும். பிறகு அதில் அந்த அவலைப் போட்டு, அதில் உள்ள நீர் சுண்டும் வரை, அடுப்பில் வைத்து, இறுதியில் அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான அவலக்கி ரெடி!!!
Working...
X