Announcement

Collapse
No announcement yet.

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • #31
    Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

    Originally posted by bmbcAdmin View Post
    help

    Help

    ஶ்ரீ:
    க்ருஷ்ணாம்மா அவர்களுக்கு ஒரு அவசர சந்தேகம்!
    கார பூந்தி பண்ணும்போது, பூந்தி மாவில் உப்பு போடவேண்டுமா? வேண்டாமா?
    அதாவது, சிப்ஸ் போல, பண்ணிய பிறகு உப்புக்காரம் போட்டு பிசறினால் போறுமா?
    எது சரியான முறை?
    அன்புடன்,
    என்.வி.எஸ்

    கண்டிப்பாக உப்பு போடணும் மாமா, உப்பு போடாமல் எதுவும் நாம் செய்ய மாட்டோமே மாவில் உப்பு காரம் போட்டுடலாம். பிறகு இன்னும் காரம் வேண்டுமானால் காராபூந்தி பொறித்து எடுத்ததும், உப்பு, வறட்டு மிளகாய் பொடி, கொஞ்சம் பெருங்காயப்பொடி தூவி நன்கு குலுக்கி விடணும். அப்புறம் கறிவேப்பிலை, முந்திரி எல்லாம் தாளித்து கொட்டலாம்

    நாம் பூந்தி லட்டு செய்தால் கூட மாவில் ஒரு சிட்டிகை உப்பு போட்டுத்தான் பண்ணனும் மாமா
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment

    • #32
      Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

      ஶ்ரீ:
      மிக மிக நன்றி க்ருஷ்ணாம்மா.
      எங்காத்துல போட்டுத்தான் பண்ணுவோம்
      யாரோ ஆத்துக்கு வந்தவா, பெரிய தளிகை பண்றவாள்ளாம்
      உப்பு அப்பறமாத்தான் போடுவான்னு சொன்னா,
      அதனால சந்தேஹம் வந்தது கேட்டேன்.
      மிக்க நன்றி.
      என்.வி.எஸ்

      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment

      • #33
        Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

        மாமி,
        எங்காத்திலே ஒரு அரை நெல்லிக்காய் மரம் இருக்கிறது. அதிலிருந்து கொத்து கொத்தாய் நெல்லிக்காய் காய்த்து வீணாய் போகிறது. எங்க பாட்டி இருந்தபோது பருப்பு பண்ணுவா. ரொம்ப நன்னாஇருக்கும். இன்னிக்கி என் ஆத்துகாரியை பருப்பு பண்ணசொன்னேன். எப்படி பண்ணபோராளோ தெரியவில்லை. இந்த நெல்லிக்காயிலிருந்து ரொம்ப நாள் இருக்கும்படி என்ன செய்யலாம்.ஏதாவது சூபர் ரேசிபி சொல்லுங்கோ.வீணா போகறதை பாத்து மனசு கேக்கலை. பக்கத்தாத்து வேலைக்காரி தினம் 1/2 படி 1 படின்னு எடுத்துண்டு போரா.என்ன செய்யராளோ தெரியலை.வித்தா வாங்குவாளா என்ன?
        Last edited by P.S.NARASIMHAN; 07-02-14, 10:48.

        Comment

        • #34
          Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

          மாமி, இன்றைய தினம் வரை உங்களிடமிருந்து பதிலை காணோம். போன திரியில் சொன்னமாதிரி ஆத்தில் பருப்பு பண்ணா. ரொம்ப நன்னாஇருந்தது. அப்புறம் தொக்கு போட்டா. அது என்னா ஒரே புளிப்பு. இருந்தாலும் சாதத்திலே கலந்து சாப்பிட்டா நன்னா இருக்கு. எதுக்கும் உங்க ரெசிபிகளையும் விவரமா சொல்லுங்கோ. எவ்வலோ நெல்லிக்காய் வேஸ்டாபோரது. இதுக்குஏதாவது செய்தாகணும்.
          Last edited by P.S.NARASIMHAN; 03-02-14, 10:26.

          Comment

          • #35
            Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

            Originally posted by P.S.NARASIMHAN View Post
            மாமி,
            எங்காத்திலே ஒரு அரை நெல்லிக்காய் மரம் இருக்கிறது. அதிலிருந்து கொத்து கொத்தாய் நெல்லிக்காய் காய்த்து வீணாய் போகிறது. எங்க பாட்டி இருந்தபோது பருப்பு பண்ணுவா. ரொம்ப நன்னாஇருக்கும். இன்னிக்கி என் ஆத்துகாரியை பருப்பு பண்ணசொன்னேன். எப்படி பண்ணபோராளோ தெரியவில்லை. இந்த நெல்லிக்காயிலிருந்து ரொம்ப நாள் இருக்கும்படி என்ன செய்யலாம்.ஏதாவது சூபர் ரேசிபி சொல்லுங்கோ.வீணா போகறதை பாத்து மனசு கேக்கலை. பக்கத்தாத்து வேலைக்காரி தினம் 1/2 படி 1 படின்னு எடுத்துண்டு போரா.என்ன செய்யராளோ தெரியலை.வித்தா வாங்குவாளா என்ன?

            நமஸ்காரம் மாமா, முன்பு எங்காத்தில் கூட மரம் இருந்தது, நெல்லிக்காய் வீணாக போகிறதே என்று அடிச்சுக்கும் எங்களுக்கு. எங்க அம்மா சாத்தமுது பண்ணுவா , நெல்லிக்காய் சாதம் பண்ணுவா, என்றாலும் ரொம்ப காய் வீணாகிவிடும். பிறகு எங்க அப்பா சொன்ன ஐடியா படி ஜூஸ் கான்செண்ட்ரெட் செய்து வைத்தோம் பாருங்கோ அது செமை ஹிட் ஆகிவிட்டது. வந்தாவா எல்லோருக்கும் சூப்பர் ஜூஸ் தந்தோம் அந்த summerக்கு. இதோ அந்த ரெசிபி போடறேன் நிங்களும் வேண்டுமானால் செய்து பாருங்கள்.

            தனி திரியாக போடறேன் பாருங்கள் மாமா

            அப்புறம், அந்த வேலைக்காரி ஸ்கூல் வாசலில் உட்கார்ந்து பசங்களுக்கு உப்பு மிளகாய் பொடி போட்டு வித்துடுவாளோ என்னவோ
            என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

            http://eegarai.org/apps/Kitchen4All.apk

            http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

            Dont work hard, work smart

            Comment

            • #36
              Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

              Originally posted by P.S.NARASIMHAN View Post

              மாமி, இன்றைய தினம் வரை உங்களிடமிருந்து பதிலை காணோம். போன திரியில் சொன்னமாதிரி ஆத்தில் பருப்பு பண்ணா. ரொம்ப நன்னாஇருந்தது. அப்புறம் தொக்கு போட்டா. அது என்னா ஒரே புளிப்பு. இருந்தாலும் சாதத்திலே கலந்து சாப்பிட்டா நன்னா இருக்கு. எதுக்கும் உங்க ரெசிபிகளையும் விவரமா சொல்லுங்கோ. எவ்வலோ நெல்லிக்காய் வேஸ்டாபோரது. இதுக்குஏதாவது செய்தாகணும்.

              மன்னிக்கணும் மாமா, கொஞ்சம் உடம்பு சரி இல்லை, அது தான் 1 வாரமாய் நெட் பக்கம் வரலை. இதோ எனக்கு தெரிந்ததை போடறேன், பாருங்கோ உங்களுக்கு உபயோகப்படுமா என்று
              என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

              http://eegarai.org/apps/Kitchen4All.apk

              http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

              Dont work hard, work smart

              Comment

              • #37

                • #38
                  Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

                  அனைவரும் விரும்பிச் சாப்பிடும் முருங்கைக்காயில் எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. ஆனால் நாம் அறிந்திருப்பதோ சில பயன்களை மட்டுமே. பயன்களை அறிந்து காய்கறிகளை சாப்பிடுவோமே பகுதியில் இன்று நாம் பார்க்க விருப்பது முருங்கைகாய்.

                  முருங்கைகாய்.

                  என்ன சத்துகள் இருக்கு: தினமும் முருங்கைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துகள். பொதுவாக முருங்கைக்காயில் கொழுப்பு மற்றும் இரும்புச் சத்து மற்றும் விட்டமின் ஏ, சி இருக்கிறதை தெரிந்துகொள்ள வேண்டும்.. மேலும் புரதம் 2.5 கிராம், கார்போஹைட்ரேட் 3.7 கிராம்,தண்ணீர் 86.9%,
                  கலோரி 26,ஃபைபர் 4.8 கிராம்,கொழுப்பு 0.1 கிராம்,விட்டமின் ஏ 0.11 மிகி,வைட்டமின் பி (கோலைன்) 423 மி.கி,வைட்டமின் பி 1 (தயாமின்) 0.05 மி.கி, விட்டமின் பி2 (ரிபோப்லாவின்) 0.07 மி.கி,வைட்டமின் பி3 (நிகோடினிக் அமிலம்) 0.2 மிகி,கால்சியம் 30 மில்லி கிராம்,மெக்னீசியம் 24 மில்லி கிராம் கொண்டுள்ளது.

                  யாருக்கு நல்லது : குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் சேரும் கிருமி பூச்சிகள் வெளியேறும், மலச்சிக்கலால் அவதி படுபவர்கள், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், சளி பிரச்சனை உள்ளவர்கள், ரத்தசோகை,வயிற்றில் புழு பிரச்சனை உள்ளவர்கள், கணையம், கல்லீரலில் வீக்கம் உள்ளவர்கள் சாப்பிடலாம்.

                  யாருக்கு நல்லதல்ல: முதியவர்கள், இதய நோயாளிகள், மூட்டு நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. ஏனெனில் வாயுப் பிடிப்பை ஏற்படுத்தும்.

                  பலன்கள்: நரம்பு மண்டலங்களுக்கு ஊக்கம் தரும். முருங்கைகாயை வாரத்தில் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் வயிறு வலி குணமாகும் மேலும் மூலம் தலைவலி, இரத்த நுகர்வு, சிறுநீர் நீர் சுத்திகரிப்பு, உடல், எரிவாயு பிரச்சினைகள் நீங்கும் உடலில் வெப்பநிலை அதிகம் கொண்டவர்கள் முருங்கைகாய் சாப்பிட்டு வந்தால் உயர் வெப்பநிலை குறையும். கர்ப்பிணி பெண்கள் முருங்கைகாய கண்டிப்பாக சாப்பிட வேண்டும், ஏனெனில் பிரவசத்திற்கு முன்பும் பிரவசத்திற்கு பின்பும் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை முருங்கைகாய் நீக்குகிறது. பிரசவத்திற்கு பின்னர் முருங்கைகாய் சாப்பிடுவதன் மூலம் தாய்க்கு பால் அதிகரிக்கும். சளியைப் போக்கும். காய்கள் காய்ச்சலுக்கும் வயிற்றுப் புழுக்களுக்கும் எதிரானவை.

                  Source: Dinakaran

                  Comment

                  • #39
                    Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

                    கத்தரிக்காய் பச்சை மற்றும் ஊதா நிறங்களில் கிடைத்து வருகிறது. இதில் ஹைபிரிட் வெரைட்டியும் தற்போது உள்ளது. பொதுவாகவே கத்தரிக்காயை குழந்தைகளும், பெரியவர்களும் விரும்புவதில்லை. ஆனால் அதன் நன்மைகளோ ஏராளம். மேலும் கத்தரிக்காய் குறித்த ஆய்வு ஒன்றின் படி, அதில் நிக்கோட்டின் என்ற நச்சுப் பொருள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால் இது உடலை பாதிக்கும் அளவிற்கு அதிகமாக இல்லை. அப்படியிருந்தும் ஏன் இது நன்மை தரும் உணவு என்று கூறுகிறோம் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? மேற்கொண்டு படியுங்கள்.

                    கத்தரிக்காயின் குணநலன்களைப் பற்றி இப்போது பார்ப்போம். மேலும் இத்தகைய உணவை நாம் ஏன் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை படித்து உணர்வோம்.
                    ஃப்ரீ ராடிக்கல்ஸ் (Free Radicals) உடலில் நிறைய ஃப்ரீ ராடிக்கல்ஸ் இருக்கும். இவை நமது செல்களை சேதப்படுத்தும் குணம் கொண்டவையாகும். கத்தரி இத்தகைய ராடிக்கல்ஸ்களை தனது ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மூலம் எதிர்த்து போராடுகிறது. இத்தகைய ராடிக்கல்ஸ்களிடமிருந்து நம்மை காத்து, எந்த வித நோயையும் அண்ட விடாமல் தடுக்கும் குணம் கத்தரியில் உள்ள கிலோரோஜினிக் என்ற அமிலத்திற்கு உள்ளது. இது தான் ஆன்டி-ஆக்ஸிடன்டாக செயல்படுகிறது.
                    ஆரோக்கியமான இதயம் உடலில் அதிகமாக சேர்ந்துள்ள கொழுப்புக்களை கரைக்க வல்லதாய் இந்த காய் உள்ளது. தினசரி சிறிதளவு சாப்பிடுவது கொழுப்பை மட்டுமல்ல உடலில் உள்ள இரத்த அழுத்தத்தையும் சம அளவிற்கு கொண்டு வருகிறது. இதனால் இதய சம்மந்தமான நோய்கள் வர விடாமல் தடுக்கப்படுகின்றன.
                    மூளையின் செயல் திறன் கத்தரிக்காயில் உள்ள பைட்டோ-நியூட்ரியன்ட்ஸ் நமது மூளை செயல் திறனை அதிகரிக்கின்றன. இது நமது செல்களின் மெம்பிரேன்களை பத்திரமாக காத்துக் கொள்வது மட்டுமல்லாமல் நல்ல நினைவாற்றலையும் தருகின்றது.
                    அதிகமாக உள்ள இரும்புச்சத்தை குறைத்தல் தினசரி கத்தரிக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால், அது நமது உடலில் உள்ள அதிகமாக சேர்ந்துள்ள இரும்புச்சத்தை குறைக்க உதவுகிறது. பாலிசைத்தீமியா என்ற நோய் உள்ளவர்களுக்கு அதிகம் இரும்புச்சத்து இருக்கும். இவர்களுக்கு இது மிகுந்த உதவியாக இருககும்.
                    பாக்டீரியாவை தடுக்க வல்லது எந்த ஒரு தொற்று தோயிலிருந்தும் நம்மை காக்கும் சக்தி கத்தரிக்காய்க்கு உண்டு. வைட்டமின் சி அதிகம் உள்ள இந்த காயில் பாக்டீரியாவை எதிர்த்து போராடும் சக்தியும் உள்ளது. இதை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் இத்தகைய கிருமிகளால் வரும் நோயிலிருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும்.
                    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் கத்தரிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் காய்கறியாகும். இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் ஆகியவை சிறந்து சக்தி தரும் பொருட்களாக அமைகின்ற
                    புகைப்பிடிப்பதை நிறுத்த முடியும் நீங்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை இயற்கையான முறையில் நிறுத்த விரும்பினால் இதோ ஒரு கத்தரிக்காய். இயற்கை முறையில் நிக்கோட்டின் உள்ள காய் கத்தரிக்காயாகும். இது நிக்கோட்டின் ரீப்பிளேஸ்மென்ட் சிகிச்சையின் போது பயன்படுத்தப்படுகிறது.
                    ஆரோக்கியமான சருமம் கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த காயான கத்தரிக்காய் அதிக நார்ச்சத்து நிறைந்த உணவாகும். இவை நமது சருமத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி சருமத்தை ஒளிர வைக்கிறது. கத்தரி தோலில் உள்ள அன்தோசையனின் என்ற பொருள் நமது சருமத்தை இளமையாக வைத்துக் கொள்ள உதவுகின்றது.
                    முடி பராமரிப்பு கத்தரிக்காயை தினமும் சாப்பிடுவது நமது தலை பகுதியை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். இதனால் முடியின் வேர் பகுதி ஊக்குவிக்கப்பட்டு முடி நன்கு வளருகிறது. இதனால் முடி வளர்ச்சி அதிகரிப்பதுடன் மற்றும் முடியும் ஆரோக்கியமாகவும் இருக்கும் என்பதை நம்புங்கள்.
                    சருமத்திற்கு ஈரப்பதமூட்டுதல் இது மிக முக்கிய பலனாக விளங்குகிறது. கத்தரிக்காயில் தேவையான அளவு நீர்ச்சத்து உள்ளதால், அது சருமத்தில் ஈரப்பதத்தை எப்போதும் நிலை நிறுத்தும். இதனால் வறண்ட சருமம் மற்றும் சருமத்தின் வெடிப்புகளை குணப்படுத்த முடியும்.

                    Source:health tips in tamil
                    Last edited by P.S.NARASIMHAN; 09-02-14, 11:09.

                    Comment

                    • #40
                      Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

                      மோர்க்களி.
                      வேண்டியவைகள்.
                      மிதமான புளிப்பு மோர்—இரண்டரைகப்
                      மெல்லியதாகச் சலித்த அரிசி மாவு—ஒரு கப்
                      எண்ணெய்——இரண்டு டேபிள் ஸ்பூன்
                      கடுகு—அரை டீஸ்பூன்
                      உளுத்தம் பருப்பு–ஒரு டீஸ்பூன்
                      மோர் மிளகாய்——மூன்று
                      ருசிக்கு உப்பு
                      வாஸனைக்கு–துளி பெருங்காயம்
                      சிறிது கறிவேப்பிலை.

                      செய்முறை——
                      -மாவை உப்பு சேர்த்து மோரை விட்டு கரைத்துக்
                      கொள்ளவும்.
                      அடி கனமான வாணலியில் எண்ணெயைக் காய வைத்து
                      மிளகாயை நன்றாக கிள்ளிப்போட்டு வறுத்துக் கொண்டு
                      கடுகு, பெருங்காயம்,உளுத்தம்பருப்பைச் சேர்த்துத் தாளித்து
                      கறி வேப்பிலையுடன் கரைத்து வைத்திருக்கும் மாவுக்-
                      -கலவையைச் சேர்த்துக் கிளறவும். தீயை நிதானமாக
                      வைத்து அடிக்கடி கிளறவும். மாவு வெந்து சுருண்டு
                      வரும் போது சற்று மூடி வைத்துப் பிறகு இறக்கவும்.
                      ஈரக் கையினால் மாவைத் தொட்டால் வெந்த மாவு
                      கையில் ஒட்டாது. உப்பு, புளிப்பு, காரத்துடன் களிப்பதத்தில்
                      சாப்பிட ருசியாக இருக்கும்.

                      Comment

                      • #41
                        Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

                        வெந்தய இட்லி.

                        உளுந்தே சேர்க்காமல் செய்யும் இந்த இட்லி மெத்தென்றும் இருக்கும். வெந்தயம் சேர்த்ததே தெரியாத அளவிற்கு இருக்கும். மிக ருசியானது.ஆரோக்கியத்திற்கு மிக உகந்தது.வாரம் ஒரு முறை வெந்தய இட்லி செய்வதை பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.
                        இட்லி அரிசி -- 3 ஆழாக்கு
                        வெந்தயம் --- 3 தேக்கரண்டி
                        உப்பு --- 3 தேக்கரண்டி
                        வென்டயத்தை தனியாக 4 மணி நேரம் தண்ணீரில் ஊரவைக்கவும். இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்தாலும் போதுமானது. முதலில் கிரைண்டரில் வெந்தயத்தை போட்டு அரைக்கவும்.3 தேக்கரண்டி வெந்தயத்திற்கு 3 டம்ளர் தண்ணீர் தேவை. கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக்கொண்டே அரைக்கும்போது நன்கு நுரைக்கும். உளுந்தைபோல பார்ப்பதற்கு நுரைத்து வரும்.கிண்ணத்தில் வழித்தபிறகு அரிசியைகுருனையாக அரைக்கவும். இரண்டையும் ஒன்றாக உப்பு சேர்த்து கலந்து மூடி வைக்கவும். மறு நாள் காலை நங்கு பொங்கி வந்திருக்கும். எப்போதும்போல் இட்லிதட்டில் நனைத்த துணி அல்லது எண்ணை தடவி ஊற்றி குக்கரில் ஆவியில்7/10 நிமிடம் வரை வேகவைத்து எடுக்கவும். ஆறிய பிறகும் மெத்தென்றுதான் இருக்கும்,அரைக்கும் பக்குவம் மிகவும் முக்கியம்.மரு நாள்காலை தண்ணீர் ஊற்றக்கூடாது.முதல் நாளே பக்குவமாக கரைத்துவைக்கவேண்டும்.

                        SOURCE:Mallika Badrinath.. Kumudham Health

                        Comment

                        • #42

                          Thanks for sharing Mama
                          என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                          http://eegarai.org/apps/Kitchen4All.apk

                          http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                          Dont work hard, work smart

                          Comment

                          • #43
                            Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

                            வெந்தய இட்லி: மாமி நீங்களும் சரி என்று சொல்லிவிட்டீர்கள், ஆனால் என் ஆத்துகாரி ஐய இது எப்படி உளுந்து இல்லாம இட்லி செய்யறதுன்னு சொல்ரா. பண்ணி பார்கலாமா. சொல்லுங்கோ. அதை காட்டி அந்தம்மாவை பண்ன சொல்றேன்.

                            Comment

                            • #44
                              Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

                              Originally posted by P.S.NARASIMHAN View Post
                              வெந்தய இட்லி: மாமி நீங்களும் சரி என்று சொல்லிவிட்டீர்கள், ஆனால் என் ஆத்துகாரி ஐய இது எப்படி உளுந்து இல்லாம இட்லி செய்யறதுன்னு சொல்ரா. பண்ணி பார்கலாமா. சொல்லுங்கோ. அதை காட்டி அந்தம்மாவை பண்ன சொல்றேன்.

                              தாராளமா பண்ணலாம் மாமா நான் பண்ணத்தான் போறேன் , நீங்களும் பண்ணுங்கோ மாமிட்ட சொல்லுங்கோ
                              என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                              http://eegarai.org/apps/Kitchen4All.apk

                              http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                              Dont work hard, work smart

                              Comment

                              • #45
                                Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

                                Krishnamma Mami,
                                How to prepare KOVIL DOSAI, like distributed at Srirangam, Oppiliappan temple etc., If already provided, please give the link. Thank you for the wonderful service. You are like a dictionary, and I refer to it frequently in case of doubt or to better my preparations.

                                Comment

                                Working...
                                X