இந்த திரி இல் சில பல பலகாரங்களை பார்ப்போம். இப்ப மஹாளபக்ஷம் அதனால் எல்லாராத்திலேயும் பலகாரம் தான்; எனவே சாதாரணமாக செய்யும் இட்லி தோசை யை தவிர்த்து வேறு சிலதை போடுகிறேன். வேண்டுமானால் சொல்லுங்கோ இட்லி தோசை யும் போடுகிறேன்
முதலில் மாவு செய்யும் விதம் பார்க்கலாம்.
தேவையானவை:
அரிசி மாவு 2 கப் (களைந்து உலர்த்தி அரைத்தது)
உப்பு 1 சிட்டீகை
நெய் 1 டீ ஸ்பூன்
தண்ணீர் 1 1/2 முதல் 2 கப்
செய்முறை :
உருளி அல்லது ஆழமான 'non stick pan' இல் தண்ணீர் ஊற்றவும்
அது நன்கு கொதிக்கும் பொது, உப்பு மற்றும் நெய் சேர்க்கவும்.
அடுப்பை சின்னதாக்கி மாவை கொட்டி கிளறவும்.
அடுப்பை அணைத்துவிட்டு நன்கு கிளறவும்.
தேவையானால் சிறிது தண்ணீர் தெளித்து கிளறவும்.
நன்கு உருண்டு வந்ததும் முடிவைக்கவும்.
பூரணம் செய்ய :
1 cup உளுந்தை நான்கு களைந்து, ஒரு 1/2 மணி ஊரவைக்கவும்.
ஊறின உளுந்து, பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், பெருங்காயம், உப்பு போட்டு கார கரப்பாக அரைத்து எடுக்கக்வும்.
குக்கர் இல் இட்லி போல் ஆவி இல் வேகவைத்து எடுக்கவும்.
மிக்சி இல் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். (அப்ப தான் கட்டிகள் இல்லாமல் பூந்துருவலாய் வரும் )
வாணலி இல் எண்ணை விட்டு, கடுகு கறிவேப்பிலை தாளித்து, உதிர்த்து வைத்துள்ள பூரணத்தை போடவும்.
நன்கு கிளறி (உப்புமா போல் உதிர் உதிராய் இருக்கணும் )இறக்கவும்.
முன்பு சொன்ன கொழுக்கட்டை மாவை சின்ன சின்ன சீடைகளாய் உருட்டி ஆவி இல் வேக வைத்து எடுக்கவும்.
வாணலி இல் பூரணத்துடன் போடவும்.
நன்கு கிளறி இறக்கவும்.
அருமையான டிபன் ரெடி.
கார்போ ஹைடிறேட் , புரோட்டின் என எல்லாம் இருக்கும் டிபன் இது
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
ஒரு பாத்திரத்தில் மேலே சொன்ன எல்லாத்தையும் போட்டு தண்ணீர்விட்டு கரைக்கவும்.
ஒரு 10 நிமிஷம் கழித்து தோசை வார்க்கவும்.
நெய்விட்டு இருபக்கமும் வெந்ததும் எடுக்கவும்.
சாப்பிட கொடுக்கும் போதும் நெய் விட்டு தரவும்.
அருமையாக இருக்கும்.
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
ஒரு பாத்திரத்தில் தோசை மாவு மற்றும் வெல்லம், ஏலப்பொடி,தேங்காய் துருவல் எல்லாத்தையும் போட்டு கரைக்கவும்.
வேண்டுமானால் தண்ணீர் சேர்க்கவும்.
ஒரு 10 நிமிஷம் கழித்து தோசை வர்க்கவும்.
நெய்விட்டு இருபக்கமும் வெந்ததும் எடுக்கவும்.
சாப்பிட கொடுக்கும் போதும் நெய் விட்டு தரவும்.
அருமையாக இருக்கும்.
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
பச்சரிசி - 3 கப்
கருப்பு உளுத்தம்பருப்பு – 2 கப் (தோலுடன்)
மிளகு – 2 டீஸ்பூன்
சுக்குப் பொடி - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
நெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை:
அரிசியை ஊறவைத்து நீரை வடித்து வறட்டு மாவாக, மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். (கோயிலில் இதை உரலில் போட்டு இடிப்பதற்காக ஆட்களை நியமித்திருப்பார்கள்.)
உளுந்தை இரண்டு மூன்று முறை களைந்து கொள்ளவும். பாதி அளவு தோலை மட்டும் நீக்கிவிட்டு, மீதியை அதிலேயே சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
தேவையான உப்பு, அரிசி மாவோடு கலந்து 6 மணி நேரம் அப்படியே வைக்கவும். (கோயிலில் காலையில் அரைத்து இரவில் செய்வார்கள்.) இந்தக் கலவை, தோசை மாவு மாதிரி இல்லாமல் வடை மாவு பதத்தில் கெட்டியாக இருக்க வேண்டும்.மறுநாள் மாவில் சுக்குப் பொடி, ஒன்றிரண்டாக உடைத்த மிளகு, நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
அடுப்பில் தோசைக்கல் சூடானதும், மாவை சற்று கனமான தோசைகளாக (இரண்டு அங்குல உயரம்) வார்த்து, சுற்றிலும் நெய் விட்டு அடுப்பை சிம்’மில் வைக்கவும்.நன்கு சிவந்து மொறுமொறுப்பாக ஆனதும், மறுபக்கம் திருப்பிப் போட்டு, மீண்டும் நெய் விட்டு, சிவக்க மொறுமொறுப்பாக எடுக்கவும்.
குறிப்பு : அடுப்பு சிம்மில் மட்டுமே இருக்க வேண்டியது முக்கியம்.
வீட்டில், கொஞ்சம் மென்மையான தோசை வேண்டும் என்று நினனப்பவர்கள், பாதிக்குப் பாதி புழுங்கல் அரிசி சேர்த்துக் கொள்ளலாம். வாசனைக்குப் பெருங்காயமும். இவை இரண்டும் கோயிலில் தவிர்ப்பவை.
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
வாணலி இல் ஒவ்வொரு ஐட்டமாக போட்டு பொன் வறுவலாக வறுக்கணும்.
தனித்தனியாக வறுத்து ஒரு தாம்பாளத்தில் கொட்டவும்.
ஆறினதும் மாவு மிஷின் இல் மாவாக அரைக்கவும்
காற்று புகாத டப்பாவில் சேமிக்கவும்.
தேவை படும் போது, கஞ்சி தயாரிக்கவும் .
பால் சர்க்கரை அல்லது மோர் + உப்பு போட்டு தரலாம் .
குறிப்பு: கஞ்சி செய்ய : குழந்தைகளானால் 1 ஸ்பூன்; பெரியவர்களானால் 2 - 3 ஸ்பூன் போட்டு கஞ்சி தயாரிக்கவும். மோர் விட்டு உப்பு போட்டு குடிக்கலாம் அல்லது ரசம், சாம்பார் ஊறுகாய் ஏதாவது ஒன்று சேத்து குடிக்கலாம். அருமையாக இருக்கும் , நல்லா பசி தாங்கும்.
உருண்டை தயாரிக்க : விரத நாட்களில் இந்த பொடி இல் கொஞ்சம் நெய் விட்டு சர்க்கரை சேர்த்து + ஏலப்பொடி சேர்த்து உருண்டை செய்தும சாப்பிடலாம்
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
ஶ்ரீ:
க்ருஷ்ணாம்மா,
அடியேனுடைய வேண்டுகோளுக்கிணங்கி உடனடியாக மஹாளயபக்ஷ பலஹாரம்
செய் முறைகள் போட்டதற்கு மிக்க நன்றி (இத ஒரு வார்த்தையை வச்சுண்டு உலகத்தையே வாங்கிடுவோம்?!.
அடியேனுக்கு மற்றொரு சந்தேஹம் உள்ளது?
மிகச் சிறிய வயதில் -சின்னசேலம் என்ற ஊரில் 10வது படித்துக்கொண்டிருக்கும்போது -
அங்கு ஒரு (மாமா?)வர் "உளுத்தங்கஞ்சி" என்று ஒன்று கொடுப்பார் (விற்பனை செய்வார்).
அந்தச் சுவை அடியேனுடைய நாவை விட்டு இன்னும் அகலவில்லை,
சொல்லப்போனால் அந்தச் சுவைக்காக மிகவும் ஏங்குகிறது என்றே (வெட்கத்தை விட்டுச்) சொல்லவேண்டும்.
சுவை மனதில் நிறுத்திச் சொல்லவேண்டுமானால்:
அதில் உளுந்து, தேங்காய் (பூவும் செதிலுமாக), ஏலக்காய், இஞ்சி, சர்க்கரை இவற்றின் கலவையான சுவை
தெரியும் கிட்டத்தட்ட பார்ப்பதற்கு ரவா கஞ்சி போல இருக்கும்,
ஆனால் அதன் செய்முறை மட்டும் பிடிபடவில்லை.
பேசத் தெரியாத குழந்தை ஜாடை காட்டி எதோ ஒரு பொருளைக் கேட்பதுபோல,
அடியேனும் மாமியிடம் பலவாறாகச் சொல்லி செய்யச் சொல்லிப் பார்த்துவிட்டேன்
ஊஹூம் ... அந்தச் சுவை ஊம் அது கனவுதான்.
ஒரு வேளை அது தங்களால் நிறைவேறுமோ என்று கேட்கிறேன்.
நிஜமாக அதன் செய்முறை கிடைத்துவிட்டால்,
ரியலி க்ரேட்தான் போங்கோ.
அன்புடன்
என்.வி.எஸ்
ஶ்ரீ:
க்ருஷ்ணாம்மா,
அடியேனுடைய வேண்டுகோளுக்கிணங்கி உடனடியாக மஹாளயபக்ஷ பலஹாரம்
செய் முறைகள் போட்டதற்கு மிக்க நன்றி (இத ஒரு வார்த்தையை வச்சுண்டு உலகத்தையே வாங்கிடுவோம்?!.
அடியேனுக்கு மற்றொரு சந்தேஹம் உள்ளது?
மிகச் சிறிய வயதில் -சின்னசேலம் என்ற ஊரில் 10வது படித்துக்கொண்டிருக்கும்போது -
அங்கு ஒரு (மாமா?)வர் "உளுத்தங்கஞ்சி" என்று ஒன்று கொடுப்பார் (விற்பனை செய்வார்).
அந்தச் சுவை அடியேனுடைய நாவை விட்டு இன்னும் அகலவில்லை,
சொல்லப்போனால் அந்தச் சுவைக்காக மிகவும் ஏங்குகிறது என்றே (வெட்கத்தை விட்டுச்) சொல்லவேண்டும்.
சுவை மனதில் நிறுத்திச் சொல்லவேண்டுமானால்:
அதில் உளுந்து, தேங்காய் (பூவும் செதிலுமாக), ஏலக்காய், இஞ்சி, சர்க்கரை இவற்றின் கலவையான சுவை
தெரியும் கிட்டத்தட்ட பார்ப்பதற்கு ரவா கஞ்சி போல இருக்கும்,
ஆனால் அதன் செய்முறை மட்டும் பிடிபடவில்லை.
பேசத் தெரியாத குழந்தை ஜாடை காட்டி எதோ ஒரு பொருளைக் கேட்பதுபோல,
அடியேனும் மாமியிடம் பலவாறாகச் சொல்லி செய்யச் சொல்லிப் பார்த்துவிட்டேன்
ஊஹூம் ... அந்தச் சுவை ஊம் அது கனவுதான்.
ஒரு வேளை அது தங்களால் நிறைவேறுமோ என்று கேட்கிறேன்.
நிஜமாக அதன் செய்முறை கிடைத்துவிட்டால்,
ரியலி க்ரேட்தான் போங்கோ.
அன்புடன்
என்.வி.எஸ்
இதோ போடுகிறேன் மாமா, இது தான் அது என்றால் எனக்கும் சந்தோஷம்.
செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கோ
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
குண்டு உளுத்தம் பருப்பு - 1/4 கிலோ
கருப்பட்டி(பனை வெல்லம்) - 1/2 கிலோ
ஏலக்காய் - 10
முற்றிய தேங்காய் - 1
சுக்கு - 1/2 அங்குல நீளம்.
செய்முறை :
உளுத்தம்பருப்பை வாசனை வரும் வரை லேசாக வறுக்கவும்.
ஆறிய பின் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
தேங்காயை துருவி முதல் பால் 1/4 லிட்டர் அளவும், இரண்டாம் பால் 1/4 லிட்டர் அளவும் எடுக்கவும்.
உளுத்தம்பருப்பை கிரைண்டரில் போட்டு கெட்டியாக அரைக்கவும்.
கருப்பட்டியை நசுக்கி 1/2 லிட்டர் வெந்நீரில் கரைத்துக்கொள்ளவும்.
சுக்கையும்,ஏலக்காயையும் பொடியாக்கி மாவுடன் சேர்க்கவும்.
கிரைண்டரை அலம்பி அந்த தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கிளறவும்.
(மொத்தம் ஒரு அரை லிட்டர் இருக்கலாம் )
கருப்பட்டியை கரைத்த நீரை வடிகட்டி மாவுடன் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து திக்காக வரும் போது ஒரு சிட்டிகை உப்பும், இரண்டாம் தேங்காய்ப்பாலும் சேர்க்கவும்.
கைவிடாமல் கிளறவும்.
ஒரு 5 நிமிடம் கழித்து முதல் தேங்காய்ப்பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
சுவையான உளுத்தங்கஞ்சி தயார்
குறிப்பு : அடுப்பில் இருக்கும் பொது அடிக்கடி கிளறி விட வேண்டும். இல்லையேல் அடி பிடித்துவிடும். பெண்களுக்கு இடுப்புக்கும், ஆண்களுக்கு நெஞ்சுக்கும் மிகவும் நல்லது. கர்ப்பிணிப்பெண்களுக்கு அடிக்கடி செய்து கொடுத்தால் பிரசவம் சுலபமாக இருக்கும். சேலம் மாவட்ட சிறப்பு உணவு.
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
1 கப் ரவை
ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு சீரகம் - ஒன்றிரண்டாக உடைத்தது
ஒரு டேபிள் ஸ்பூன் முந்திரி ஒன்றிரண்டாக உடைத்தது
கொஞ்சம் நெய்
கொஞ்சம் கறிவேப்பிலை
பெருங்காயம் ( தேவையானால் )
உப்பு
செய்முறை :
வாணலி இல் முதலில் ரவையை வெறுமன வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து நெய் விட்டு மிளகு சீரகம் , முந்திரி போட்டு வறுக்கவும்.
ரவையை கொட்டவும்.
நன்கு வறுக்கவும்.
பெருங்காய பொடி, கறிவேப்பிலை போடவும்.
ரவை நன்கு பொரிந்ததும் தண்ணீர் விடவும்.
ரவை நன்கு வெந்ததும் இறக்கவும்.
சுவையான 'ரவா பொங்கல் ' ரெடி.
குறிப்பு : ரவையை சாதாரணமாக பொங்கல் செய்யும்போது வெந்த பயத்தம் பருப்பை போடுவது வழக்கம். இந்த முறை இல் பயத்தம் பருப்பு இல்லாமலே சுவையாக இருக்கும், செய்வதும் எளிது . செய்து பாருங்கள்
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
இந்த டிபன் பலவீடுகளில் பல முறைகளில் செய்யப்படும் டிபனாகும். இங்கு நான் தருவது எங்க விட்டு முறை
தேவையானவை :
1 கப் அரிசி
3 /4 கப் கடலை பருப்பு
1 / 4 கப் உளுத்தம் பருப்பு
ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயம்
உப்பு
தோசை வார்க்க எண்ணெய்
செய்முறை :
அரிசி பருப்புகளை நன்றாக அலசி, ஒன்றாகவே ஒரு இரண்டு மணிநேரம் ஊற வைக்கவும்
வெந்தயத்தை அலசி தனியாக ஊறவைக்கவும் .
பிறகு முதலில் வெந்தயத்தை அரைக்கவும்.
நல்லா மசிய அரைக்கவும்.
பிறகு அரிசி பருப்புகளை அரைக்கவும்.
தண்ணீர் மட்டாக விட்டு அரைக்கணும்.
மாவு நல்ல கெட்டியாக இருக்கணும்.(அடை மாவு போல )
பிறகு உப்பு போட்டு கலக்கவும்.
அடுப்பில் வாணலியை போட்டு மாவை விட்டு கொஞ்சமாக பரத்தணும்.
சுற்றிலும் எண்ணைவிடனும்.
ஒரு மூடியால் மூடி விடனும்.
ஒரு நிமிடம் கழித்து மூடி யை திறந்து பார்க்கணும்.
கொஞ்சம் வெந்தது போல தெரிந்தால், மறுபுறம் திருப்பி போடணும்.
இப்போது மூட வேண்டாம்.
மீண்டும் கொஞ்சம் எண்ணெய் விடனும்.
நன்றாக வெந்ததும் எடுக்கணும்.
இது ஒரு புறம் ரொம்ப 'கரகர' வென்றும் மறு புறம் 'மெத் ' என்றும் இருக்கும்.
வெந்தய கசப்புடன் நல்லா இருக்கும்.
இதற்க்கு தொட்டுக்கொள்ள தோசை மிளகாய்பொடி அல்லது பருப்புசாம்பார் நல்லா இருக்கும்.
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
இதற்கு ஏன் இந்த பெயர் என்றால், காஞ்சிபுரம் கோவிலில் இதை 'குடலை இட்லி' என்று சொல்வார்கள். இதை மந்தாரை இலை இல் தான் செய்வார்கள், அந்த அளவு மாவு கெட்டியாக இருக்கும். இருக்கணும். எங்க அம்மா பாட்டி எல்லாம் இதை இட்லி தட்டில் செய்ய மாட்டா , சின்ன சின்ன கப் களில் அல்லது டம்ளர் இல் விட்டு வேக வைப்பார்கள். இப்ப நான் இட்லி தட்டிலேயே வார்த்து விடுவேன்.
தேவையானவை :
ஒரு கப் அரிசி
முக்கால் கப் உளுத்தம் பருப்பு
ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு சீரகம் - ஒன்றிரண்டாக உடைத்தது
கொஞ்சம் நெய்
கொஞ்சம் கறிவேப்பிலை
பெருங்காயம் அரை ஸ்பூன்
சுக்கு பொடி அரை ஸ்பூன்
உப்பு
ஒரு பெரிய கரண்டி எண்ணெய்
செய்முறை :
அரிசி உளுந்து இரண்டையும் ஒன்றாகவே நனைத்து ஒன்றாகவே அரைக்கணும்.
ஒரு நாலு மணி நேரம் ஊறணும்.
பிறகு கொஞ்சம் 'கரகர'வென அரைக்கணும் .
உப்பு போட்டு கரைத்து வைக்கணும்.
மறுநாள் காலை எண்ணெய் விட்டு நன்கு கலக்கவும்.
பிறகு மற்ற சாமான்கள் எல்லாம் போட்டு நன்கு கலக்கணும்.
பிறகு இட்லி தட்டில் எண்ணெய் தடவி இட்லி வார்க்கணும்.
சுவையான காஞ்சிபுரம் இட்லி தயார்
இதற்கு தொட்டுக்கொள்ளவே எதுவும் வேண்டி இருக்காது. வேண்டுமானால் தோசை மிளகாய் பொடி போட்டுக்கலாம். இல்லாவிட்டால் கட்டி தயிர் நல்லா இருக்கும்.
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
கால் கிலோ பன்சி ரவா அதாவது சோள ரவை
கேரட், குடமிளகாய், உருளைகிழங்கு , பீன்ஸ் என உங்களுக்கு பிடித்த கறிகாய்கள்- எல்லாமாக நறுக்கினது ஒரு பெரிய கப்
தாளிக்க -கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு மற்றும் கடலை பருப்பு
காரத்துக்கு பச்சை மிளகாய்
தேவையானால் -எலுமிச்சம்பழம் - அரை மூடி
கொஞ்சம் கொத்தமல்லி (நறுக்கியது)
உப்புமா செய்ய நெய்யும் எண்ணெய் யும் கலந்து வைத்துக்கொள்ளவும்
உப்பு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு ,கறிவேப்பிலை, பச்சைமிளகாய் தாளித்து, அதனுடன் கேரட், குடமிளகாய், பீன்ஸை நறுக்கி சேர்த்து வதக்கவும்.
ஒரு பங்கு ரவைக்கு மூன்று பங்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு, ஒரு பாத்திரத்தில் கொதிக்க விடவும்.
காய்கறிகள் வதங்கினதும் ரவையை போட்டு நன்கு வறுக்கவும்.
ரவை நன்கு வறுபட்டதும் கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணிரை விடவும்.
உப்பு போடவும்.
நன்கு கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடி வைத்தால் நன்கு வெந்து விடும்.
தேவையானால் இதில் எலுமிச்சம்பழம் பிழிந்து, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
இது, எளிதில் ஜீரணமாகக் கூடிய டிபன் வகைகளில் ஒன்று. எளிதாக தயாரிக்கக் கூடியதும் கூட!
இங்கு பெங்களூரில் இந்த ரவை நிறைய கிடைக்கிறது
அரிசி, பயத்தம் பருப்பு - 200 கிராம்
முந்திரிப்பருப்பு - 10
இஞ்சி - சிறு துண்டு
மிளகு சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்(ஒன்றிரண்டாக உடைத்தது)
நெய் - 100 கிராம்
கறிவேப்பிலை - கொஞ்சம்
பெருங்காயப்பொடி கொஞ்சம்
உப்பு
செய்முறை:
அரிசியையும் பயத்தம் பருப்பையும் களைந்து ஒன்றாகவே வேகவைக்கவும்.
ஒரு பங்குக்கு நான்கு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு குழைவாக வேக விடவும்.
இஞ்சியை தோல் சீவி, துருவவும்.
சிறிது நெய்யில் இஞ்சி, மிளகு சீரகம், முந்திரியைப் போட்டு வறுக்கவும்.
பெருங்காயப்பொடி, கறிவேப்பிலையை சிறிது நெய்யில் தனியாகப் பொரிக்கவும்.
இரண்டையும் பொங்கலில் சேர்த்து, உப்பு போட்டுக் கலக்கவும்.
மீதமுள்ள நெய்யைப் பொங்கலுடன் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
தொட்டுக்கொள்ள 'டால் அல்லது சட்னி ' நல்லா இருக்கும்
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
Comment