சுலபமாக செய்யக்கூடிய தால் வகைகளை இங்கே சொல்லியுள்ளேன்...இனி, கொஞ்சம் மெனக்கெட்டு பண்ணக்கூடியவைகள் இதோ வருகின்றன....
தால் மாக்கனி / Dal Makhani:
இது முழுக்க முழுக்க ப்ரோடீன் நிறைந்தது. ரெண்டு விதங்களில் செய்யும் வகைகளைப் பார்க்கலாம்.
முதல் வகை:
ஒரு கப் கருப்பு உளுந்து, கால் கப் ராஜ்மா என்கிற கிட்னி பீன்ஸ் முதல் நாளே தனித்தனியாக ஊற விடவும். உளுந்து மட்டும் ஆறு மணிநேரம் ஊறினால் போதும் என்பதால் செய்வதற்கு ஆறுமணி நேரம் முன்பு ஊற விடவும்.
ஒரு துண்டு இஞ்சியைத் துருவி வைக்கவும். அதில் அரை ஸ்பூன் துருவலை மட்டும் எடுத்து ஊறின பருப்புகளுடன் சேர்த்து ஊறின நீருடனேயே கொஞ்சம் மஞ்சள் தூள், கொஞ்சம் உப்பு சேர்த்து குக்கரில் வேக விடவும்.
அதற்குள் ஒரு கப் தக்காளித் துண்டங்களை தயாராக வைக்கவும். தக்காளி + மீதியுள்ள இஞ்சி துருவல் + ரெண்டு பச்சை மிளகாய்கள் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் ஜீரகம் தாளித்து, அரைத்த விழுதைக் கொட்டி, அரை ஸ்பூன் அல்லது காரத்துக்கேற்ற சிவப்பு மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறவும். முதலில் விட்ட நெய் வெளியில் வந்ததும் வெந்த பருப்புகளைக் கொட்டி உப்பு, (பருப்புகள் வேகும் போதும் கொஞ்சம் உப்பு போட்டுள்ளதால் இப்போது கவனமாக போடவேண்டும்) சேர்த்து எல்லாம் ஒன்றாகக் கலந்ததும் இறக்கி ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணையும் ஒரு ஸ்பூன் கரம் மசாலாதூளும் சேர்த்து வைக்கவும்.
இதில் பருப்பை மசிக்க வேண்டியதில்லை, ராஜ்மா முழுதாகத் தெரியவேண்டும்.
ரெண்டாவது வகை:
இதில் ராஜ்மா கால் கப் என்றால் கருப்பு உளுந்து அரை கப் + வெள்ளை உளுந்து ஒரு டேபிள்ஸ்பூன் + கடலைப்பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன் போதும். ராஜ்மாவை முதல் நாளும் மீதிப் பருப்புகளை தால் மாக்கனி பண்ணுவதற்கு நாலு மணிநேரம் முன்பும் ஊற விடலாம்.
முதலில் ராஜ்மாவை குக்கரில் போட்டு அரை வேக்காடுக்கு வேக விடவும். அதாவது ஒரு விசில் வந்ததும் அணைத்துவிடவும். பிரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து மீதி பருப்புகளை ஊறின நீருடன் சேர்த்து பொடியாக நறுக்கின இஞ்சி ஒரு துண்டு மற்றும் காரத்துக்கு தேவையான பச்சை மிளகாய்களையும் (விதை நீக்கி பொடியாக நறுக்கி) சேர்த்து மறுபடி நன்றாக வேகும்படி மூன்று அல்லது நான்கு விசில் வரும் வரை வைக்கவும்.
வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து சீரகம், பொடியாக நறுக்கின ஒரு தக்காளி, அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் மிளகாய் தூள், தனியாதூள் சேர்த்து வதக்கவும். வெந்த பருப்புகளையும் அடுத்துச் சேர்த்து கரண்டியால் நன்றாக மசித்துவிடவும். இது பருப்பே தெரியாமல் குழைந்திருக்கும்படி மசிக்கவேண்டும்.
கொதித்து குழம்பு போல் ஆனதும் சுவைக்குத் தகுந்த உப்பு, கரம் மசாலா தூள் ஒரு ஸ்பூன் சேர்த்து அரை கரண்டி வெண்ணெய் சேர்த்து இறக்கவும். மேலே கொத்தமல்லி தழைகள் நறுக்கித் தூவி ஒரு ஸ்பூன் பிரெஷ் க்ரீமும் போட்டு வைக்கவும். இது பெயருக்குத் தகுந்தபடி வெண்ணை போல இருக்கும். சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ் இது.
அடுத்ததாக கடலைப் பருப்பில் பண்ணும் ஒரு வித மசாலாவைப் பார்க்கலாம்.
சன்னா தால் மசாலா:
இது கடலைப்பருப்பில் செய்யும் மசாலா.
ஒரு கப் கடலைப்பருப்பை அலம்பி குக்கரில் குழைய வேக விடவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு ரெண்டு ஸ்பூன் தனியா, அரை ஸ்பூன் வெந்தயம், காரத்துக்கு தகுந்த நாலைந்து சிவப்பு மிளகாய்கள் வறுத்து எடுக்கவும்.
ரெண்டு தக்காளியை பொடியாக நறுக்கி சாமான்கள் வறுத்த வாணலியிலேயே வதக்கி ஆறவிடவும்.
முதலில் சாமான்களை மிக்சியில் போட்டு அரைத்துக்கொண்டு கடைசியில் வதக்கின தக்காளியையும் சேர்த்து அரைத்து வைக்கவும். மிக்சியை வழித்துவிட்டு வெந்த கடலைப்பருப்பையும் தனியாக அரைத்து வைக்கவும். ரொம்பவும் நைசாக அரைக்க வேண்டியதில்லை. மிக்சியை அலம்பி அந்த நீரையும் கடலைப்பருப்பு விழுதுடன் சேர்த்து நீர்க்கக் கரைத்து வைக்கவும்.
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து கறிவேப்பிலை தாளித்து, பெருங்காயம் சேர்த்து, தக்காளி விழுது சேர்த்து சுருளக் கிளறவும். நல்ல வாசனை வந்ததும் அரைத்த கடலைப் பருப்பு விழுதையும் சேர்த்துக் கொதிக்க விடவும். ஒரு சிறு கட்டி வெல்லமும் சேர்த்தால் சுவை நன்றாக இருக்கும். சுவைக்குத் தகுந்த உப்பு சேர்த்து தோசை மாவு போல பதம் வந்ததும் இறக்கி கொத்தமல்லி தழை நறுக்கி சேர்க்கவும். இது தோசைக்கும் இட்லிக்கும் சப்பாத்தி பூரிக்கும் கூட நல்ல மேட்ச் ஆக இருக்கும்.
எல்லாம் பருப்பை வைத்தே செய்து போர் அடித்துவிட்டதா? அடுத்தது சுலபமாக ஒரே ஒரு ingredient வைத்து செய்யும் Tomato Bhaji யைப் பார்ப்போம். இது ஒரு Maharastrian cuisine.
டொமாடோ பாஜி/ Tomato Bhaji:
இதற்கு தக்காளி பழமாகவோ அல்லது பச்சையாய் காயாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
பழங்கள் என்றால் நிறம் அழகாயிருக்கும். ஆனால் காய் என்றால் சுவை அதிகம் பிடிக்கும்.
நறுக்கிய தக்காளி நாலு கப் தேவை. (அம்மாடியோவ்...அப்படின்னா தக்காளி விலை மலிவான காலத்தில் பண்ணலாமே....) இந்த அளவுக்கு லேசாக சிவக்க வறுத்த தேங்காய் துருவல் கால் கப் மற்றும் வறுத்து தோல் நீக்கி கரகரப்பாக அரைத்த வேர்க்கடலைப் பொடி கால் கப் தேவை. கடலையை வறுத்து அரைத்து வைக்கவும். தேங்காயை துருவி ஈரம் போக வறுத்து வைக்கவும்.
காரத்துக்கு வேண்டிய பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், அரை ஸ்பூன் மஞ்சள் பொடி, நறுக்கின பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து நறுக்கின தக்காளி துண்டுகளையும் சேர்த்து வதக்கவும். பாதி வதங்கும் போதே ஒரு துண்டு வெல்லமும், சுவைக்கு தகுந்த உப்பும் போடவும். (காரத்துக்கு பச்சை மிளகாய் மட்டும்தான் என்பதால் உப்பு கவனமா சேர்க்கவும்) இது கொஞ்சம் கெட்டியாக இருக்கும் என்றால் நீர் விட்டு வேக விடலாம். அடுத்து வேர்க்கடலை பொடியையும் வறுத்த தேங்காயையும் போடும்போது பாஜி கெட்டிப்படும். தக்காளி நன்றாக வதங்கி mash ஆனதும் வேர்கடலைப் பொடியும் தேங்காய் பூவும் சேர்த்து இறக்கி கொத்தமல்லி தழை தூவி வைக்கவும்.
நிமிடத்தில் தயாராகும் தக்காளி பாஜி.
சரி, சப்பாத்தி என்றால் கூட உருளைக்கிழங்குதான் நினைவுக்கு வரும். ஆனால் கிழங்கு கைவசம் இல்லாதபோது ஆத்தில் இருக்கும் சாமான்களை வைத்தே இன்னொரு சப்ஜி பண்ணலாமா? குழந்தைகள் இருந்தால் ரொம்பவும் விரும்புவார்கள். பள்ளிக்கு லஞ்ச் போலத் தந்தால் மிச்சம் மீதி வைக்காமல் சாப்பிடுவார்கள். பெரியவர்களான நாம் மட்டும் சளைத்தவர்களா என்ன? ஒரு பிடி பிடிக்கலாம்.
அவசர சப்ஜி:
ரெண்டு தக்காளிகளையும் தோலோடு (விதை மட்டும் நீக்கி) பொடியாக நறுக்கவும்.
காரத்துக்கு தேவையான பச்சை மிளகாய்களை பொடியாக நறுக்கவும்.
ரெண்டு ஸ்பூன் அளவு நறுக்கின கோஸ் தயாராக இருக்கட்டும். (இங்கே கோஸ் தான் வெங்காயத்தின் ரோலைப் பண்ணப்போகிறது)
வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு சோம்பு, சீரகம், பெருங்காயம் தாளித்து பச்சை மிளகாய் துண்டுகள், நறுக்கின தக்காளி இவைகளை போட்டு கால் ஸ்பூன் உப்பும் போட்டு வதக்கவும். உப்பு போட்டுவிட்டால் தக்காளி உடனே வதங்கிவிடும். கடைசியில் சேர்க்கும் உப்பில் கால் ஸ்பூன் அளவு குறைத்துக் கொள்ளலாம்.
எல்லாம் சேர்த்து வதங்கியதும் பச்சைப் பட்டாணி மற்றும் கோஸ் சேர்த்து ஒரு முறை மசால் நன்றாகக் கலக்கும்படி கிளறி விட்டு வேண்டிய நீர் விட்டு மூடி வைக்கவும். ஐந்து நிமிடத்தில் காய், பட்டாணி வெந்து முதலில் சேர்த்த எண்ணெய் சுற்றிலும் மிதக்கும். அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியாதூள், சீரகத்தூள், ஒரு ஸ்பூன் கசூரி மேத்தி, அரை ஸ்பூன் கரம் மசாலா, மற்றும் உப்பு சேர்த்து வெந்த பருப்பும் சேர்த்து சப்ஜி தேவையான consistancyக்கு வந்ததும் கால் கப் பால் விட்டு இறக்கவும். மேலே கொத்தமல்லி நறுக்கி சேர்த்து அலங்கரிக்கவும்.
எந்த ஒரு சப்ஜியையும் ரிச் ஆக்க கடைசியில் கால் கப் காய்ச்சின பால் (அல்லது பாலில் ஏடு படிந்தால் பிடிக்காது என்பவர்கள் அதை ஸ்பூனால் கடைந்து சேர்க்கலாம்) சேர்த்து இறக்கவும்.
குறிப்பு:
இப்போதெல்லாம் பச்சைப் பட்டாணி காய்கறிக் கடைகளிலேயே எல்லா சீசனிலும் கிடைக்கிறது. பெரிய சூப்பர் மார்கெட்டுகளில் Frozen Green Peas என்று பாக்கெட்டில் விற்கிறார்கள். குழந்தைகள் உள்ள வீடுகளில் இது கைவசம் இருந்தால் அவசரத்துக்கு கை கொடுக்கும். பச்சைப் பட்டாணியை சீசன் உள்ள காலத்தில் கொதிநீரில் போட்டு அரைவேக்காடு வெந்ததும் வடிகட்டி குளிர் நீரில் போட்டுவிட்டால் பட்டாணி தொடர்ந்து வேகுவது நிற்கும். இதை Blanching என்று சொல்லுவார்கள். மறுபடி சமைக்கும்போது ஏற்கனவே வெந்தது என்பதால் மிகவும் துரிதமாக வேலை முடியும்.
பட்டாணி வேண்டாம் என்றால் பச்சைப் பயறு அல்லது காராமணியை ஊறவைத்து சேர்க்கலாம்.
இன்றைக்கு இவ்வளவு போதும்...இனி கிரேவியுடன் பண்ணும் சப்ஜிகளைப் பற்றி அடுத்ததாகப் பார்க்கலாம்.

What is Fresh Cream? How can I substitute that?
பிரெஷ் க்ரீம் என்றால் நம்மாத்தில் காய்ச்சின பால் மேலே திரளும் ஏடுகளை சேர்த்து வைப்பதுதான். தினமும் இப்படி ஏடுகளை எடுத்து பிரிட்ஜில் வைத்து வருவதுதான் (இது போல உணவுகளை செய்யும்போது, அதை முள் கரண்டி அல்லது whiskஆல் நுரைக்கக் கலந்து மேலே சேர்க்கலாம்) ஆங்கிலத்தில் பிரெஷ் க்ரீம் என்றும் ஹிந்தியில் மலாய் என்றும் சொல்கிறார்கள். இதற்கு எங்கே போவது என்பவர்கள் ஒரு ஸ்பூன் வெண்ணெயை ஒரு அல்லது ரெண்டு ஸ்பூன் பாலுடன் கலந்து குழைத்துவிட்டால் ரெடிமேட் பிரெஷ் க்ரீம் கிடைக்கும்.

குழந்தைகள் இருந்தால் தக்காளி வதங்கியதும் ரெண்டு ஸ்பூன் Tomato Puree சேர்க்கவும். கடையில் வாங்கும் டொமாடோ புரியில் நிறம் அழகாக இருக்கும். இது இல்லையென்றால் கொஞ்சம் டொமாடோ கெட்சப் சேர்க்கலாம்.

Comment