Announcement

Collapse
No announcement yet.

பாம்பே சட்டினி-சப்பாத்தி-பூரிக்கு

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பாம்பே சட்டினி-சப்பாத்தி-பூரிக்கு

    பம்பாய் சட்டினி
    இதோ எனக்குபிடித்த ஒரு side dish .
    அரை கப் கடலை மாவை இரண்டு கப் தண்ணீரில் கட்டி இல்லாமல் நன்கு கரைத்துக்கொள்ளவும் .
    ஒரு வாணலியில் எண்ணெய் காய்ச்சி அதில் கடுகு உளுத்தம் பருப்பு பெருங்காயம் போட்டு வெடிக்க விடவும்
    பிறகு நான்கு மிளகாய் களை சிறு துண்டுகளாக நறுக்கி நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளித்துண்டுகளை யும் கருவேப்பிலை யை கிள்ளி சேர்த்து தண்ணீர் விட்டு வேகவிடவும் . வெந்தவுடன் கடலை மாவுக்கலவையை சேர்த்து அதில் வேண்டிய அளவு உப்பு மஞ்சள் போடி போட்டு கொதிக்கவிடவும் கடலை மாவு நன்கு வெந்தவுடன் பம்பாய் சட்டினி தயார் . இதில் முக்கியமாக கடலைமாவை கட்டியில்லாமல் கரைக்கவேண்டும்.
    இந்த சட்டினி பூரி மற்றும் சப்பாத்தி க்கு தொட்டுக்கொள்ள ருசியாக இருக்கும் . உருளைக் கிழங்கை தவிர்ப்பவர்களுக்கு ஒரு நல்ல சைட் டிஷ் .

    ப்ரஹ்மண்யன்
    பெங்களூரு

  • #2
    Re: சப்பாத்தி பூரிக்கு தொட்டுக்கொள்ள ...

    Originally posted by Brahmanyan View Post
    பம்பாய் சட்டினி
    இதோ எனக்குபிடித்த ஒரு side dish .
    ப்ரஹ்மண்யன்
    பெங்களூரு
    ஹலோ ப்ரஹ்மண்யன் சார்,
    இத இத இதத்தான் நான் ரொம்ப நாளா எதிர்பார்த்துண்டிருந்தேன்.
    எல்லாருக்கும் உருளைக்கிழங்கு பிடிக்கும்,
    அடியேனுக்கு சுத்தமா உருளைக் கிழங்கு பிடிக்கவும் பிடிக்காது, ஒத்துக்கவும் ஒத்துக்காது.

    ஆனா இதுல வெங்காயம் சேர்கணும்னு போட்டிருக்கே?!
    இது வெங்காயம் இல்லாம எங்கேயோ யாரோ பண்ணி பார்த்த ஞாபகம்!
    தெரியலை? பார்ப்போம் இன்னிக்கு எங்காத்துல பூரி பண்ணச்சொல்லி,
    வெங்காயம் இல்லாம இந்த சட்டினியை பண்ணிப் பார்க்கவேண்டும்.
    ஏன்னா இதுல கடலை மாவைத் தவிர விவகாரமான (காரம் போன்ற) ஐடம் எதுவும் இல்லை
    பாருங்கோ!
    ரொம்ப நன்றி!
    என்.வி.எஸ்


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: சப்பாத்தி பூரிக்கு தொட்டுக்கொள்ள ...

      ஸ்ரீ N V S அவர்களுக்கு

      இந்த பம்பாய் சட்டினியை வெங்காயம் இல்லாமலும் செய்யலாம் . இன்று இரவு பூரி பலகாரத்துக்கு நம்ம ஆத்திலும் எனக்கும் சஹதர்மிணிக்கும் பம்பாய் சட்டினி தான் மற்றவர்களுக்கு வெங்காய உருளைக்கிழங்கு மசால். ஒரு திருத்தம் வெங்காயம் சேர்க்கும் பக்ஷத்தில் பெருங்காயம் வேண்டாம் என்கிறார் எனது மனைவி .
      நமஸ்காரம்
      ப்ரஹ்மண்யன்,
      பெங்களூரு .

      Comment


      • #4
        Re: சப்பாத்தி பூரிக்கு தொட்டுக்கொள்ள ...

        Originally posted by Brahmanyan View Post
        ஸ்ரீ N V S அவர்களுக்கு

        இந்த பம்பாய் சட்டினியை வெங்காயம் இல்லாமலும் செய்யலாம் . இன்று இரவு பூரி பலகாரத்துக்கு நம்ம ஆத்திலும் எனக்கும் சஹதர்மிணிக்கும் பம்பாய் சட்டினி தான் மற்றவர்களுக்கு வெங்காய உருளைக்கிழங்கு மசால். ஒரு திருத்தம் வெங்காயம் சேர்க்கும் பக்ஷத்தில் பெருங்காயம் வேண்டாம் என்கிறார் எனது மனைவி .
        நமஸ்காரம்
        ப்ரஹ்மண்யன்,
        பெங்களூரு .
        ரொம்ப சரி சார், வெங்காயம் போட்டா பெருங்காயம் போட வேண்டாம் தான் Thanks for sharing .

        NVS மாமா, நீங்க சொல்வது போல வெங்காயம் இல்லாமலும் இந்த சைடு டிஷ் நன்னா இருக்கும்
        என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

        http://eegarai.org/apps/Kitchen4All.apk

        http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

        Dont work hard, work smart

        Comment

        Working...
        X