மாங்காய் மருந்துக் குழம்பு:
இந்த தளத்துக்கு நான் புதியவள். இனி என்னுடைய சில சின்னச்சின்ன சமையல் குறிப்புகளுடன் வருகிறேன்.
முதலில் சீசனுக்கேத்த குழம்பு செய்முறையை இங்கே பகிர்கிறேன்.
தேவையான பொருள்கள்:
மாங்காய் தோல் சீவி துருவியது – சுமார் 4 ஸ்பூன்; அல்லது காய்ந்த மாங்காய் துண்டுகள் – 10 ;
புளி – சின்ன நெல்லியளவு எடுத்து ஊறவைத்து கரைத்துக்கொள்ளவும்.
உப்பு – தேவையானது;
மஞ்சள் தூள் – ½ Teaspoon;
பெருங்காயம் – ஒரு சிறு துண்டு;
வறுத்து அரைக்க வேண்டியவை:
- மிளகு – 1 ½ Tablespoon;
- கடலைப்பருப்பு - ¾ Tablespoon;
- உளுத்தம்பருப்பு - ¾ Tablespoon;
- அரிசி - 1 teaspoon;
- சுக்குப்பொடி - 1 teaspoon; அல்லது இஞ்சி – 1 துண்டு;
- குச்சி திப்பிலி அல்லது தேசாவரம் - 4 or 5 sticks;
- அரிசி திப்பிலி - 7 or 8 Pieces;
- காய்ந்த மிளகாய் - 3 to 5; அல்லது அவரவர் காரத்துக்கு தகுந்தது.
- கறிவேப்பிலை – ரெண்டு ஆர்க்கு;
செய்முறை:
சுக்குபொடி அல்லது இஞ்சி தவிர மேலே சொன்ன எல்லாவற்றையும் வறட்டு வாணலியில் பொன்னிறமாக வறுக்கவும்.
வறுத்த சாமான்களை மிக்சியில் நைசாக அரைக்கவும்.
இந்தப் பொடியுடன் மாங்காய் துருவலைக் கடைசியில் சேர்த்து சிறிது புளி ஜலத்தையே விட்டு கடைசியாக அரைக்கவும். இப்போது சீசன் என்பதால் மாங்காயை துருவி அரைக்கலாம். காய்ந்த மாங்காய் துண்டுகள் என்றால் சற்று வெந்நீரில் ஊறவைத்து அரைக்கலாம்.
வாணலியில் நல்லெண்ணெய் + நெய் தலா ஒரு ஸ்பூன் விட்டு கடுகு தாளித்து கரைத்த புளி ஜலம், மஞ்சள் தூள், பெருங்காயம் மற்றும் உப்பு சேர்க்கவும். இஞ்சிக்கு பதில் சுக்குப் பொடி சேர்ப்பது என்றாலும் இப்போது சேர்க்கலாம்.
அரைத்த விழுதையும் கொட்டி தேவையான அளவுக்கு விளாவி கொதிக்கவிடவும்.
நன்றாகக் கொதித்து பச்சை வாசனை போனதும் இறக்கி மேலே ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு இறக்கவும்.
ஒரு வாரம் ஆனாலும் கெடாது இந்தக் குழம்பு.
சுலபமாக செய்ய டிப்ஸ்:
மேலே சொன்ன படி சாமான்களை வறுத்து அரைத்துக்கொள்ளவும்.
சின்ன குக்கரில் நெய்+ எண்ணெய் எடுத்து கடுகு தாளித்து, புளி ஜலம் + அரைத்த விழுது, மற்றும் உப்பு மஞ்சள்தூள் etc. வைப் போட்டு தேவையான அளவுக்கு விளாவி குக்கரை மூடி சரியாக ரெண்டு விசில் வரும்வரை வைக்கவும்.
திறந்தால் எண்ணெய் மிதக்க மாங்காய் மருந்து குழம்பு ரெடி. வேலை மிகவும் சுலபம்.

குறிப்பு:
அரிசியும் சேர்த்து வறுப்பதால் குழம்பு கெட்டியாகவே இருக்கும்.
புளி கொஞ்சம் கூட வேண்டாம் என்பவர்கள் மாங்காய் துருவலையே ரெண்டுபங்காக சேர்க்கலாம்.
அதிக புளிப்பு வேண்டாதவர்கள் மாங்காயை ஊறுகாய் போட்டுவிட்டு கொட்டைப்பகுதியை மட்டும் குழம்பில் அரைக்காமல் அப்படியே போடலாம். குழம்பு கொதித்ததும் மறக்காமல் கொட்டையை தூர எறிந்துவிடவும்.

Comment