Announcement

Collapse
No announcement yet.

சப்பாத்தி பூரிக்கு தொட்டுக்கொள்ள ...

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • #16
    Re: சப்பாத்தி பூரிக்கு தொட்டுக்கொள்ள ...

    Sri:
    click the thread tools menu
    then click the sub menu printable


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #17
      Re: ஆலு மேத்தி சப்ஜி

      Originally posted by krishnaamma View Post
      தேவையானவை :

      1 /2 கிலோ உருளைக்கிழங்கு
      1 பெரிய கட்டு வெந்தயக்கீரை
      காரத்திற்கு தேவையான மிளகாய் பொடி அல்லது பச்சை மிளகாய்
      சுமதி அக்கா,
      வணக்கம்.
      நேற்று நீங்கள் இதில் சொன்னபடி பண்ணினேன்.
      சப்பாத்திக்கு தொட்டுக்கொண்டு எல்லோரும் சாப்பிட்டார்கள்.
      மிக மிக நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள்.
      (இன்றைக்கும் ஏன் பண்ணவில்லை என்று கேட்டார்கள் - தொடர்ந்து பண்ணலேன்னா மறந்துடுவேனாம்?)

      சாப்பிட்டு கொஞ்ச நாழி வரைக்கும் ஏப்பம் வந்தா ஏலக்கா வாசனை வரது!
      இன்னிக்கும் நெறையா போட்டுருக்கேளா?
      பாக்க நாழி இல்லை, நாளைக்கு பாக்கறேன்.
      நன்றி!
      லக்ஷ்மி

      Comment


      • #18
        Re: சப்பாத்தி பூரிக்கு தொட்டுக்கொள்ள ...

        Superb side dishes! Thank you very much for the recipes

        Comment


        • #19
          Re: சப்பாத்தி பூரிக்கு தொட்டுக்கொள்ள ...

          Originally posted by Priya Radhi View Post
          All are very good. But how to download it or make it a PDF file. There are restrictions in referring to computer at the time of preparation and only a print version is handy to keep at the time of preparation. Admin/Mod please provide a link for print/pdf creation. Many thanks for providing these recepies
          Dear Priya, NVS Mama made suitable arrangements for you to take PDF so dont worry, take prints as much as you want and enjoy cooking
          And thanks for your complements
          என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

          http://eegarai.org/apps/Kitchen4All.apk

          http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

          Dont work hard, work smart

          Comment


          • #20
            Re: ஆலு மேத்தி சப்ஜி

            Originally posted by K S Lakshmi View Post
            சுமதி அக்கா,
            வணக்கம்.
            நேற்று நீங்கள் இதில் சொன்னபடி பண்ணினேன்.
            சப்பாத்திக்கு தொட்டுக்கொண்டு எல்லோரும் சாப்பிட்டார்கள்.
            மிக மிக நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள்.
            (இன்றைக்கும் ஏன் பண்ணவில்லை என்று கேட்டார்கள் - தொடர்ந்து பண்ணலேன்னா மறந்துடுவேனாம்?) ha ha haa

            சாப்பிட்டு கொஞ்ச நாழி வரைக்கும் ஏப்பம் வந்தா ஏலக்கா வாசனை வரது!
            இன்னிக்கும் நெறையா போட்டுருக்கேளா?
            பாக்க நாழி இல்லை, நாளைக்கு பாக்கறேன்.
            நன்றி!
            லக்ஷ்மி

            waaw! super !! I am so happy lakshmi good to hear that all your family members like that dish

            ஒரு சின்ன request lakshmi ........ request தான், சுமதி என்று சொல்லி கூப்பிடுவதை விட என்னை க்ருஷ்ணாம்மா என்று கூப்பிட்டால் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். என் பையன் பேர் கிருஷ்ணா, அவன் friends அம்மாக்கள் க்ருஷ்ணாம்மா,க்ருஷ்ணாம்மா ...என்று கூப்பிட்டு கூப்பிட்டு பழக்கமாகி விட்டது, காதுக்கு அந்த பரமாத்மா பேரை கேட்டு கேட்டு சந்தோஷமாகி விட்டது. என் சொந்த பேரே மறந்து விட்டது. நிஜம் மாமா நான் என்னை Mrs Sundar என்று அல்லது க்ருஷ்ணாம்மா என்றோ தான் சொல்லி அறிமுகப்படுத்திக்கொள்வது வழக்கமாகி விட்டது அதனால் தவறாக நினைக்கவேண்டாம். OK ya ?
            என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

            http://eegarai.org/apps/Kitchen4All.apk

            http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

            Dont work hard, work smart

            Comment


            • #21
              Re: சப்பாத்தி பூரிக்கு தொட்டுக்கொள்ள ...

              Originally posted by pamrang View Post
              Superb side dishes! Thank you very much for the recipes

              Thank you very much for your feedback
              என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

              http://eegarai.org/apps/Kitchen4All.apk

              http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

              Dont work hard, work smart

              Comment


              • #22
                Re: ஆலு மேத்தி சப்ஜி

                Originally posted by K S Lakshmi View Post
                சுமதி அக்கா,
                வணக்கம்.
                நேற்று நீங்கள் இதில் சொன்னபடி பண்ணினேன்.
                சப்பாத்திக்கு தொட்டுக்கொண்டு எல்லோரும் சாப்பிட்டார்கள்.
                மிக மிக நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள்.
                (இன்றைக்கும் ஏன் பண்ணவில்லை என்று கேட்டார்கள் - தொடர்ந்து பண்ணலேன்னா மறந்துடுவேனாம்?)

                சாப்பிட்டு கொஞ்ச நாழி வரைக்கும் ஏப்பம் வந்தா ஏலக்கா வாசனை வரது!
                இன்னிக்கும் நெறையா போட்டுருக்கேளா?
                பாக்க நாழி இல்லை, நாளைக்கு பாக்கறேன்.
                நன்றி!
                லக்ஷ்மி
                அது சரி, நீங்க ஆலு சன்னா தானே பண்ணிங்க? இதில் ('ஆலு மேத்தி' இல்) ஏலக்காய் கிடையாதே?
                என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                http://eegarai.org/apps/Kitchen4All.apk

                http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                Dont work hard, work smart

                Comment


                • #23
                  பயத்தம் பருப்பு டால்

                  தேவையானவை :

                  1 கப் பயத்தம் பருப்பு (நன்கு வேக வைக்கவும்.)
                  2 பெங்களூர் தக்காளி (விதை நீக்கி நறுக்கி வைக்கவும் )
                  4 - 5 பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கவும் )
                  1 உருளைக்கிழங்கு ( வேகவைத்து சிறு துண்டங்களாக்கவும் )
                  உப்பு
                  கொஞ்சம் எண்ணெய்
                  கடுகு , சீரகம் கொஞ்சம்
                  மஞ்சள் பொடி கொஞ்சம்
                  பெருங்காயம் ஒரு சிட்டிகை
                  கறிவேப்பிலை , கொத்துமல்லி கொஞ்சம்.
                  தேவையானால் இஞ்சி துருவியது கொஞ்சம்.

                  செய்முறை:

                  வாணலி இல் எண்ணெய் விட்டு,கடுகு , சீரகம்,மஞ்சள் பொடி,பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.
                  நறுக்கி வைத்துள்ள தக்காளியை போட்டு வதக்கவும்.
                  பிறகு உருளைக்கிழங்கு துண்டுகளைப்போடவும் .
                  நன்கு வதக்கவும்.
                  வெந்த பருப்பை இதில் கொட்டவும.
                  கொஞ்சம்கொதித்ததும் உப்பு போடவும்.
                  பிறகு கறிவேப்பிலை , கொத்துமல்லி தூவி இறக்கவும்.
                  'பயத்தம் பருப்பு டால் ' தயார். சப்பாத்தி க்கு ரொம்ப நல்லா இருக்கும்.

                  குறிப்பு: உருளைக்கிழங்கு வேண்டாதவா தவிர்க்கலாம் .
                  என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                  http://eegarai.org/apps/Kitchen4All.apk

                  http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                  Dont work hard, work smart

                  Comment


                  • #24
                    Mixed Daal

                    தேவையானவை :

                    1 டேபிள் ஸ்பூன் பயத்தம் பருப்பு
                    1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
                    1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
                    1 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
                    4 - 5 பச்சை மிளகாய் (இரண்டாக நறுக்கவும் )
                    உப்பு
                    2 டேபிள் ஸ்பூன் நெய்
                    1 டீ ஸ்பூன் கடுகு
                    1 டேபிள் ஸ்பூன் சீரகம் கொஞ்சம்
                    மஞ்சள் பொடி கொஞ்சம்
                    கறிவேப்பிலை , கொத்துமல்லி கொஞ்சம்.
                    1 டேபிள் ஸ்பூன் இஞ்சி துருவியது
                    2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு

                    செய்முறை:

                    எல்லா பருப்புகளையும் ஒன்றாக போட்டு, நன்கு களைந்து குக்கரில் வைக்கவும்.
                    மூன்று நான்கு விசில் வரட்டும்.
                    வாணலி இல் நெய் விட்டு,கடுகு , சீரகம்,மஞ்சள் பொடி, இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.
                    கடைந்த ,வெந்த பருப்பை இதில் கொட்டவும.
                    கொஞ்சம்கொதித்ததும் உப்பு போடவும்.
                    தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விடவும்.
                    பிறகு கறிவேப்பிலை , கொத்துமல்லி தூவி இறக்கவும்.
                    கொஞ்சம் ஆறினதும் எலுமிச்சை சாறு விட்டு கலக்கவும்.
                    'Mixed Daal ' தயார். சப்பாத்திக்கு ரொம்ப நல்லா இருக்கும்.
                    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                    http://eegarai.org/apps/Kitchen4All.apk

                    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                    Dont work hard, work smart

                    Comment


                    • #25
                      Daal Fry with Channa Dal

                      தேவையானவை :

                      1 கப் கடலை பருப்பு
                      2 பெங்களூர் தக்காளி ( விதை நீக்கி நறுக்கவும் )
                      1 டேபிள் ஸ்பூன் தனியா பொடி
                      1 /2 ஸ்பூன் ஆம்சூர் அதாவது மாங்காய் பொடி
                      1 /2 ஸ்பூன் மிளகாய் பொடி
                      உப்பு
                      1 டேபிள் ஸ்பூன் வெண்ணை
                      1 டீ ஸ்பூன் கரம் மசாலா
                      1 டீ ஸ்பூன் சீரகம் கொஞ்சம்
                      மஞ்சள் பொடி கொஞ்சம்
                      கொத்துமல்லி கொஞ்சம்.
                      ஒரு சிட்டிகை சோடா உப்பு

                      செய்முறை:

                      கடலைப்பருப்பை நன்கு களைந்து சோடா உப்பு, மஞ்சள் பொடி மற்றும் ஒரு தக்காளி போட்டு குக்கரில் வைக்கவும்.
                      மூன்று நான்கு விசில் வரட்டும்.
                      வாணலி இல் வெண்ணை போட்டு சீரகம், பச்சை மிளகாய், தக்காளி போட்டு தாளிக்கவும்.
                      வெந்த பருப்பை இதில் கொட்டவும.
                      கொஞ்சம்கொதித்ததும் உப்பு , ஆம்சூர், கரம் மசாலா, தனியா பொடி எல்லாம் போடவும்.
                      தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விடவும்.
                      பிறகு கொத்துமல்லி தூவி இறக்கவும்.
                      'Daal Fry' தயார்.
                      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                      http://eegarai.org/apps/Kitchen4All.apk

                      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                      Dont work hard, work smart

                      Comment


                      • #26
                        துவரம் பருப்பு டால்

                        தேவையானவை :

                        1 கப் துவரம் பருப்பு
                        1 பெங்களூர் தக்காளி ( விதை நீக்கி நறுக்கவும் )
                        2 பச்சை மிளகாய் ( இரண்டாக நறுக்கவும்)
                        1 /2 ஸ்பூன் மிளகாய் பொடி
                        1 /2 ஸ்பூன் துருவின இஞ்சி
                        உப்பு
                        1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
                        1 டீ ஸ்பூன் சீரகம்
                        1 டீ ஸ்பூன் கடுகு
                        1 டீ ஸ்பூன் தனியா
                        மஞ்சள் பொடி கொஞ்சம்
                        வறுத்து அரைத்த வெந்தயப்பொடி கால் ஸ்பூன்
                        1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கின கொத்துமல்லி
                        1 டேபிள் ஸ்பூன் புளி பேஸ்ட்

                        செய்முறை:

                        துவரம்பருப்பை நன்கு களைந்து மஞ்சள் பொடி மற்றும் தக்காளி போட்டு குக்கரில் வைக்கவும்.
                        மூன்று நான்கு விசில் வரட்டும்.
                        வாணலி இல் எண்ணெய் விட்டு சீரகம், கடுகு , முழு தனியா போட்டு தாளிக்கவும்.
                        பச்சை மிளகாய், இஞ்சி போட்டு வதக்கவும்.
                        பிறகு வெந்த பருப்பை இதில் கொட்டவும.
                        கொஞ்சம்கொதித்ததும் உப்பு , புளி பேஸ்ட் , மிளகாய் பொடி , வெந்தயப்பொடி எல்லாம் போடவும்.
                        தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விடவும்.
                        ஒரு ஐந்து நிமிடம் கொதிக்கட்டும்.
                        பிறகு கொத்துமல்லி தூவி இறக்கவும்.
                        துவரம் பருப்பு டால் தயார்.
                        ரொட்டி, சாதம் மற்றும் புலவு வகைகளுக்கு நல்லா இருக்கும்.
                        என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                        http://eegarai.org/apps/Kitchen4All.apk

                        http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                        Dont work hard, work smart

                        Comment

                        Working...
                        X