இந்த திரி இல் , எல்லாவிதமான "Side Dishes" அதாவது டிபனுக்கு தொட்டுக்கொள்பவற்றை பார்போம். இவைகளை இட்லி, தோசை , உப்ப்மா சப்பாத்தி மற்றும் பூரி கு தொட்டுக்கொள்ளல்லாம். இவைகளில் சோம்பு , பூண்டு மற்றும் வெங்காயம் இருக்காது. எனவே கவலைப்படாமல் சமைத்து பரிமாறி மற்றும் ருசித்து மகிழுங்கள். இது நம் லக்ஷ்மி இன் வேண்டுகோளுக்கிணங்க துவங்கப்பட்ட திரி
Announcement
Collapse
No announcement yet.
சப்பாத்தி பூரிக்கு தொட்டுக்கொள்ள ...
Collapse
X
-
சப்பாத்தி பூரிக்கு தொட்டுக்கொள்ள ...
Last edited by krishnaamma; 19-09-12, 19:30.என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smartTags: இஞ்சி, இல்லை, உணவு, உருளைக்கிழங்கு, எப்படி, காரணம், சந்தோஷமாக, சாப்பிட, தக்காளி, தொடர், தோசை, பரமாத்மா, புளி பேஸ்ட், மாங்காய, மோர், ராம, வேண்டியவை, all, are, but, center, com, computer, download, for, good, how, how to, http, img, krish, lakshmi, make, many, only, pdf, please, quot, recipes, request, thanks, there, these, time, very, water, you
-
"மேத்தி மலாய் மசாலா " (பனீர் சேர்த்தது )
தேவயானவை :
பனீர் - 250 கிராம் ( துண்டமாக்கவும்)
காய்ந்த மேத்தி இலைகள் ( கசூர் மேத்தி - கடைகளில் கிடைக்கும் ) - 2 டேபிள் spoon
மலாய் ( பால் ஏடு) - 4 டேபிள் ஸ்பூன்
முந்திரி விழுது - 1/2 கப்
மிளகு பொடி - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
பால் - 1/2 கப்
எண்ணை - 2 ஸ்பூன்
உப்பு
தண்ணீர் 1/4 கப்
செய்முறை:
ஒரு வாணலி இல் எண்ணை விட்டு சீரகம் போடவும்.
அது பொரிந்ததும் , வெந்தய கீரையை கையால் நொறுக்கி போடவும்.
ஒரு கிளறு கிளறி, முந்திரி விழுது, பால் ஏடு போட்டு நன்கு கிளறவும்.
எண்ணை பிரிந்து வரும்வரை நன்கு வதக்கவும்.
உப்பு மற்றும் மிளகு தூள் போடவும்.
நன்கு கலக்கவும்
பிறகு பால் மற்றும் தண்ணீர் விடவும்.
நன்கு கலக்கவும் , ஒரு கொதி வந்ததும் , நறுக்கி வைத்துள்ள பனீர் துண்டங்களை
போடவும்.
மறுபடி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
சுவையான பஞ்சாபி "மேத்தி மலாய் மசாலா " தயார்.
சப்பாத்தி அல்லது 'நான்' உடன் பரிமாறவும்.
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
-
ஆலு மேத்தி சப்ஜி
தேவையானவை :
1 /2 கிலோ உருளைக்கிழங்கு
1 பெரிய கட்டு வெந்தயக்கீரை
காரத்திற்கு தேவையான மிளகாய் பொடி அல்லது பச்சை மிளகாய்
தாளிக்க
கடுகு
உளுத்தம் பருப்பு
கடலை பருப்பு
எண்ணெய்
தேவையான அளவு உப்பு
பெருங்காயப்பொடி
மஞ்சள் பொடி
செய்முறை :
உருளைக்கிழங்கை உப்பு போட்டு வேகவைக்கவும்.
தோல் உரிக்கவும் , சதுரங்களாக வெட்டி வைக்கவும்.
வெந்தயக்கீரையை நன்கு ஆய்ந்து அலசி நறுக்கவும்.
ஒரு வாணலி இல் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்குகளை போட்டு வதக்கவும்.
கொஞ்சம் வதங்கினதும், நறுக்கி வைத்துள்ள வெந்தயக்கீரையை தூவி நன்கு கிளறவும்.
எல்லாமாக ஒன்று சேர்ந்ததும் இறக்கவும்.
வெந்தய மணமாக கறியமுது ரொம்ப நல்லா இருக்கும்.Last edited by krishnaamma; 19-09-12, 19:49.என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
-
ஆலு - சன்னா
தேவையானவை :
ஒரு கப் வேகவைத்த கொத்துக்கடலை
இரண்டு கப் வேகவைத்த உருளைக்கிழங்கு
4 - 5 பச்சை மிளகாய்
ஒரு இன்ச் இஞ்சி துண்டு
ஒரு ஸ்பூன் சீரகம்
ஒரு ஸ்பூன் கடுகு
கொத்துமல்லி இலைகள் கொஞ்சம்
கறிவேப்பிலை இலைகள்
கொஞ்சம் மஞ்சள் பொடி
உப்பு
எண்ணெய்
பொடிக்க வேண்டியவை:
கொஞ்சம் மிளகு- சீரகம் , 4 ஏலக்காய், ஒரு சின்ன துண்டு லவங்க பட்டை, 4 லவங்கம் , ஒரு பிரிஞ்சி இலை எல்லாவற்றையும் பொடித்து வைத்துக்கொள்ளவும். அதிலிருந்து ஒரு சின்ன ஸ்பூன் பொடியை இந்த கறியமுதுக்கு போடவும்.
செய்முறை :
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் போட்டு தாளிக்கவும்.
கடுகு வெடித்ததும், பச்சை மிளகாய் , துருவின இஞ்சி கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வேக வைத்த கொத்துக்கடலை யை போட்டு நன்கு மசிக்கவும்.
மேலே சொன்ன பொடியை ஒரு சின்ன ஸ்பூன் போடவும்.
கொஞ்சம் தண்ணீர் விட்டு நன்கு மசிக்கவும்.
மஞ்சள் பொடி போடவும்.
கொஞ்சம் சேர்ந்தாற்போல ஆனதும் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை போடவும்.
நறுக்கி வைத்துள்ள கொத்துமல்லி மற்றும் கறிவேப்பிலையை போடவும்.
நன்கு கிளறவும்.
சேர்ந்தாற்போல ஆனதும் இறக்கவும்.
வாசனை ஆளை தூக்கும்..... ரொம்ப நல்லா இருக்கும்.
செய்து பாருங்க , பதில் போடுங்க
குறிப்பு: இதை சப்பாத்தி இல் வைத்து சுருட்டி அலுமினியம் foil இல் சுற்றி மத்தியானத்துக்கு வைக்கலாம். லஞ்ச் க்கு வைக்கலாம். ரொம்ப நல்லா இருக்கும்.என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
-
பென்கன் கா பர்த்தா
பென்கன் கா பர்த்தா அதாவது கத்தரிக்காய் கொத்சு
தேவையானவை :
ஒரு பெரிய குண்டு கத்தரிக்காய்
ஒரு பெரிய பெங்களூர் தக்காளி
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் ஒரு டேபிள் ஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி அரை ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்துமல்லி
பொடித்த சீரகம் அரை ஸ்பூன்
பொடித்த 'கரம் மசாலா' அரை ஸ்பூன்
மிளகாய் பொடி
மஞ்சள் பொடி
ஒரு சிட்டிகை பெருங்காயப்பொடி
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் (தேவையானால் )
தாளிக்க:
கடுகு
சீரகம்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் கொஞ்சம்
செய்முறை :
கத்தரிக்காயை நன்கு அலம்பி, துடைக்கவும்.
கொஞ்சம் எண்ணெய் தடவவும்.
காஸ் ஸ்டவ் இல் நெருப்பில் காட்டி சுடவும்.
எல்லா பக்கமும் நன்கு சுட திருப்பி விடவும்.
நன்கு வெந்ததும், ஒரு பெரிய பேசினில் தண்ணீர் விட்டு இத போடவும்.
ஆறினதும் தோலை எடுக்கவும்.
கையால் நன்கு பிசையவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்.
பிறகு இஞ்சி , பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
நறுக்கின தக்காளி போடவும். பெருங்காயப்பொடி, மஞ்சள் பொடி போடவும்.
நன்கு வதக்கவும்.
மிளகாய் பொடி, சிரகப்பொடி, மஞ்சள் பொடி, பொடித்து வைத்த கரம் மசாலா பொடி என எல்லாம் போடவும்.
உப்பு போடவும்.
நன்கு வதங்கினதும், கத்தரிக்காயை போடவும்.
அரை கப் தண்ணீர் விடவும்.
நன்கு கொதிக்கும் வரை அடுப்பில் இருக்கட்டும்.
அப்ப அப்ப கிளறி விடவும்.
கொத்துமல்லி தூவி இறக்கவும் .
தேவையானால் கொஞ்சம் ஆறினதும் எலுமிச்சை சாறு விடவும்.
சப்பாத்தி மற்றும் பூரிக்கு தொட்டுக்கொள்ள நல்லா இருக்கும்.
கரம் மசாலா பொடி :கொஞ்சம் மிளகு- சீரகம் , 4 ஏலக்காய், ஒரு சின்ன துண்டு லவங்க பட்டை, 4 லவங்கம் , ஒரு பிரிஞ்சி இலை எல்லாவற்றையும் பொடித்து வைத்துக்கொள்ளவும். அதிலிருந்து ஒரு சின்ன ஸ்பூன் பொடியை இந்த கறியமுதுக்கு போடவும்.Last edited by krishnaamma; 19-09-12, 21:04.என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
-
கடி பகோடா
தேவையானவை :
1 1 /2 கப் கடலை மாவு
2 ஸ்பூன் மிளகாய் பொடி
அரை ஸ்பூன் ஓமம்
ஒரு சிட்டிகை பெருங்கயப்பொடி
கால் ஸ்பூன் சோடா உப்பு
2 கப் திக்கான மோர்
அரை ஸ்பூன் வறுத்து பொடித்த வெந்தயப்பொடி
அல்லது காய்ந்த வெந்தய கீரை
கறிவேப்பிலை
உப்பு
பொரிக்க எண்ணெய்
செய்முறை:
முதலில் ஒரு பேசினில் பாக்கி ஒரு கப் கடலை மாவை போட்டு,ஓமம், சோடா உப்பு, கொஞ்சம் மிளகாய் பொடி, உப்பு போடவும்.
தண்ணீர் விட்டு பகோடா மாவு போல கரைக்கவும்.
ஒரு பக்கமாய் வைக்கவும்.
மோரை நன்கு குழப்பவும்.
உப்பு, அரை கப் கடலை மாவு, கொஞ்சம் மிளகாய் பொடி, வெந்தய பொடி அல்லது பொடித்த வெந்தய கீரை போட்டு நன்கு கலக்கவும்.
மாவு கட்டி தட்டாமல் நன்கு கலக்கவும்.
வாணலி இல் எண்ணெய் துளிவிட்டு கொஞ்சம் ஓமம் மற்றும் கறிவேப்பிலை தாளிக்கவும்.
கரைத்த மோரை அதில் விடவும்.
அது கொதிக்கட்டும். இது தான் 'கடி'
வாணலி இல் எண்ணெய் வைக்கவும்.
சூடான எண்ணெய் இல் கரைத்து வைத்துள்ள மாவை எடுத்து பக்கோடாக்கள் போல போடவும்.
நல்ல பவுன் நிறத்தில் எடுத்து , கொதித்துக்கொண்டிருக்கும் 'கடி' இல் போடவும்.
இது போல எல்லா மாவும் ஆகும் வரை செய்யவும்.
பக்கோடாக்கள் மொத்தமும் போட்டதும் ஒரு கொதி வரும் வரை காத்திருக்கவும்.
பிறகு 'கடி பகோடாவை' அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
இது ஒரு ராஜஸ்த்தானி டிஷ் , சப்பாத்திக்கு பூரிக்கு ரொம்ப நன்னா இருக்கும்.இன்று காலை எங்காத்தில் பண்ணினதுLast edited by krishnaamma; 20-09-12, 20:22.என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
-
'பனீர் '
(படம் நெட் லிருந்து எடுத்தது )
பாலாடைக்கட்டி என்பது என்று சொல்ல படுகிறது பால்லை காய்ச்சிய பின் அதன் மேல் படிவது 'பால் எடு' அது பாலாடைக்கட்டி இல்லை .
பாலில் துளி எலுமிச்சை சாறு விடவேண்டும், அப்ப பால் திரிந்து விடும், அதை ஒரு மெல்லிய மஸ்லின் துணி இல் விட்டு வடிகட்ட வேண்டும். நன்கு அழுத்தி, எல்லா நீரையும் வெளியேற்ற வேண்டும். ஒரு 2 மணி நேரம் அல்லது 3 மணி நேரம் அதிலுள்ள நீர் சொட்டும் படி செய்யவேண்டும். பிறகு ஒரு கனமான பொருளை அதன் மேல் வைக்க வேண்டும் . அப்ப கிடைப்பது தான் பாலாடைக்கட்டி.
இதைக்கொண்டு பல உணவுகள் தயாரிக்கலாம்
பாலாடைக்கட்டி பாலிலிருந்து உருவாக்கப்படும் ஒரு திட உணவாகும். அது மென்மையாகவோ கடினமாகவோ இருக்கும். அது பாலிலிருந்து தண்ணீரை வெளியேற்றுவதால் உருவாகிறது. அதிக நாள் கெடாதிருக்க பாலாடைக்கட்டி குளிர் சாதனப் பெட்டியில் வைக்கப்படுகிறது. 'பனீர்' நல்ல மிருதுவாக வர, எலுமிச்சை சாறு சேர்க்கும் போது தயிர் அல்லது 'ஃபிரெஷ் கிரீம் ' கொஞ்சம் சேர்க்கணும்.
வடிக்கட்டும் போது வெளியேறும் நீர் 'Whey Water' எனப்படும் ; அதை ஒரு 4 நாள் ஃபிரிஜ் இல் வைத்து பயன் படுத்தலாம். எதற்க்கு என்று கேட்கிறீர்களா? மீண்டும் பனீர் செய்ய அல்லது சப்பாத்தி பிசைய . சரியா?
பாலாடைக்கட்டியில் புரதச் சத்தும், கொழுப்புச் சத்தும் மிக அதிகமாக உள்ளது. மேலும் அதில் உயிர்ச்சத்து A, கால்சியம் மற்றூம் பாஸ்பரஸ் சத்துக்கள் உள்ளன.என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
-
'பனீர் சப்பாத்தி '
பனீரில் தொட்டுக்கொள்ள மட்டும் இல்லை சப்பாத்தி கூட செய்யலாம் இது எங்காத்தில் செம ஹிட் செய்வதும் சுலபம் .
தேவையானவை:
பனீர் - 200 கிராம் (நன்கு துருவிக்கொள்ளவும் )
சீரகம் 1 ஸ்பூன்
மிளகு 1 ஸ்பூன்
உப்பு
சப்பாத்தி செய்ய தேவையான மாவு
எண்ணை கொஞ்சம்
செய்முறை:
வாணலி இல் துருவின பனிரை போடவும்.
மிளகு சீரகத்தை பொடித்து போடவும்.
உப்பு போடவும்.
நன்கு கிளறவும்.
கைவிடாமல் கிளறவும்.
நல்ல ஒரு பந்து போல சுருண்டு வரும்போது அடுப்பை அனைத்து விடவும்.
இது தான் 'stuffing material' அதாவது இதைத்தான் நாம் சப்பாத்தி உள்ளே வைக்கணும்.
இதை ஒரு தட்டில் அல்லது பேசனில் வைத்துக்கொள்ளவும்; கொஞ்சம் ஆறட்டும்.
சாதாரணமாய் எப்படி சப்பாத்திக்கு மாவு கலப்பீர்களோ அப்படி கலந்து வைக்கவும்.
ஒரு 1/2 மணி கழித்து, சப்பாத்தி மாவில் கொஞ்சம் எடுத்து உருட்டி , சப்பாத்தி இடவும்.
அதன் நடுவில் செய்து வைத்துள்ள பனீர் கலவையை 1 ஸ்பூன் வைக்கவும்.
நன்கு மூடி, சப்பாத்தி யை மெல்ல இடவும்.
கல்லில் போட்டு இரு புறமும் எண்ணை விட்டு எடுக்கவும்.
அருமையான 'பனீர் சப்பாத்தி ' தயார்.
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
-
Re: சப்பாத்தி , பூரி, இட்லி மட்டும் தோசைக்கு த
இந்த 'பாலக் பன்னீரை' விரும்பாதவர்களே கிடையாது எனலாம்
தேவையானவை :
பாலக் 2 கட்டு
பனீர் 500 கிராம்
எண்ணை 1/4 கப்
தயிர் 1/4 கப்
தனியாப்பொடி 1 ஸ்பூன்
முன்பு சொன்ன கரம் மசாலா பொடி 1 ஸ்பூன்
வறட்டு வாணலி இல் வறுத்து அரைத்த சீரகப்பொடி 1 ஸ்பூன்
பட்டை பொடி 1/2 ஸ்பூன்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
கிராம்பு பொடி 1/2 ஸ்பூன்
உலர்ந்த வெந்தய இலைகள் 2 டேபிள் ஸ்பூன்
கொத்துமல்லி தழை 1 கைப்பிடி அளவு
புதினா 1 கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் 7 -8
ஃபிரெஷ் கிரீம் அல்லது துருவிய பனீர் 1 ஸ்பூன் ( அலங்கரிக்க )
செய்முறை:
முதலில் பாலக்கை, அலம்பி வேகவைத்துக்கொள்ளவும்.
மிக்சி இல் போட்டு விழுதாக அரைக்கவும் .
தனியே வைக்கவும் .
வாணலி இல் எண்ணை விட்டு சீரகம் தாளிக்கவும்.
பிறகு மிகவும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் களை போடவும்.
வதக்கவும்.
பனீர் துண்டுகளை போடவும்.
வதக்கவும்.
தனியாப்பொடி , சீரகப்பொடி, பட்டை பொடி ,ஏலப்பொடி ,கரம் மசாலா பொடி, கிராம்பு பொடி ,உலர்ந்த வெந்தய இலைகள் எல்லாம் போடவும்.
நன்கு கலக்கவும், இப்ப தயிர் மற்றும் அரைத்து வைத்துள்ள கீரையை போடவும்.
உப்பு போடவும்.
கொதிக்கவிடவும்.
அடுப்பை சின்னதாக வைக்கவும்.
ஒரு 5 நிமிடம் அப்படியே கொதிக்க விடவும்.
நடுவில் ஒரு முறை கிளறி விடவும்.
அருமையான 'பாலக் பனீர் ' தயார்.
ஒரு serving dish இல் எடுத்து வைக்கவும்.
கொத்துமல்லி இலைகள் ,துருவிய பனீர் அல்லது கிரீம் கொண்டு அலங்கரிக்கவும் .
சப்பாத்தி , நான், பூரி அல்லது சாதத்துடன் பரிமாறவும்.
குறிப்பு: தேவையானால் முதலில் பனீர் துண்டுகளை எண்ணை இல் வறுத்து எடுக்கலாம். தயிர்க்கு பதிலாக 'ஆம் சூர்' எனப்படும் மாங்காய் பொடி கூட பயன் படுத்தலாம் .Last edited by krishnaamma; 20-09-12, 20:15.என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
-
Re: ஆலு - சன்னா
Originally posted by krishnaamma View Postதேவையானவை :
ஒரு கப் வேகவைத்த கொத்துக்கடலை
இரண்டு கப் வேகவைத்த உருளைக்கிழங்கு
வாசனை ஆளை தூக்கும்..... ரொம்ப நல்லா இருக்கும்.
செய்து பாருங்க , பதில் போடுங்க
இந்த குறிப்பு ரொம்ப நன்னாருக்கு,
ஆனா இன்னும் பண்ணிப் பார்க்கலை, காரணம், எங்காத்துல, இந்த கொத்துக்கடலை எப்ப பண்ணினாலும்
ரொம்ப ஹார்ட்டா இருக்கு, வேகலைன்னு கம்ப்ளைண்ட் வரது.
நீங்களும் சுலபமா வேகவைக்கறத்துக்கு வழி போடலையே?
முன்னாடியே ஊற வைக்கணுமா?
அப்புறம், அந்த பன்னீர் அவா யாராவது வாங்கிண்டுவந்து குடுத்தாதான் உண்டு
எந்த மாதிரி கடைல கேக்கணும்?
தப்பா நெனைச்சுக்காதிங்கோக்கா,
ஒண்ணும் தெரியலை.
அப்பறம், எங்காத்துல எதுவும் கொஞ்சம் தளர கூட்டு மாதிரி இருந்தாத்தான் சாப்பிடுவா.
அன்புடன்
லக்ஷ்மி
Comment
-
Re: சப்பாத்தி பூரிக்கு தொட்டுக்கொள்ள ...
Originally posted by KSrinivasan View Postsuper
Srinivasanஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
-
Re: ஆலு - சன்னா
Originally posted by K S Lakshmi View Postவணக்கம் சுமதி அக்கா,
இந்த குறிப்பு ரொம்ப நன்னாருக்கு,
ஆனா இன்னும் பண்ணிப் பார்க்கலை, காரணம், எங்காத்துல, இந்த கொத்துக்கடலை எப்ப பண்ணினாலும்
ரொம்ப ஹார்ட்டா இருக்கு, வேகலைன்னு கம்ப்ளைண்ட் வரது.
நீங்களும் சுலபமா வேகவைக்கறத்துக்கு வழி போடலையே?
முன்னாடியே ஊற வைக்கணுமா?
அப்புறம், அந்த பன்னீர் அவா யாராவது வாங்கிண்டுவந்து குடுத்தாதான் உண்டு
எந்த மாதிரி கடைல கேக்கணும்?
தப்பா நெனைச்சுக்காதிங்கோக்கா,
ஒண்ணும் தெரியலை.
அப்பறம், எங்காத்துல எதுவும் கொஞ்சம் தளர கூட்டு மாதிரி இருந்தாத்தான் சாப்பிடுவா.
அன்புடன்
லக்ஷ்மிஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
-
Re: சப்பாத்தி பூரிக்கு தொட்டுக்கொள்ள ...
பனீர் இப்ப எல்லா கடைகளிலும் கிடைக்கிறது. எக்ஸ்பயரி தேதி பார்த்து வாங்கணும். ஒரு முறை வாங்கி பாருங்கோ,பிடித்தால் நீங்களே வீட்டில் செய்யலாம். சுலபம் தான். சரியா? நான் போடும் குறிப்புகளில் தளர இருப்பதை பார்த்து செய்யுங்கள்.என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
-
Re: சப்பாத்தி பூரிக்கு தொட்டுக்கொள்ள ...
All are very good. But how to download it or make it a PDF file. There are restrictions in referring to computer at the time of preparation and only a print version is handy to keep at the time of preparation. Admin/Mod please provide a link for print/pdf creation. Many thanks for providing these recepies
Comment
Comment