சொஜ்ஜி அப்பம்
பூரணத்துக்கு தேவையானவை:
ரவை - 1 கப்
வெல்லம் - 1 கப்
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
மேல்மாவுக்கு :
மைதா - 2 கப்
உப்பு - 1/4 டீஸ்பூன்
நெய் - 2 அல்லது 3 டீஸ்பூன்
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை :
முதலில் மைதாவை சிறிது உப்பு சேர்த்து, கெட்டியாக பூரி மாவு போல் பிசையவும். கடைசியில், ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கலந்து வைக்கவும்.
அடிகனமான இலுப்பச்சடி இல் நெய் விட்டு ரவையை சிவக்க வறுக்கவும்.
வெல்லத்தை தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி அதை ரவை கலவையில் கொட்டி கிளறவும்.
மூன்றும் சேர்ந்து கெட்டியாக சுருண்டு வரும் பதத்தில் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கவும்.
ஆறியதும், பூரணத்தை சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
மாதாவை சிறு உருண்டைகளாக உருட்டி பூரிபோல் செய்து, நடுவில் பூரண உருண்டையை வைத்து வெளியில் வராத அளவுக்கு மூடவும்.
வாழை இலை மேல் சிறியதாக, கொஞ்சம் கனமான பூரி போல தட்டி வைக்கவும்.
புதிய ஈர்க்குச்சியால் அந்த தட்டி வைத்த பூரிகளை குத்திவிடவும்.
இப்படி செய்வதால், சொஜ்ஜி அப்பங்கள் தட்டையாக வரும்; இல்லாவிட்டால் பூரி போல உப்பிக்கொண்டு வரும். அப்படி வந்தால் சாப்பிட நல்லா இருக்காது. சரியா?
இப்படி 4 , 4லாக தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இது எண்ணையை குடிக்கும், எனவே எடுக்கும்போது மற்றும் ஒரு சட்டுவத்தால், சொஜ்ஜியப்பத்தை நன்றாக அழுத்தி எடுக்கணும்.

Comment