Announcement

Collapse
No announcement yet.

சிரார்த்த தளிகை - செய்முறை (ஐயங்கார்)

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சிரார்த்த தளிகை - செய்முறை (ஐயங்கார்)

    நாம் இந்த திரி இல் 'வடகலை சிரார்த்த தளிகை' வகைகளை பார்க்கப்போகிறோம்.நம்ப நண்பர் பாலாஜி இன் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி இது எங்காத்து வழக்கம் , உங்காத்து வழக்கப்படி கூட்டி குறைத்துக்கொள்ளுங்கள் . சரியா? ஏதும் தவறு என்றால் தயவு செய்து தெரிவியுங்கள் நன்றி !
    Last edited by krishnaamma; 04-04-14, 19:00.
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

  • #2
    'மெனு'

    முதலில் என்னென்ன செய்யணும் என்று பார்க்கலாம். அதாவது 'மெனு'
    சாதம்
    நெய் ( புதிய வெண்ணை உருக்கிக்கணும் )
    வாழைப்பழம்
    திவசக்குழம்பு
    சாத்தமுது
    3 அல்லது 5 கறியமுது
    வெள்ளரி அல்லது இஞ்சி தேங்காய் அரைத்த தயிர் பச்சடி
    மாங்காய் வெல்லப்பச்சடி அல்லது விளாம்பழ பச்சடி
    திவசத்துவையல் ( பிரண்டை அல்லது கறிவேப்பிலை )
    அப்பம் அல்லது சொஜ்ஜி அப்பம் அல்லது அதிரசம்
    வடை
    எள் உருண்டை
    தேன்குழல்
    திருக்கண்ணமுது (பயத்தம் பருப்பு )
    தயிர்
    ஊறுகாய்
    Last edited by krishnaamma; 04-04-14, 18:59.
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment


    • #3
      Re: வடகலை சிரார்த்த தளிகை - செய்முறை

      இந்த விவரங்கள் நம்ப NVS மாமா போட்ட போஸ்ட் உங்கள் சௌகர்யத்துக்காக எடுத்து இங்கே போட்டுள்ளேன். நன்றி மாமா

      ஶ்ரராத்தத்தில் உபயோகப்படுத்தக்கூடிய வஸ்துக்கள்

      உளுந்து, கருப்பு எள், சம்பர்நெல், கோதுமை, பயறு, கடுகு, கருப்பில்லாத பாகல் (3 விதம்), பில்வம், நெல்லி, திறாiக்ஷ, பலா(2 விதம்), மா, மாதுளை, கடுக்காய், குங்குமப்பூ, கருவேப்பிலை, எலுமிச்சை, வாழை (5 விதம்), இலந்தை, தேங்காய், திப்பிலி, மிளகு, புடலங்காய், முள்கத்திரி, சுக்கு, தேன், நெய், சர்க்கரை (வெல்ல சர்க்கரை), பச்சைகற்பூரம், வெல்லம், கடலுப்பு, வெள்ளரி, பசுவின்பால், அவல், எருமைப்பால் (மத்யமம்), ஜீரகம், சிகப்புக்கொடியுள்ள கூச்மாண்டம் (பூசணிக்காய்), கரணைக்கிழங்கு(2விதம்), சேபபங்கிழங்கு, கடலை, ஏலம், வெள்ளைப்புஷ்பங்கள், தாமரை,ஜாதிபுஷ்பம், சம்பகம் மல்லிகை, துளசி, தாழம்பூ, மரு இவைகள் ச்ராத்தயோக்மானதுகள். வரகு, காராமணி, கொள்ளு, கடலை, கருப்புப்பாகல் காய், பெருங்காயம், துவரை, முருங்கை, பூஷணி, சுரைக்காய், எருமைப்பால், மாதுளை, விளா, காச்சு உப்பு, ஒற்றைக்குளம்புள்ள ம்ருகத்தின் பால், எலுமிச்சை, புடலங்காய், மிளகாய், மோர், மந்தாரை இவைகள் ச்ராத்தத்திற்கு யோக்யமல்லாதவைகள். விதி நிஷேதம் இரண்டிலும் சொல்லப்பட்டவைகளைச் சேர்த்தாலும் சேர்க்கலாம். தள்ளினாலும் தள்ளலாம். போஜனப்ரகரணத்தில் நிஷித்தமான வஸ்துக்களை ச்ராத்தத்தில் சேர்க்கக்கூடாது.
      Last edited by krishnaamma; 04-04-14, 19:01.
      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

      http://eegarai.org/apps/Kitchen4All.apk

      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

      Dont work hard, work smart

      Comment


      • #4
        சில முன் ஏற்பாடுகள

        முதலில் திவசத்துக்காக சில முன் ஏற்பாடுகளை செய்து வைத்துக்கொண்டால் சிரமம் இல்லாமல் செய்து விடலாம்.
        1 .முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன வென்றால், கறியமுது, துவையல் மற்றும் குழம்பு க்கு 'பேஸ்' ஒரே மாதிரி தான். அதாவது அவைகளுக்கு நாம் வறுத்து அரைக்கும் பொடி ஒன்றே தான். எனவே நாம் முதலில் அந்த பொடியை தயார் செய்து வைத்துக்கொண்டால், அடுத்து அடுத்து சுலபமாக தளிகை செய்து விடலாம். சரியா?

        அதற்கு தேவையானவை:

        உளுத்தம் பருப்பு
        மிளகு
        மிளகாய் வற்றல்
        இந்த முன்றையும் கொஞ்சம் எண்ணெய் விட்டு நன்கு வறுத்து ஆறினதும் மிக்சி இல் அல்லது கலுரலில் பொடித்து வைத்துக்கொள்ளவும். இதை சேப்பங்கிழங்கு கறியமுது அல்லது வாழைக்காய் கறியமுது செய்யும் போது தூவணும்.
        குழம்பு செய்யும் போது அத்துடன் கொஞ்சம் தேங்காய் வைத்து அரைக்கணும். துவையல் செய்யும் போது வறுத்து வைத்ததுடன் இந்த பொடியும் போட்டு அரைக்கணும். அதை நான் அந்த அந்த குறிப்புகளில் விளக்கமாக சொல்கிறேன். இப்பத்துக்கு இந்த பொடியை அரைத்து வைத்துக்கணும்.

        2 . வெல்லம் : இதை மொத்தமாக உடைத்து வைத்துக்கொண்டால் சௌகர்யம்.
        இப்பவெல்லாம் ஃப்ளாட்ஸ் இல் இருப்பதால், முன்பு போல அம்மி குழவியால் உடைக்க முடியாது. சுத்தியல் , இடுக்கி , கரண்டி என தேடவேண்டாம் அதற்க்கு சுலபமான முறை, ஒரு வெல்ல கட்டி யை எடுத்து மக்ரோ வேவ் ஓவனில் ஒரு 30 முதல் 45 செகண்ட் வரை போடவும். எடுத்து தொட்டு பார்க்கவும் நல்லா சுடவில்லை என்றால் மீண்டும் ஒரு 20 செகண்ட்ஸ் போடவும். வெளியே எடுத்து கத்தியால் சுலபமாக நறுக்கவும். ஒரு டப்பாவில் சேமிக்கவும். பாயசம் செய்யும் போது காலை வேளைகளில் கஷ்டம் இருக்காது

        குறிப்பு: ஓவனில் வைத்து எடுக்கும் போது சில சமயம் அந்த வெல்லக்கட்டி இன் நடுவில் கொஞ்சம் பாகு போல ஆகிவிடும், சூடு அதிகமானால் இப்படி ஆவதுண்டு. எனவே வெல்லத்தை நறுக்கும் முன், ஒரு தட்டில் வைத்து முதலில் இரண்டாக கட் செய்யவும். பிறகு கைய்ல் எடுத்து கத்தியால் சீவவும். அழகான துருவல்களாக வரும். நடுவில் வெல்லம் குழம்பு போல ஆகி இருந்தால், கை இல் படாமல் தட்டில் கொட்டிவிடும். சில நிமிஷங்கள் அப்படியே விட்டு விட்டு பின் நறுக்கலாம். சரியா?

        3.புளி யை மொத்தமாய் நனைத்து வைத்து கரைத்துக்கொள்ளவும். அதிலிருந்தே கொஞ்சம் துவையலுக்கு , சற்றமுதுக்கு மற்றும் குழம்புக்கு எடுத்துக்கொள்ள லாம்.

        4. அதே போல தேங்காயை துருவி வைத்துக்கொண்டால் கறியமுதுகள், துவையல், பாயசம், பச்சடி மற்றும் குழம்புக்கு அரைத்துவிட உபயோகிக்கலாம்.

        5. இஞ்சி தோல் சீவி துருவி வைத்துக்கொண்டால், பச்சடிக்கு மற்றும் ஊறுகாய்க்கு சுலபமாக இருக்கும்.

        Last edited by krishnaamma; 04-04-14, 19:03.
        என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

        http://eegarai.org/apps/Kitchen4All.apk

        http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

        Dont work hard, work smart

        Comment


        • #5
          திவச குழம்பு

          முதலில் திவச குழம்பு

          தேவையானவை:

          அரைத்து வைத்துள்ள பொடி 4 - 5 ஸ்பூன்
          புளி ஒரு நாரத்தங்காய் அளவு
          தேங்காய் 1/2 மூடி
          பாகற்காய் கால் கிலோ
          தாளிக்க கடுகு
          கொஞ்சம் எண்ணெய்

          குறிப்பு: நினைவாக பெருங்காய டப்பா மட்டும் மஞ்சள் பொடி டப்பாவை மேலே எடுத்து வைத்து விடுங்கள். கண்டிப்பாக போடக்கூடாது

          செய்முறை:

          புளியை அலம்பி வென்னீரில் ஊறவைக்கவும் .
          பிறகு நிறைய தண்ணி விட்டு புளியை கரைத்து வடிகட்டி வைக்கவும்.
          பாகற்காயை அலம்பி வட்ட வட்டமாய் நறுக்கவும்.
          கொட்டைகளை எடுத்து விடவும்.
          தேங்காயை துருவி வைக்கவும்.
          உருளி இல் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை திரும்பாரி ( தாளித்து) பாகற்காயகளை போடவும். துளி உப்பு போட்டு வதக்கி விட்டு கொஞ்சம் வதங்கியதும் புளித்தண்ணிரை விடவும்.
          தேங்காய் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியைப்போட்டு ஒரு சுற்று மிக்சி இல் அல்லது கலுரலில் அரைக்கவும்.
          அரைத்த விழுது மற்றும் உப்பு போட்டு நன்கு கொதிக்க விடவும் .
          பிறகு இறக்கவும்.
          குழம்பு தயார்
          Last edited by krishnaamma; 04-04-14, 19:04.
          என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

          http://eegarai.org/apps/Kitchen4All.apk

          http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

          Dont work hard, work smart

          Comment


          • #6
            கறியமுது

            இனி கறியமுது . இதற்கு சாதாரணமாக நாட்டுக்காய்கள் என்று சொல்லப்படும் காய்களை உபயோகிப்பது வழக்கம்.
            அவை:

            வாழைக்காய்
            அவரைக்காய்
            புடலங்காய்
            சேப்பங்கிழங்கு
            கொத்தவரங்காய்
            பாகற்காய்
            சர்க்கரை வள்ளி கிழங்கு
            பச்ச சுண்டக்காய்
            பலா முசுடு ( அதாவது பிஞ்சாக இருக்கும் பலாக்காய் )
            சிலர் கத்தரிக்காய் கூட சேர்த்துப்பா.

            எந்த காயாக இருந்தாலும், வதக்கக்கூடாது, வேகவைத்து தேங்காய் மற்றும் பயத்தம் பருப்பு போட்டு த்தான் செய்யணும். சேப்பங்கிழங்கு மற்றும் வாழைக்காய் என்றால் நாம் மேலே சொன்ன பொடி துவி துளி புளித்தண்ணி விட்டு 'மொத்தையாக' இருக்கும்படி குழைய செய்யணும். இவை எல்லாம் விவரமாக தனித்தனியாக கறியமுது செய்யும் போது சொல்கிறேன்.
            Last edited by krishnaamma; 04-04-14, 19:04.
            என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

            http://eegarai.org/apps/Kitchen4All.apk

            http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

            Dont work hard, work smart

            Comment


            • #7
              Re: வடகலை சிரார்த்த தளிகை - செய்முறை

              அன்புள்ள கிருஷ்ணம்மா அவர்களுக்கு தங்களுடைய ஸ்ரார்த்த தளிகையின் முழு விவரங்களையும் பார்த்து வியந்தேன். என்னுடைய
              பாராட்டுக்கள். சற்றும் ஸ்ரமத்தை பார்க்காமல் எல்லாருக்கும் உதவும் படி சாமான்கள் பட்டியல்
              எப்படி தளிகை பண்ணுவது போன்ற விபரத்தை தெரிய படுத்தி இருக்கிறீர்கள்.

              இதேபோல் எனக்கு ஏதாவது பக்ஷணம் அல்லது சாம்பார், கூட்டு, திருகன்னாமுது, கரமேது
              டிபன் இவைகளை பற்றி கேட்டால் தாங்கள் விவரமாக பதில் தருவீர்களா.

              ராமபத்ரன்

              Comment


              • #8
                Re: வடகலை சிரார்த்த தளிகை - செய்முறை

                Originally posted by pc ramabadran View Post
                அன்புள்ள கிருஷ்ணம்மா அவர்களுக்கு தங்களுடைய ஸ்ரார்த்த தளிகையின் முழு விவரங்களையும் பார்த்து வியந்தேன். என்னுடைய
                பாராட்டுக்கள். சற்றும் ஸ்ரமத்தை பார்க்காமல் எல்லாருக்கும் உதவும் படி சாமான்கள் பட்டியல்
                எப்படி தளிகை பண்ணுவது போன்ற விபரத்தை தெரிய படுத்தி இருக்கிறீர்கள்.

                இதேபோல் எனக்கு ஏதாவது பக்ஷணம் அல்லது சாம்பார், கூட்டு, திருகன்னாமுது, கரமேது
                டிபன் இவைகளை பற்றி கேட்டால் தாங்கள் விவரமாக பதில் தருவீர்களா.

                ராமபத்ரன்
                ரொம்ப சந்தோஷம் , என்னுடைய குறிப்புகள் உங்களுக்கு உதவியதில் எனக்கு ரொம்ப சந்தோஷம். உங்களுக்கு தேவை என்றால் தாரளமாக நான் நிறைய குறிப்புகள் தருகிறேன். எது வேண்டுமோ கேளுங்கள்.
                என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                http://eegarai.org/apps/Kitchen4All.apk

                http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                Dont work hard, work smart

                Comment


                • #9
                  வாழைக்காய் கறியமுது

                  முதலில் வாழைக்காய் கறியமுது

                  தேவையானவை:

                  வாழைக்காய் 4 -6
                  செய்து வைத்த பொடி 2 -3 ஸ்பூன்
                  புளித்தண்ணி கொஞ்சம்
                  உப்பு
                  தாளிக்க கொஞ்சம் கடுகு
                  கொஞ்சம் எண்ணெய்
                  கறிவேப்பிலை

                  செய்முறை :

                  வாழைக்காய்களை அலம்பி தோல் சீவவும்.
                  வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு , கறிவேப்பிலை தாளிக்கவும்.
                  நறுக்கின வாழைக்காய்களை அதில் போடவும்.
                  நன்கு கலக்கவும்.
                  உப்பு போடவும்.
                  புளித்தண்ணி விடவும்.
                  கொஞ்ச நேரம் முடி வைக்கவும்.
                  பிறகு நன்கு கிளறி , பொடித்து வைத்துள்ள பொடியைப்போடவும்.
                  மிண்டும் நன்கு கிளறி காய் வெந்ததும் இறக்கவும்.
                  வாழைக்காய் கறியமுது தயார்.
                  Last edited by krishnaamma; 04-04-14, 19:08.
                  என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                  http://eegarai.org/apps/Kitchen4All.apk

                  http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                  Dont work hard, work smart

                  Comment


                  • #10
                    சேப்பங்கிழங்கு கறியமுது

                    சேப்பங்கிழங்கு கறியமுது

                    தேவையானவை:

                    சேப்பங்கிழங்கு 1/2 கிலோ
                    செய்து வைத்த பொடி 2 -3 ஸ்பூன்
                    புளித்தண்ணி கொஞ்சம்
                    உப்பு
                    தாளிக்க கொஞ்சம் கடுகு
                    கொஞ்சம் எண்ணெய்
                    கறிவேப்பிலை

                    செய்முறை :

                    சேப்பங்கிழங்குகளை அலம்பி, குக்கர் அல்லது வாணலி இல் வேகவைக்கவும்.
                    ஆறினதும் தோல் உரிக்கவும்.
                    வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு , கறிவேப்பிலை தாளிக்கவும்.
                    உரித்த சேப்பங்கிழங்குகளை அதில் போடவும்.
                    நன்கு கலக்கவும்.
                    உப்பு போடவும்.
                    புளித்தண்ணி விடவும்.
                    கொஞ்ச நேரம் முடி வைக்கவும்.
                    பிறகு நன்கு கிளறி , பொடித்து வைத்துள்ள பொடியைப்போடவும்.
                    மிண்டும் நன்கு கிளறி காய் வெந்ததும் இறக்கவும்.
                    சேப்பங்கிழங்கு கறியமுது தயார்.
                    Last edited by krishnaamma; 04-04-14, 19:09.
                    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                    http://eegarai.org/apps/Kitchen4All.apk

                    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                    Dont work hard, work smart

                    Comment


                    • #11
                      அவரைக்காய் கறியமுது

                      தேவையானவை:

                      அவரைக்காய் 1/4 கிலோ
                      தேங்காய் துருவல் 1 /2 கப்
                      பயத்தம் பருப்பு 2 -3 ஸ்பூன்
                      தண்ணி கொஞ்சம்
                      உப்பு
                      தாளிக்க கொஞ்சம் கடுகு, மிளகாய் வற்றல் 4
                      கொஞ்சம் எண்ணெய்
                      கறிவேப்பிலை

                      செய்முறை :

                      அவரைக்காய்களை அலம்பி நறுக்கவும் .
                      வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு ,மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளிக்கவும்.
                      நறுக்கின அவரைக்காய்களை அதில் போடவும்.
                      அலசின பயத்தம் பருப்பை போடவும்.
                      தண்ணி விடவும்
                      உப்பு போடவும்..
                      கொஞ்ச நேரம் முடி வைக்கவும்.
                      பிறகு நன்கு கிளறி , காய் வெந்ததும் தேங்காய் துருவல் போட்டு இறக்கவும்.
                      அவரைக்காய் கறியமுது தயார்.
                      Last edited by krishnaamma; 04-04-14, 19:09.
                      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                      http://eegarai.org/apps/Kitchen4All.apk

                      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                      Dont work hard, work smart

                      Comment


                      • #12
                        புடலங்காய் கறியமுது

                        தேவையானவை:

                        புடலங்காய் 1/2 கிலோ
                        தேங்காய் துருவல் 1 /2 கப்
                        பயத்தம் பருப்பு 2 -3 ஸ்பூன்
                        தண்ணி கொஞ்சம்
                        உப்பு
                        தாளிக்க கொஞ்சம் கடுகு, மிளகாய் வற்றல் 4
                        கொஞ்சம் எண்ணெய்
                        கறிவேப்பிலை

                        செய்முறை :

                        புடலங்காய்களை அலம்பி நறுக்கவும் .
                        சில சமையம் புடலங்காய் கசக்கும், எனவே காய்யை நறுக்கினதும் கொஞ்சம் உப்பு போட்டு பிசிறி வைக்கவும்.
                        கொஞ்ச நேரத்தில் தண்ணீர் விட்டுக்கொள்ளும்.
                        அதை பிழிந்து வைத்துகொள்ளவும் .
                        வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு ,மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளிக்கவும்.
                        நறுக்கின புடலங்காய்களை அதில் போடவும்.
                        அலசின பயத்தம் பருப்பை போடவும்.
                        தண்ணி விடவும்
                        கொஞ்சமாய் உப்பு போடவும்..
                        கொஞ்ச நேரம் முடி வைக்கவும்.
                        பிறகு நன்கு கிளறி , காய் வெந்ததும் தேங்காய் துருவல் போட்டு இறக்கவும்.
                        புடலங்காய் கறியமுது தயார்.
                        Last edited by krishnaamma; 04-04-14, 19:10.
                        என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                        http://eegarai.org/apps/Kitchen4All.apk

                        http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                        Dont work hard, work smart

                        Comment


                        • #13
                          கொத்தவரங்காய் கறியமுது

                          தேவையானவை:

                          கொத்தவரங்காய் 1/4 கிலோ
                          தேங்காய் துருவல் 1 /2 கப்
                          பயத்தம் பருப்பு 2 -3 ஸ்பூன்
                          தண்ணி கொஞ்சம்
                          உப்பு
                          தாளிக்க கொஞ்சம் கடுகு, மிளகாய் வற்றல் 4
                          கொஞ்சம் எண்ணெய்
                          கறிவேப்பிலை

                          செய்முறை :

                          கொத்தவரங்காய்களை அலம்பி நறுக்கவும் .
                          வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு ,மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளிக்கவும்.
                          நறுக்கின கொத்தவரங்காய்களை அதில் போடவும்.
                          அலசின பயத்தம் பருப்பை போடவும்.
                          தண்ணி விடவும்
                          உப்பு போடவும்..
                          கொஞ்ச நேரம் முடி வைக்கவும்.
                          பிறகு நன்கு கிளறி , காய் வெந்ததும் தேங்காய் துருவல் போட்டு இறக்கவும்.
                          கொத்தவரங்காய் கறியமுது தயார்.
                          Last edited by krishnaamma; 04-04-14, 19:10.
                          என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                          http://eegarai.org/apps/Kitchen4All.apk

                          http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                          Dont work hard, work smart

                          Comment


                          • #14
                            சர்க்கரை வள்ளி கிழங்கு கறியமுது

                            தேவையானவை:

                            சர்க்கரை வள்ளி கிழங்கு 1/4 கிலோ
                            தேங்காய் துருவல் 1 /2 கப்
                            உப்பு
                            தாளிக்க கொஞ்சம் கடுகு, மிளகாய் வற்றல் 4
                            கொஞ்சம் எண்ணெய்
                            கறிவேப்பிலை

                            செய்முறை :

                            சர்க்கரை வள்ளி கிழங்குகளை அலம்பி, குக்கர் அல்லது வாணலி இல் உப்பு போட்டு வேகவைக்கவும்.
                            ஆறினதும் தோல் உரிக்கவும்.
                            வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு ,மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளிக்கவும்.
                            நறுக்கின சர்க்கரை வள்ளி கிழங்குகளை அதில் போடவும்.
                            பிறகு நன்கு கிளறி , காய் வெந்ததும் தேங்காய் துருவல் போட்டு இறக்கவும்.
                            சர்க்கரை வள்ளி கிழங்கு கறியமுது தயார்.
                            Last edited by krishnaamma; 04-04-14, 19:10.
                            என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                            http://eegarai.org/apps/Kitchen4All.apk

                            http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                            Dont work hard, work smart

                            Comment


                            • #15
                              பாகற்காய் கறியமுது

                              தேவையானவை:

                              பாகற்காய் 4 -6
                              செய்து வைத்த பொடி 2 -3 ஸ்பூன்
                              புளித்தண்ணி கொஞ்சம்
                              உப்பு
                              தாளிக்க கொஞ்சம் கடுகு
                              கொஞ்சம் எண்ணெய்
                              கறிவேப்பிலை

                              செய்முறை :

                              பாகற்காய் களை அலம்பி தோல் சீவவும்.
                              வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு , கறிவேப்பிலை தாளிக்கவும்.
                              நறுக்கின பாகற்காய் களை அதில் போடவும்.
                              நன்கு கலக்கவும்.
                              உப்பு போடவும்.
                              புளித்தண்ணி விடவும்.
                              கொஞ்ச நேரம் முடி வைக்கவும்.
                              காய் நன்கு வெந்ததும் நன்கு கிளறி , பொடித்து வைத்துள்ள பொடியைப்போடவும்.
                              மிண்டும் நன்கு கிளறி இறக்கவும்.
                              பாகற்காய் கறியமுது தயார்.
                              Last edited by krishnaamma; 04-04-14, 19:11.
                              என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                              http://eegarai.org/apps/Kitchen4All.apk

                              http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                              Dont work hard, work smart

                              Comment

                              Working...
                              X