Announcement

Collapse
No announcement yet.

cookking tips

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • cookking tips

    சந்தேகங்களும்.... தீர்வுகளும்!வசந்தா விஜயராகவன்ஃபுட்ஸ்பிரமாதமாக சமையல் செய்து, சாப்பிடுகிறவர்களின் பாராட்டுகளை அள்ள வேண்டும் என்பது இல்லத்தரசிகளின் விருப்பங்களில் மிகமுக்கியமான ஒன்று. இதற்கு உதவும் வகையில் சமையல் தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் கொடுப்பதோடு, உங்கள் சமையல் மேலும் சிறப்பாக விளங்க ஆலோசனை கூறும் பகுதி இது.
    இந்த இதழில் வழிநடத்த வருபவர் வசந்தா விஜயராகவன்.
    எவ்வாறு தயாரித்தால் ரசம் நல்ல ருசியுடன் அமையும்?
    முதலில், புளித் தண்ணீரை 2 நிமிடம் கொதிக்கவிடவும் (புளி வாசனை போவதற்காக). பின்பு, உப்பு, ரசப்பொடி சேர்த்து பொங்கி வரும்போது இறக்கிவிடவும். கடைசியாக கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளிக்கவும்.
    தோசை, இட்லி மாவு புளிக்காமல் இருக்க உபாயம் கூறுங்களேன்...
    மாவை அரைத்தவுடன் நன்றாக கலந்து, உப்பு சேர்க்காமல் ஃப்ரிட்ஜில் வைக்கவும். இட்லி செய்ய வேண்டும் என்றால், வேண்டிய அளவு மாவை மட்டும் முதல் நாள் இரவே வெளியில் எடுத்து, உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். தோசைக்கு ஒரு மணி நேரம் முன்பு மாவை வெளியில் எடுத்து உப்பு சேர்க்கவும். இப்படி செய்தால் இட்லி, தோசை மாவு அதிகம் புளிக்காமல் இருக்கும்.
    பிஸ்கட் நமத்துப் போகாமல் இருக்க... வற்றலில் நீண்ட நாள் பூச்சிகள் வராமல் பாதுகாக்க என்ன செய்யலாம்?
    வற்றல் அல்லது பிஸ்கட் வைத்திருக்கும் டப்பாவில் சிறிது உப்புத்தூளை ஒரு சிறு துணியில் மூட்டையாக கட்டி போடவும்.

    சாம்பாரில் உப்பு அதிகமாகிவிட்டால் என்ன செய்வது?
    சாம்பாரில் எலுமிச்சை அளவு சாதத்தை உருண்டையாக்கி சேர்த்தால்... அதிகப்படியான உப்பை இழுத்துவிடும். சரியான ருசியுடன் அமையும்.
    காய்ந்த ஜவ்வரிசி வற்றலில் உப்பு அதிகமாகிவிட்டால் சரிசெய்ய முடியுமா?
    காய்ந்த ஜவ்வரிசி வற்றலை அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி ஒரு நிமிடம் வைத் திருந்து வடியுங்கள். மறுபடியும் வெயிலில் காய வைத்து எடுத்தால்... உப்பு போயே போச்!
    பச்சைக் காய்கறிகளை பொரியல் செய்யும்போது நிறம் மாறாமல் சமைக்க வழி என்ன?
    நறுக்கிய பச்சைக் காய்கறியை கொதிக்கும் நீரில் 2 நிமிடம் போட்டு, நீரை வடிய விடவும். அதன் பிறகு பொரியல் செய்தால்... பச்சை காய்கறிகள் நிறம் மாறாமல் இருக்கும். வடித்த தண்ணீரை வீணாக்காமல் சூப் தயாரித்து பருகலாம்.

    காபி டிகாஷன் 'திக்’காக இருக்க என்ன செய்வது?
    ஃபில்டரில் காபி பொடி போடுவதற்கு முன், ஒரு ஸ்பூன் சர்க்கரையைப் போட்டு அதன் மேல் காபி பொடி போட்டு டிகாஷன் இறக்கினால்... 'திக்’காக இருக்கும்.
    எலுமிச்சை சாதம் ருசியாக வர ஐடியா சொல்லுங்கள்...
    சாதம் கலக்கும்போது கடைசியில் சிறிதளவு வறுத்த வெந்தயத்தை பொடி செய்து தூவினால், எலுமிச்சை சாதம் நல்ல மணத்துடனும், ருசியுடனும் இருக்கும்.
    குழம்பில் புளி அதிகமாகிவிட்டால் எப்படி சரி செய்வது..?
    சிறிது வெல்லம் சேர்த்து கொதிக்கவிட்டால், புளிப்பு போன இடம் தெரியாது.
    பாயசம் நீர்த்துவிட்டால் எப்படி சரியாக்குவது..?
    சிறிதளவு சோள மாவு அல்லது கஸ்டர்ட் பவுடரை, நீரில் கரைத்து பாயசத்தில் ஊற்றி, கொதி வந்தவுடன் இறக்கிவிடவும். பாயசம் சரியான பதத்துக்கு வந்துவிடும்.
    ரசத்தில் புளிப்பு குறைந்துவிட்டால் என்ன செய்யலாம்?
    ரசத்தில் கால் டீஸ்பூன் மாங்காய்த்தூள் (அம்சூர் பவுடர்) சேர்த்தால்... சரியாகிவிடும்.

  • #2
    Re: cookking tips

    Very useful tips.
    Thanks.
    Varadarajan

    Comment

    Working...
    X