Announcement

Collapse
No announcement yet.

கம்பு தித்திப்பு பொங்கல் !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கம்பு தித்திப்பு பொங்கல் !

    தேவையானவை :

    கம்பு - 100 கிராம்
    வெல்லம் - 200 கிராம்
    நெய் - 1 - 2 டீஸ்பூன்
    உப்பு - 1 சிட்டிகை
    முந்திரி, பாதாம் - டேபிள் ஸ்பூன் உடைத்தது.

    செய்முறை :

    கம்பை முதல் நாள் களைந்து இரவே ஊற வைக்கவும்.
    மறுநாள் அலசி , தண்ணீரை வடித்து, மிக்சியில் ஒரு சுற்று ஓட விடவும்.
    ரவை போல ஓடித்துக்கொள்ளவும். ரொம்பவும் நைசாக அரைக்கக் கூடாது.
    பிறகு அதில் 3 பங்கு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து பிரஷர் குக்கரில் 5 விசில் வைத்தெடுக்கவும்.
    வெல்லத்தில் தண்ணீர் விட்டு, கரைத்து வடிகட்டி மண்ணில்லாமல் எடுத்துக்கொள்ளவும்.
    பிறகு அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.
    கொஞ்சம் 'திக்' ஆனதும் வெந்த கம்பை இதில் கொட்டி கிளறவும்.
    1 spoon நெய்விடவும்.
    1 spoon நெய்யில் முந்திரி, பாதாம் வறுத்துச் சேர்த்துப் பரிமாறவும்.

    குறிப்பு : தேவையானால் ஏலம் போடலாம் ஆனால் கம்புக்கு இயல்பிலேயே ஒரு நல்ல மணம் உண்டு என்பதால், வாசனைக்காக ஏலக்காய் கூடத் தேவையில்லை.
    நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து என எல்லாம் நிறைந்தது இது.


    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart
Working...
X