மிளகாய் யுடன் பரிமாறிய படம் ரொம்ப அருமையாக இருக்கும் , ஒருமுறை செய்து பாருங்கள், இப்போ குளிர்கலத்துக்கு ரொம்ப நல்லது. இந்த ரொட்டி ரொம்ப 'சூடு' உடம்புக்கு..
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
கம்பு - 100 கிராம் வெல்லம் - 200 கிராம் நெய் - 1 - 2 டீஸ்பூன் உப்பு - 1 சிட்டிகை முந்திரி, பாதாம் - டேபிள் ஸ்பூன் உடைத்தது.
செய்முறை :
கம்பை முதல் நாள் களைந்து இரவே ஊற வைக்கவும். மறுநாள் அலசி , தண்ணீரை வடித்து, மிக்சியில் ஒரு சுற்று ஓட விடவும். ரவை போல ஓடித்துக்கொள்ளவும். ரொம்பவும் நைசாக அரைக்கக் கூடாது. பிறகு அதில் 3 பங்கு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து பிரஷர் குக்கரில் 5 விசில் வைத்தெடுக்கவும். வெல்லத்தில் தண்ணீர் விட்டு, கரைத்து வடிகட்டி மண்ணில்லாமல் எடுத்துக்கொள்ளவும். பிறகு அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். கொஞ்சம் 'திக்' ஆனதும் வெந்த கம்பை இதில் கொட்டி கிளறவும். 1 spoon நெய்விடவும். 1 spoon நெய்யில் முந்திரி, பாதாம் வறுத்துச் சேர்த்துப் பரிமாறவும்.
குறிப்பு : தேவையானால் ஏலம் போடலாம் ஆனால் கம்புக்கு இயல்பிலேயே ஒரு நல்ல மணம் உண்டு என்பதால், வாசனைக்காக ஏலக்காய் கூடத் தேவையில்லை.
நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து என எல்லாம் நிறைந்தது இது.
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
கம்பு அல்லது திணை மாவு-2 கப் வேகவைத்து பிசைந்த உருளைக்கிழங்கு-1கப் நறுக்கிய கொத்தமல்லி-5 தேக்கரண்டி நறுக்கிய வெங்காயம்-1/2கப் நறுக்கிய பச்சை மிளகாய-2 எலுமிச்சை சாறு-1 தேக்கரண்டி இஞ்சி விழுது-1தேக்கரண்டி உப்பு-தேவைக்கேற்ப நெய் - சப்பாத்தி செய்ய
செய்முறை:
சலித்து எடுத்து வைக்கப்பட்ட மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதனுடன் தேவைக்கு வைத்துள்ள அனைத்து பொருட்களையும் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி ரொட்டி செய்வதற்கு பிசைவது போல பிசைந்து கொள்ளவும். பின்னர் நான்ஸ்டிக் தோசைகல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி கொள்ளவும். கொஞ்சம் கனமான ரொட்டியாக இடவும். இருபுறமும் நெய்விட்டு எடுக்கவும். சுவையான கம்பு ஆலு ரொட்டி ரெடி. இதை பால் அல்லது தயிர் சேர்த்து சூடாக பரிமாறலாம் சுவையாக இருக்கும்.
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
குதிரை வாலி 2 கப்
துவரம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
மிளகு சீரகம் பொடித்தது 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்
உப்பு
தாளிக்க :
கடுகு 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் 4 - 5
உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் 2 - 3 ( தேவை என்றால் - வாசனைக்காக போடலாம் )
பெருங்காயம் கால் ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
தேங்காய் எண்ணெய் தாளிக்க கொஞ்சம்
செய்முறை :
குதிரை வாலி களைந்து, ஒரு 10 நிமிஷம் ஊறவைக்கவும்.
மண் இருக்கும் எனவே, அரித்து போடுவது நல்லது.
தனியாக துவரம் பருப்பையும் ரவை போல பொடிக்கவும்.
ஒரு வாணலி இல் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை போட்டு தாளிக்கவும்.
பிறகு தண்ணிர் விடவும். உப்பு போடவும்.
அது நன்கு கொதிக்கும் போது அடுப்பை சின்னதாக்கி விட்டு குதிரை வாலி மற்றும் அரைத்து வைத்துள்ள பருப்பு இவைகளை போடவும்.
கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும்.
மேலே ஒரு மூடி போட்டு முடவும்.
ஒரு 5 நிமிடம் கழித்து திறந்து பார்க்கவும்.
நன்கு கிளறவும் , தேவையானால் கொஞ்சம் தண்ணிர் விடவும்.
மீண்டும் மூடிவைக்கவும்.
ஓரிரு நிமிடங்கள் கழித்து மீண்டும் திறந்து பார்க்கவும்.
ரவை வெந்திருந்தால் , தேங்காய் துருவல் மற்றும் மிளகு சீரகம் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
அவ்வளவுதான் குதிரை வாலி உப்புமா ரெடி.
தேங்காய் சட்டினியுடன் பரிமாறவும்.
அல்லது பருப்பு சாம்பாருடன் பரிமாறவும். கெட்டி தயிர் அல்லது ஊறுகாய் கூட ஓகே தான்
குறிப்பு : இந்த உப்புமா ஆறினதும் தான் ரொம்ப நல்லா இருக்கும். அப்படியே அரிசி உப்புமா போலவே இருக்கும்.
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
குதிரை வாலி 2 கப் வெங்காயம் 2 (பொடியாய் நறுக்கவும்) தக்காளி 1 (தேவையானால் ) பூண்டு 4 - 5 பற்கள் இஞ்சி 1 சின்ன துண்டு பச்சை மிளகாய் 6 -8 கேரட், உருளை, பீன்ஸ், பச்சை பட்டாணி, கத்தரி என நறுக்கிய காய்கள் மொத்தம் 1 - 1 1/2 கப்.
தாளிக்க:
கடுகு 1 ஸ்பூன் உளுந்து 1 ஸ்பூன் கடலை பருப்பு 1 ஸ்பூன் மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன் கறிவேப்பிலை 1 கைப்பிடி எண்ணை 3 - 4 ஸ்பூன் நெய் 2 -3 ஸ்பூன்
செய்முறை:
ஒரு ஆழமான வாணலி இல் எண்ணை மற்றும் நெய் விடவும். தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும். பூண்டு, பச்சைமிளகாய் போடவும். வெங்காயம் போடவும். நன்கு வதக்கவும், இப்ப எல்லா காய்கறிகளையும் போடவும். நன்கு கிளறவும், உப்பு போட்டு ஒரு 2 நிமிடம் மூடி வைக்கவும். கொஞ்சம் வெந்து இருக்கும். இப்ப அடுப்பை சின்ன தாக்கி விட்டு, குதிரை வாலி கொட்டி கிளறவும். நன்கு வறுக்கவும்; 1 ஸ்பூன் நெய்விட்டு மீண்டும் நன்கு வறுக்கவும். அது நன்கு வறுபட்டதும் 2 டம்பளர் தண்ணீர் விடவும், கிளறி விடவும். குதிரை வாலி நன்கு வெந்ததும் கிளறி இறக்கவும். நல்ல சுவையான 'குதிரை வாலி உப்புமா ' தயார். தொட்டுக்கொள்ள தேங்காய் சட்டினி அல்லது சாம்பார் நல்லா இருக்கும்.
குறிப்பு : தேவையானால் பிரட் ஐ சிறு துண்டுகளாக வெட்டி, நெய் இல் வறுத்து கடைசி இல் உப்புமாவில் போட்டு கிளறலாம், நல்லா இருக்கும். வேண்டுமானால் பச்சை வேர்கடலை போடலாம், அருமையாக இருக்கும்
- - - Updated - - -
குதிரை வாலி உப்புமா !
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
குதிரை வாலி மற்றும் சாமை இரண்டிலுமே 'தயிர் சாதம்' அருமையாக இருக்கு சாதம் வடிப்பதற்கு முன், ஒரு 10 நிமிஷம் ஊறவைக்க வேண்டி இருக்கு................மற்றபடி 1 கப் க்கு 2 கப் அல்லது 2 1/4 கப் தண்ணீர் விட்டு குக்கரில் வைக்கணும்.
சாதம் ஆனதும், தயிர் விட்டு தேவையானால், காரட் துருவி போடலாம், பச்சைமிளகாய் கடுகு தாளிக்கலாம், பெருங்காயப்பொடி போடலாம் அல்லது வறுத்து அரைத்த உளுத்தம் பொடி போடலாம்................எது போட்டும் கலக்கலாம்...............அருமையான தயிர் சாதம் .................தினமும் இரவு இதை சாப்பிட்டால் 3 மாதத்தில் அடிவயிறு கொழுப்புகள் கரையும் என்கிறார்கள்..............செய்து தான் பார்க்கணும்
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
சோளம் – ஒரு கப்
உளுந்து – கால் கப்
வெந்தயம் – 1 டீ ஸ்பூன்
சின்ன வெங்காயம் – ஒரு கையளவு
பச்சை மிளகாய் – 2 -3
உப்பு – தேவைக்கு ஏற்ப
செய்முறை:
சோளம், உளுந்து, வெந்தயம் மூன்றையும் நான்கு மணி நேரம் ஊறவைத்து, இட்லிக்கு அரைப்பதுபோல அரைத்து, உப்புச் சேர்த்துக் கரைத்து, 4 மணி நேரம் அப்படியே வைக்கவும்.
பிறகு வெங்காயம், மிளகாய் சேர்த்து 'அப்பக்காரலில்' எண்ணெய் விட்டு பணியாரம் செய்யவும்.
அது காரப் பணியாரம்.
தித்திப்பு வேண்டும் என்றால், அரைத்த இந்த மாவில் தேவைக்கு ஏற்ப பனை வெல்லத்தைக் கரைத்து சேர்த்து, ஏலக்காய் பொடி போட்டு, கலந்து அப்பம் செய்தால், அது இனிப்புப் பணியாரம்.
இது உடம்புக்கு ரொம்ப நல்லது
net இல் பார்த்தது : உடல் எடையை உரமுடன் ஏற்றும் தன்மை சோளத்துக்கு உண்டு. ‘என் குழந்தை குண்டாக வேண்டும்’ என ஆதங்கப்படும் தாய்மார்கள், சோளத்தில் காரப் பணியாரமும் இன்னொரு நாள் பனை வெல்லம் சேர்த்து இனிப்புப் பணியாரமும் செய்து கொடுக்கலாம். ஆரோக்கியத்துடன், குழந்தையின் உடல் எடையும் கண்டிப்பாகக்கூடும். எலும்பில் ஏற்படும் சுண்ணாம்புச் சத்துக் குறைவினால் வரும் ஆஸ்டியோபோரோசிஸ் உள்ள பெண்களுக்குச் சோள உனவு சிறந்தது. இது தரும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், நார்ச்சத்துக்கு இணையே இல்லை.
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
2 கப் கேழ்வரகு மாவு
1/2 கப் பொட்டுக்கடலை மாவு
1 டீஸ்பூன் மிளகாய் பொடி
1/4 டீ ஸ்பூன் பெருங்காய பொடி
உப்பு
1 டீ ஸ்பூன் எள் அல்லது சீரகம்
1 டீ ஸ்பூன் நெய்
பொறிக்க எண்ணெய்
செய்முறை:
எல்லாவற்றையும் ஒரு பேசினில் போட்டு நன்கு கலக்கவும்.
கொஞ்சம் கொஞ்சமாய் தண்ணீர் விட்டு, முறுக்கு மாவுப் பதத்தில் பிசையவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் அடுப்பை 'சிம்'மில் வைத்து, முறுக்கு அச்சில் முள்ளு தேன்குழல் தட்டை போட்டு, மாவைப் போட்டு, காயும் எண்ணெயில் பிழியவும்.
இரண்டு பக்கமும் திருப்பி போடவும். கேழ்வரகு மாவு கருப்பாக இருப்பதால், சரியான பதம் பார்த்து எடுக்கவும் இல்லாவிட்டால் ரொம்ப பொரிந்து கருகிவிடும்
அருமையான 'கர கர' பான கேழ்வரகு முள்ளு தேன்குழல் தயார்.
இது அவ்வளவாக எண்ணெய் குடிக்காது
குறிப்பு: பொட்டுகடலை மாவுக்கு பதிலாக அரசி மாவும் உபயோகிக்கலாம்
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
கம்பு - 1 கப்
வேர்கடலை அரை கப்
மைதா அரை கப்
பொட்டுக்கடலை - கால் கப்
மிளகு, சீரகம் - 1 டீஸ்பூன் பொடித்தது
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய் - பொறிக்க
செய்முறை:
கம்பு, வேர்க்கடலையை தனித்தனியே வறுத்து மிக்சியில் மாவாக்கவும்.
பொட்டக்கடலையையும் மாவாக்கிக் கொள்வும்.
இத்துடன் மிளகு, சீரகம், மைதா, வெண்ணெய், உப்பு இவற்றை சேர்த்து தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
சிறிது மாவு எடுத்து சற்று கனமாக சப்பாத்தியாக இட்டு டைமண்ட் வடிவில் வெட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
சுவையான, 'கரகர'பான வேர்க்கடலை கம்பு சிப்ஸ் ரெடி.
தித்திப்பு வேண்டுமானால் மிளகு, சீரகம் போடாமல் சர்க்கரை பாகில் பிரட்டி செய்யலாம்.
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
வாணலியில் கொஞ்சம் வெந்த காய்கரிகக் இருக்கும்போது எப்படி குதிரைவாளியை வறுப்பது? காய்கறிகளை எடுத்து வைத்து குதிரைவாளியை வறுத்து,நீர்விட்டு கொதிக்கும்போது கைகளை சேர்க்க வேண்டுமா? சந்தேகம் மாமி
varadarajan
வாணலியில் கொஞ்சம் வெந்த காய்கரிகக் இருக்கும்போது எப்படி குதிரைவாலியை வறுப்பது? காய்கறிகளை எடுத்து வைத்து குதிரைவாலியை வறுத்து,நீர்விட்டு கொதிக்கும்போது கைகளை சேர்க்க வேண்டுமா? சந்தேகம் மாமி
varadarajan
No need ..........வேண்டாம் மாமா, காய்கறிகளுடன் கூடவெ குதிரை வாலியை போடலாம்........நான் சாதாரண ரவா உப்புமாவிற்கு கூட அப்படித்தான் செய்வேன் , இதனால் ரவை கட்டி தட்டாமல் இருக்கும் ......
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
Comment