சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு என்பன சிறுதானியங்களாகும். இச்சிறு தானியங்கள் அதிக நார்ச்சத்து கொண்டவையாகவும் எளிதில் செரிமானம் அடையக்கூடியதுமாகும். இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை.எனவே நாம் அப்ப அப்ப இவைகளை நம் உணவில் சேர்ப்பது நல்லது.இங்கு எனக்கு தெரிந்த உணவு வகைகளை போடுகிறேன், நீங்களும் உங்களுக்கு தெரிந்த நம் தமிழரின் பழைய உணவுவகைகளை இங்கு பகிருங்கள்
Announcement
Collapse
No announcement yet.
சிறுதானிய பலகாரங்கள் !
Collapse
X
-
சிறுதானிய பலகாரங்கள் !
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smartTags: None
-
'சத்துமாவு கஞ்சி'
முன்பே நான் வேறு ஒரு கஞ்சி'சத்துமாவு கஞ்சி' ஒன்று போட்டுள்ளேன், அது போல த்தான் இதுவும் ஆனால் இதில் பல சிறுதானியங்கள் சேர்த்துள்ளேன்
தேவையானவை:
கேழ்வரகு - கால் கிலோ
கொள்ளு, கோதுமை, சோளம், சிவப்பு அரிசி - தலா இரண்டு டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை, கம்பு - தலா நாலு டேபிள் ஸ்பூன்
முந்திரி, பாதாம் - தலா 10
ஏலக்காய் - 5
பார்லி - 4 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை தேவைக்கு ஏற்ப
செய்முறை:
கேழ்வரகு, கொள்ளு, கோதுமை, கம்பு ஆகியவற்றை ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி, ஒரு துணியில் போட்டு முடிந்து வைத்தால் காலையில் முளைவிட்டிருக்கும்.
முளைகட்டிய தானியங்களை நிழலில் உலர்த்தவும்.
வெறுமன வாணலியில் பொட்டுக்கடலை, சோளம், பாதாம், முந்திரி, சிவப்பு அரிசி, பார்லி, ஏலக்காய் எல்லாவற்றையும் தனித்தனியாக நன்கு ஆனால் காந்தாமல் வறுக்கவும்.
முளைகட்டிய தானியங்களை நிழலில் உலர்த்தவும்.
முளை விட்ட தானியங்கள் மற்றும் வறுத்து வைத்தவற்றையும் சேர்த்து அரவை மெஷினில் நைஸாக அரைத்துக் வைத்துக் கொள்ளவும்.
கஞ்சி போட:
ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் 2 டேபிள்ஸ்பூன் மாவு போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
கட்டி இல்லாமல் இருக்கணும்.
பிறகு அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறவும்.
சில நிமிடங்களில் இது கெட்டியாக வெந்துவிடும்.
இதனுடன் சர்க்கரை மற்றும் பால் கலந்து கொடுக்கவும்.
நல்லா பசி தாங்கும் .
குறிப்பு: 1 . அனைத்து தானியங்களும் கலந்திருப்பதால் குழந்தை ஆரோக்கியமாக வளரத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. குழந்தைக்கு எளிதில் ஜீரணம் ஆகும். 4 மாதம் முதல் 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கூட இதைக் கொடுக்கலாம்.
பெரியவர்களும் குடிக்கலாம்.
2 . வேண்டுமானால் கஞ்சி போடாமல் உருண்டை செய்யலாம். இந்த பொடி இல் கொஞ்சம் நெய் விட்டு சர்க்கரை சேர்த்து உருண்டை செய்தும சாப்பிடலாம்
3 . ஒருவேளை முளைவிட்ட தானியங்கள் நன்றாக காயவில்லை என்று நினைத்தீர்கள் என்றால் அவற்றையும் வறட்டு வாணலி இல் வறுத்துக்கொள்ளவும்.
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
-
ராகி தித்திப்பு தோசை !
தேவையானவை:
ஒரு கப் கேழ்வரகு மாவு (முளைகாட்டிய கேழ்வரகை அரைத்தது )
அரை கப் வெல்லம்
கொஞ்சம் ஏலக்காய் பொடி
4 டீஸ்பூன் - அரிசி மாவு
ஒரு கப் நெய் - தோசை வார்க்க
நாலு டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் - தேவையானால்
செய்முறை:
வெல்லத்தைப் பொடித்து கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கரைக்கவும்.பின் வடிகட்டவும்.
ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, அரிசி மாவு, ஏலப்பொடி சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
தேங்காய் துருவலை போடவும்.
தோசைக்கல்லில் நெய் விட்டு, இந்த மாவை தோசையாக வார்த்து எடுக்கவும்.
ரொம்ப சுவையாக இருக்கும் இந்த தோசைஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
-
பன்சி ரவா உப்புமா
தேவையானவை:
கால் கிலோ பன்சி ரவா அதாவது சோள ரவை
கேரட், குடமிளகாய், (பெரிய வெங்காயம்),உருளைகிழங்கு , பீன்ஸ் என உங்களுக்கு பிடித்த கறிகாய்கள்- எல்லாமாக நறுக்கினது ஒரு பெரிய கப்
தாளிக்க -கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு மற்றும் கடலை பருப்பு
காரத்துக்கு பச்சை மிளகாய்
தேவையானால் -எலுமிச்சம்பழம் - அரை மூடி
கொஞ்சம் கொத்தமல்லி (நறுக்கியது)
உப்புமா செய்ய நெய்யும் எண்ணெய் யும் கலந்து வைத்துக்கொள்ளவும்
உப்பு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு ,கறிவேப்பிலை, பச்சைமிளகாய் தாளித்து, அதனுடன் வெங்காயம், கேரட், குடமிளகாய், பீன்ஸை நறுக்கி சேர்த்து வதக்கவும்.
ஒரு பங்கு ரவைக்கு மூன்று பங்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு, ஒரு பத்திரத்தில் கொதிக்க விடவும்.
காய்கறிகள் வதங்கினதும் ரவையை போட்டு நன்கு வறுக்கவும்.
ரவை நன்கு வறுபட்டதும் கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணிரை விடவும்.
உப்பு போடவும்.
நன்கு கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடி வைத்தால் நன்கு வெந்து விடும்.
தேவையானால் இதில் எலுமிச்சம்பழம் பிழிந்து, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
இது, எளிதில் ஜீரணமாகக் கூடிய டிபன் வகைகளில் ஒன்று. எளிதாக தயாரிக்கக் கூடியதும் கூட!
இங்கு பெங்களூரில் இந்த ரவை நிறைய கிடைக்கிறது
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
-
மல்டி கிரைன் சுண்டல் !
தேவையானவை:
பாசிப்பயறு, கொண்டைக்கடலை, கொள்ளு, வேர்க்கடலை (நான்கும் முளைகட்டியது) - தலா ஒரு கப்
கேரட், தேங்காய் துருவல் - தலா ஒரு கப்
நறுக்கிய வெள்ளரி - ஒரு கப்
தனியா, கடலைப்பருப்பு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன்
வத்த மிளகாய் - இரண்டு அல்லது முன்று
நறுக்கிய கொத்தமல்லி - கொஞ்சம்
உப்பு
செய்முறை:
முளைகட்டிய நான்கு பயறுகளையும் உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்
வாணலில் துளி எண்ணெய் விட்டு, துருவிய தேங்காய் கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல் , தனியாவைப் போட்டு வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும்.
வேகவைத்தவற்றை தண்ணீர் வடித்து வைத்துக்கொலல்வும்.
வாணலி இல் கொஞ்சம் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளிக்கவும்.
வெந்த , வடித்த பயறுகளை போடவும்.
மிக்ஸியில் பொடித்ததைப் போட்டு, கேரட் துருவல், வெள்ளரித் துண்டுகள், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து ஒரு வதக்கு வதக்கவும். '
மல்டி கிரைன் சுண்டல் ரெடி
இது புரோட்டீன் சத்து நிறைந்தது; உடம்புக்கு ரொம்ப நல்லது
குறிப்பு : இதில் சொன்ன பயறுகள் தான் உபயோகிக்கனும் என்று இல்லை; உங்களுக்கு விருப்பமானவற்றையும் போட்டு இதே முறை இல் செய்யலாம்.
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
-
தேங்காய்ப் பால் - தினை மாவு அப்பம் !
சமையல் குறிப்பு க்கு முன் தினை பற்றிய ஒரு சின்ன விளக்கம் ஆங்கிலத்தில் இது மில்லட் எனும் வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ள தானியமாகும். ஆங்கிலத்தில் மில்லட் என்பது சோளம், கம்பு கேப்பை (கேழ்வரகு) போன்ற தானிய வகையைக் குறிப்பதாகும்.
நன்றி : விக்கி பிடியா
தேவையானவை:
தேங்காய் - அரை மூடி
நெய் அப்பம் பொரிக்க
தினை - 200 கிராம்
பொடித்த வெல்லம் - ஒரு கப்
வாழைப்பழம் - 1
ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.
தினையை வறுத்து மாவாக அரைக்கவும்.
வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, அதனுடன் தேங்காய்ப் பால், தினை மாவு, ஏலக்காய்த்தூள், வாழைப்பழம் சேர்த்து, நன்கு கெட்டியாகக் கரைக்கவும்.
அப்பக்காரலில் நெய் விட்டு , ஒவ்வொரு குழியிலும் மாவை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, வேக வைத்து எடுக்கவும்.
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
-
ராகி ரொட்டி !
தேவையானவை :
கேழ்வரகு மாவு ஒரு கப்
பொடியாக நறுக்கின வெங்காயம் ஒரு கப்
கொஞ்சம் கொத்துமல்லி பொடியாக நறுக்கவும்.
பொடியாக நறுக்கின பச்சை மிளகாய்
உப்பு
சர்க்கரை ஒரு சிட்டிகை
எண்ணெய்
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு நன்கு கலக்கவும்.
கொஞ்சம் தண்ணீர் விட்டு பிசையவும்.
அரஞ்சு பழ சைசில் உருண்டைகளாக்கவும்.
வாழை இலை அல்லது பிளாஸ்டிக் பேப்பர் இல் வைத்து துளி எண்ணெய் தடவவும்.
ஒரு உருண்டையை இலை இன் மேல் வைத்து ரொட்டி போல தட்டவும்.
மெல்ல எடுத்து அடுப்பில் வைத்திருக்கும் தோசை கல்லில் போடவும்.
எண்ணெய் விட்டு இரு புறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்.
சுவையான ராகி ரொட்டி தயார்.
குறிப்பு : இதை தேங்காய் போட்டும் செய்யலாம்
முருங்கை இலை போட்டும் செய்யலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு ரொம்ப நல்லது இது என்ன, கலர் கொஞ்சம் கம்மியாய் இருக்கும் அவ்வளவுதான்
- - - Updated - - -
தேவையானவை :
கம்பு மாவு ஒரு கப்
உப்பு
நெய்
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு மற்றும் உப்புபோட்டு நன்கு கலக்கவும்.
கொஞ்சம் தண்ணீர் விட்டு பிசையவும்.
அரஞ்சு பழ சைசில் உருண்டைகளாக்கவும்.
ஈர துணியில் ஒரு உருண்டையை வைத்து ரொட்டி போல தட்டவும்.
மெல்ல எடுத்து அடுப்பில் வைத்திருக்கும் தோசை கல்லில் போடவும்.
நெய் விட்டு இரு புறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்.
சுவையான கம்பு ரொட்டி தயார்.
குறிப்பு : இந்த மாவு கொஞ்சம் கூட 'பிசுக்கே' இல்லாமல் இருக்கும். விண்டு விண்டு வரும், எனவே சிறிய ரொட்டிகள் செய்வது நல்லது. நிறைய நெய் போடணும், ஏன் என்றால் இது ரொம்ப 'சூடு'. இது நாங்க ராஜஸ்தானில் சாப்பிட்ட பக்குவம். நம்மூரில் எப்படி செய்வார்கள் என்று யாராவது தெரிந்தவர்கள் எழுதுங்கோஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
-
கம்பு ரொட்டிக்கு தொட்டுக்கொள்ள !
இது ரொம்ப நல்லா இருக்கும்.
ஒரு கை நிறைய பச்சைமிளகாய் எடுத்துக்கொண்டு பொடியாக நறுக்கவும். வாணலி இல் எண்ணெய் கொஞ்சம் (1 டேபிள் ஸ்பூன் ) வைத்து கடுகு தாளிக்கவும். பச்சைமிளகாய் யை போடவும். மஞ்சள் பொடி போடவும். உப்பு கொஞ்சம் போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கினதும் ஒரு முடி எலுமிச்சம்பழம் அதிலே பிழியவும். அடுப்பை சின்னதாக்கவும். நன்கு கிளறி இறக்கவும். உப்பு, புளிப்பு நல்ல காரம் என்று இது இருக்கும். பாஜ்ரா மற்றும் எல்லா ரொட்டிகளுக்கும் சூப்பராக இருக்கும். முயன்று பார்க்கவும்.
இதன் போட்டோ இதோஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
-
பார்லி கஞ்சி !
குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடத் தகுந்தது பார்லி. நோயுள்ளவர்களும், நோயற்றவர்களும் சாப்பிடலாம். இதைக் கஞ்சியாக காய்ச்சி குடிப்பர், உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையைக் குறைக்கும். உடல் வறட்சியை போக்க வல்லது. நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்கள் பார்லியை சாப்பிட்டால் குணமாகும். காய்ச்சலை தடுக்கும். வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரிய உதவும். குடல் புண்ணை ஆற்றும். இருமலைத் தணிக்கும். எலும்புகளுக்கு உறுதி தரும்.
தேவையானவை :
ஒரு கப் பார்லி
ஒரு சிட்டிகை உப்பு
செய்முறை :
பார்லியை நன்கு அலசவும்.
பிறகு நாலு கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்
அது நன்கு வெந்து தண்ணீர் பாதியாக குறையும் வரை கொதிக்கட்டும்.
பிறகு அதை வடிகட்டி துளி உப்பு போட்டு குடிக்கவும்.
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
-
சோள ரொட்டி!
தேவையானவை :
சோளம் உதிர்த்து வேகவைத்தது 1 கப்
கோதுமை மாவு 2 கப்
பச்சை மிளகாய் 4 -5
பூண்டு 4 -5 பற்கள்
உப்பு
எண்ணெய் + நெய் சப்பாத்தி செய்ய
செய்முறை :
ஒரு பேசினில் கோதுமை மாவு, உப்பு மற்றும் கொஞ்சம் நெய் போட்டு நன்கு கலக்கவும்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு ரொட்டி மாவு பதத்துக்கு பிசையவும்.
நன்கு அழுத்தி பிசையவும்.
ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
உள்ளே வைக்கும் பூரணத்துக்கு, வேகவைத்த சோளம், பச்சை மிளகாய், பூண்டு மற்றும் உப்பு சேர்த்து சட்ட்று கரகரப்பாக அரைக்கவும்.
வாணலி இல் கொஞ்சம் எண்ணெய் விட்டு அரைத்ததை வதக்கி எடுக்கவும்.
அது நன்கு ஆறட்டும்.
பிறகு வழக்கம் போல, பூரணத்தை நடுவில் வைத்து சப்பாத்திகளாக இடவும்..
தோசை கல்லில் போட்டு , இருபுறமும் நெய் விட்டு எடுக்கவும்..
சுவையான சோள ரொட்டி தயார்
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
-
கேழ்வரகு சேமியா இட்லி !
தேவையானவை :
கேழ்வரகு சேமியா - 1 கப்
வறுத்த ரவை - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
செய்முறை :
கேழ்வரகு சேமியாவைப் இரண்டு தடவை தண்ணீர் விட்டு அலசிவிட்டு, பிறகு சேமியா மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,சிறிது உப்பு போட்டு நன்றாக ஊறவிடவும்.
ஊறியதும் சாதம் வடிப்பதுபோல் நீரை வடிய வைக்கவும்.
சேமியாவில் சுமாராக தண்ணீர் வடிந்தால்போதும்.
ஏனென்றால் சேமியாவில் போதுமான ஈரம் இருக்க வேண்டும்; அப்போதுதான் சேமியா நன்றாக வேகும்.
ஒரு பாத்திரத்தில் ஊறின சேமியா மற்றும் ரவையை போட்டு ஒரு 10 நிமிஷம் வைக்கவும்.
ரவை ஊறினதும், தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்துக்கு கொண்டுவரவும்.
பிறகு இட்லி தட்டுகளில் என்னை தடவி, இட்லி வார்க்கவும்.
வெந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி,காரமான தேங்காய் சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
கரமான பூண்டு சட்னியும் ரொம்ப நல்லா இருக்கும்.என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
-
கேழ்வரகு இட்லி !
தேவையானவை :
கேழ்வரகு மாவு ( களைந்து உலர்த்தி அரைத்தது ) 2 கப்
உளுத்தம் பருப்பு 3/4 கப்
உப்பு
செய்முறை:
கேழ்வரகு மாவை கட்டிகள் இல்லாமல் தண்ணிரில் கரைத்து வைக்கவும்.
உளுந்தை நன்கு களைந்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
பிறகு நன்கு அரைக்கவும், கடைசி இல் கேழ்வரகு மாவையும் சேர்த்து போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
மறுநாள் எப்பவும் போல இட்லி வார்க்கவும்.
நல்லா மெத் என்று வரும் இந்த இட்லி.
கலர் தான் கருப்பா இருக்கும் ஆனால் உடம்புக்கு தெம்பு , ரொம்ப நல்லது.
சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு வரப்பிரசாதம்.என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
-
பார்லி கோதுமை ரவா இட்லி !
தேவையானவை :
பார்லி 2 கப்
கோதுமை ரவை 1 கப்
மிளகாய் வற்றல் 4 -5
உப்பு
செய்முறை :
பார்லியை நன்கு களைந்து ஒரு 4 மணிநேரம் ஊர வைக்கவும்.
கோதுமை ரவையை 1/2 மணி ஊர வைக்கவும்.
பிறகு இரண்டையும் மிளகா உப்பு போட்டு மைய அரைக்கவும்.
மீண்டும் ஒரு அரைமணி அப்படியே வைத்திருந்து விட்டு பிறகு இட்லி வார்க்கவும்.
ஹெல்தியான இட்லி இது
குறிப்பு: வேணுமானால் தண்ணிருக்கு பதில் தயிர் உபயோகிக்கலாம். இதே மாவில் தோசையும் வார்க்கலாம் .
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
-
Re: சிறுதானிய பலகாரங்கள் !
கம்பு ரொட்டி - கலந்த மாவு !
Last edited by krishnaamma; 06-10-15, 01:35.என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
-
ஈர துணியில் ஒரு உருண்டையை வைத்து ரொட்டி போல தட்டவும். இல்லாவிட்டால் இது போல பிளாஸ்டிக் ஷீட் இல் தட்டலாம் நான், அந்தகாலத்தில் சப்பாத்தி maker வைத்திருப்பாங்களே அதில் 'பிரஸ்' செய்தேன்
Last edited by krishnaamma; 06-10-15, 01:36.என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
Comment