மாவு அரைக்க தேவையானவை :
அரிசி 1/4 கப்
கடலை பருப்பு , உளுத்தம் பருப்பு,,துவரம் பருப்பு ,பயத்தம் பருப்பு எல்லாம் சம அளவு.
(அதாவது எல்லா பருப்பும் சேர்த்து ஒரு கப் இருக்கணும்)
சிகப்பு மிளகாய் 4 - 6
பெருங்காய பொடி 1 / 4 ஸ்பூன்
உப்பு
பொடியாக நறுக்கின தேங்காய் 2 டேபிள்ஸ்பூன்
முருங்கை இலை - 1 கைப்பிடி ( கிடைத்தால் போடுங்கள் )
கறிவேப்பிலை கொஞ்சம்
அடைவார்க்க வெண்ணை
செய்முறை :
அரிசி மற்றும் பருப்பு எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு 1 1/2 மணி நேரம் ஊறவைகக்ணும்.
பிறகு மிளகாயை சேர்த்து, நர நர வென்று அரைக்கணும்.
பிறகு உப்பு மற்றும் பெருங்காயத்தை மாவுடன் சேர்க்கவும்.
மிச்ச பொருட்களை கலக்கவும்.
இப்பொழுது மாவை கொண்டு சுவையான அடை செய்யலாம்.
எண்ணைக்கு பதில் வெண்ணை போட்டு அடை செய்யவும்.
அவ்வளவு தான் மிக்சட் தால் அடை - பல பருப்பு அடை தயார் .
சூடான அடையை அவியல் அல்லது தேங்காய் பொடியுடன் சாப்பிடலாம்.