Announcement

Collapse
No announcement yet.

பிராமணர்களும் உணவுத்தொழிலும்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பிராமணர்களும் உணவுத்தொழிலும்

    திருமதி. பாகீரதி ராமநாதன்- Brahmins today

    பிராமணர்களுக்கும் உணவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை நாம் பல நிலைகளில் கண்டும் கேட்டும் இருக்கிறோம். பிராமணர்கள் பிறருக்கு உணவு படைப்பதிலும் மிஞ்சியவர்கள் இல்லை என்பதும் நமக்குத் தெரியும். பட்சி பிராணிகளுக்கும் நாம் உணவு படைத்த பின்பே உணவு உண்ண வேண்டும் என்பதை இன்றளவும் பிராமணக் குடும்பங்களில் காணலாம்.
    அதைப் போலவே பிராமணாள் காப்பி கிளப் என்பதிலிருந்து பிராமின் ஓட்டல் என்பது வரை பிராமணர்கள் உணவுத் தொழிலிலும் ஈடுபட்டு வந்து இன்று பிராமணாள் ஓட்டல்களே இல்லை என்ற நிலைக்கும் அதற்குப்பதில் சைவ உணவகம் என்ற நிலைக்கும் வந்துவிட்டதையும் நாம் கண்டு வருகிறோம்.
    மகாதேவய்யர் காப்பிக் கடையில் மத்யானம் 3 மணிக்கு பஜ்ஜி, போண்டா, உப்பிட்டு போளிக்காக காத்துக் கிடந்த நாள் போய் இன்று பிராமணாள் கடைகளே இல்லை என்ற நிலைதான் உண்மை நிலையாக இருக்கிறது. இந்த அழிவுநிலை சமகாலத்தில் சில “பிராமணாள் மெஸ்கள்” புதிதாக வேலைக்குச் சேர்ந்த இளைஞர்களின் வயிற்றுவலிக்கு மருந்தாக இருந்துவந்ததையும் நாம் காணலாம்.
    இந்த மெஸ்களும் இப்போது புலம்பெயர்ந்து வேற்று இனத்தவர் கைகளுக்கு சென்றுவிட்டன. அதையும் தாண்டி இன்னும் சிலர் வீடுகளில் “Paying guest” என்ற முறையில் அருகில் தங்கியிருப்போருக்கும் வேலைக்கு சென்றுவரும் பெண்கள், ஆண்கள் பலருக்கும் உணவு படைத்து தங்கள் வயிற்றையும் கழுவிக்கொண்டு இருக்கின்றனர்.
    பிராமண ரசமும் சாம்பாரும் பச்சடியும் அபாரம் என வியந்து வாயில் ஜொள்ளு ஒழுக ருசித்து, ரசித்து சாப்பிட்டபின் அவர்களைப் பழிக்கும் நிலையும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க இன்று திராவிட இயக்கத்தால் பாதிக்கப்பட்டு ஓரம் கட்டிவைக்கப்பட்டுள்ள பிராமணச் சமூகம் பொருளாதார ரீதியில் மிகவும் தாக்கப்பட்டுள்ளதை சமூகப் பார்வையாளர்கள் மற்றும் நோக்கர்கள் யாரும் மறுக்க முடியாது. இருப்பினும் வேறு வேலை கிடைக்காவிடினும் “கையில் கரண்டியை எடுடா ராமா, நம் பிழைப்பு நடக்கட்டும்” என்று தன்னம்பிக்கையுடன் நமக்கு நாமே ஏற்படுத்திய வேலைவாய்ப்புகள் உணவுத் தொழிலில் ஏராளம் உண்டு.

    -மணர்களும் பொருளாதார பின்னடைவும்:
    இன்று பிராமணர்களில் பொருளாதாரத்தில் பின் தங்கிய சமூக நிலை இருப்பினும் பலர் உணவுத்தொழிலில் சமையல் தொழில், கல்யாண காண்டிராக்டர்கள், பணியாளர்கள் என பல வேலைகளிலும் இறங்கி விட்டதால் அவர்களது உழைப்பிற்கும்பிழைப்பிற்கு பங்கம் வராமல் வாழமுடிகிறது என்றால் அதற்கு அந்த “அன்னபூரணிதான்” காரணம் என்றால் மிகையில்லை.

    - உணவுத்தொழிலில் நெல்லைப்பயிரிடும் விவசாயி மற்றும் அதை உண்டும் பசியாற்றும் கடைசி மனிதன் தவிர இடைப்பட்ட அனைத்து மக்களுக்கும் “உணவு பாதுகாப்பு சட்டம்” பொருந்தும் என்பதுடன் உணவு படைத்தலை நாம் தொழிலாகக் கருதாத சமுதாயத்தில் பண்பாட்டு பாட்டையில் இருந்தாலும் இன்று உணவு படைத்தல் தொழில் துறையில் ஒரு பெரிய பங்கினை வகிக்கின்றது.
    -fஉணவுத் தொழில் மற்றும் விருந்தோம்பல் சேவைகள்இந்திய சுற்றுலாத்துறையின் கீழ்வரும் “hospitality services” என்று சொல்லப்படும் “விருந்தோம்பல் துறை” மிகப்பெரிய அளவில் இந்திய பொருளாதாரத்தின் வருவாய் ஈட்டும் பகுதியாக இருப்பதையும் நாம் மறுப்பதற்கில்லை. அதற்கென தொழில்முறை படிப்புகளும் இன்று பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும், கல்வி நிறுவனங்களும் போட்டிபோட்டு நடத்திக்கொண்டு இருக்கின்றன.


    உணவுத் தொழில் என்பது உணவு சமைப்பது முதல் உணவு தயாரித்தளித்தல் என்பது வரை பல தொழில் நிலைகளைக்கொண்டுள்ளது. இதற்கென லைசென்ஸ் அல்லது பதிவு சட்டங்கள் உள்ளனவா? என்று பலருக்கு சந்தேகம் உள்ளது. அப்படி ஏதாவது இருந்தால் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் வந்துகேட்டால் பார்த்துக்கொள்ளலாம் என்று அலட்சியப்படுத்தியும் விடுகிறோம். இதற்கெல்லாம் முடிவுகட்டவே வந்துள்ளது “இந்திய உணவு பாதுகாப்பு சட்டம்” ஆகும். இதனை இன்னமும் முழுமையாக நடைமுறைபடுத்தவில்லை என்றாலும் பல கட்டங்களில் இச்சட்டம் தன் வேலையினை செய்துகொண்டுதான் இருக்கிறது.


    உணவுப்பாதுகாப்பு சட்டம், 2006


    இந்த சட்டத்தை விளக்குவது என்றால் பல பக்கங்களை நாம் தியாகம் செய்யவேண்டியிருக்கும் என்பதால் சுருக்கமாக சில தகவல்களை மட்டும் இந்த கட்டுரையில் தந்துள்ளேன்.
    (1) தொழில் முறையில் உணவுப்பொருளைக் கைகால் தொடும் யாராக இருப்பினும் அவர்களுக்கு அரசு பதிவு சான்றிதழ் வேண்டும். சமையல் தொழிலாளி, சமையல் காண்டிராக்டர், சப் காண்டிராக்டர், உணவுப் பொருட்களை பதனிடுவோர், பாக்கெட்டுக்களில் அடைத்து விற்பனை செய்வோர், சிறிய பெரிய அளவில் உணவுப் பொருட்களை பாக்கெட்டுக்கள், டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்வோர் என அனைத்து தரப்பினரும் இந்த சட்டத்தின் எல்லைக்குள் வருகின்றனர்.







    Last edited by P.S.NARASIMHAN; 20-07-15, 16:42.

  • #2
    Re: பிராமணர்களும் உணவுத்தொழிலும்

    A very good start.Hope this write up is going to be continued to know more about the laws governing it.
    Waiying to seenext part,
    Varadarajan

    Comment

    Working...
    X