Announcement

Collapse
No announcement yet.

ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் -10 'ஓட்ஸ் உப்புமா '

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் -10 'ஓட்ஸ் உப்புமா '

    'ஓட்ஸ் உப்புமா '

    தேவையானவை:


    வறுத்த ஓட்ஸ் 1 கப்
    வெங்காயம் 2 (பொடியாய் நறுக்கவும்) (OPTIONAL )
    பச்சை மிளகாய் 6 - 8
    இஞ்சி துருவல் - 1 ஸ்பூன்

    தாளிக்க:
    கடுகு 1 ஸ்பூன்
    உளுந்து 1 ஸ்பூன்
    கடலை பருப்பு 1 ஸ்பூன்
    கொத்துமல்லி 1 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - 2 ஸ்பூன்
    நெய்1 ஸ்பூன்
    உப்பு தேவையான அளவு

    செய்முறை:

    ஒரு கனமான வாணலி இல் ஓட்ஸ் ஐ வறுக்கவும்.
    ஆற வைக்கவும்.
    வாணலி இல் நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
    வெங்காயம் போடவும்.
    நன்கு கிளறவும், உப்பு போட்டு வதக்கவும்.
    இப்ப அடுப்பை சின்ன தாக்கி விட்டு, வறுத்த ஓட்ஸ் ஐ போட்டு வறுக்கவும்.
    1 ஸ்பூன் நெய்விட்டு மீண்டும் நன்கு வறுக்கவும்.
    அது நன்கு வறுபட்டதும் மட்டாக தண்ணீர் விடவும், கிளறி விடவும்.
    ஓட்ஸ் நன்கு வெந்ததும் கொத்துமல்லி தூவி கிளறி இறக்கவும்.
    நல்ல சுவையான 'ஓட்ஸ் உப்புமா ' தயார்.

    குறிப்பு: தேவையானால் இந்த உப்புமாவில் உங்களுக்கு பிடித்த காய் கறிகளை போடலாம் அல்லது முந்திரி வறுத்து போடலாம்.
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart
Working...
X