Announcement

Collapse
No announcement yet.

ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் -9 அடை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் -9 அடை


    ஓட்ஸ்அடை


    தேவையானவை :


    ஓட்ஸ் 1 கப்
    அரிசி மாவு 1/2 கப்
    சோள மாவு 1/2 கப்
    பெரிய வெங்காயம் 1 (பொடியாக நறுக்கவும்) - optional
    பச்சை மிளகாய் 2 (பொடியாக நறுக்கவும்)
    உப்பு
    அடை வார்க்க எண்ணை

    செய்முறை:

    முதலில் ஓட்ஸ் ஐ வெறும் வாணலி இல் போட்டு வறுக்கவும்.
    கர கர ப்பாக மிக்சி இல் பொடிக்கவும்.
    ஒரு பாத்திரத்தில் போட்டு அரிசி மாவு, சோள மாவுடன் கலக்கவும்.
    உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய் எல்லாம் போட்டு கொஞ்சமாய் தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும் .
    ஒரு பிளாஸ்டிக் கோவரில் அல்லது வாழை இலை இல் எண்ணை தடவி, இந்த மாவில் ஒரு சாத்துகுடி அளவு எடுத்து அடை போல் தடவும்.
    உரித்து எடுத்து தோசை கல்லில் போட்டு இரண்டு பக்கமும் எண்ணை விட்டு எடுக்கவும்.

    குறிப்பு: மிளகாய் வேண்டாம் என்பவர்கள் மிளகாய் பொடி போட்டுக்கலாம்; மிளகு சீராக பொடி போடலாம், கரம் மசாலா போடலாம் நம் சுவைக்கு ஏற்ப செயலாம கறிகாய் கூட காரட் துருவி போடலாம .
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart
Working...
X