Announcement

Collapse
No announcement yet.

அவல் வடகம் - சுவையான ரெசிபி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அவல் வடகம் - சுவையான ரெசிபி

    அவல் வடகம்


    தேவையான பொருள்கள் :


    அவல் - 4 கப்
    ஜவ்வரிசி - 1 கப்
    பச்சை மிளகாய் - 10 எண்ணம்
    ஜீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு தேவையான அளவு


    செய்முறை :


    முன் தினம் இரவு ஜவ்வரிசி - ஊறப்போடவும்.
    காலையில் நன்றாக அலம்பி, 5 கப் ஜலம் விட்டு வேக
    வைக்கணும். அது கொதிக்கும் நேரத்தில், அவலை ஜலத்தில்
    30 நிமிடம் ஊரனும். பிறகு ஜலத்தை வடிகட்டி தனியாக
    வைக்கவும் .ஜவ்வரிசி நன்கு வெந்ததும் , பச்சை மிளகாய் +
    உப்பு +ஜீரகம் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து, விழுதை
    அதில் சேர்த்து நன்கு கிண்டி கொடுக்கவும். தீயை அணைத்து
    விட்டு ஆற வைக்கவும். எல்லாம் ஓன்று சேர்த்து நன்கு
    கலக்கவும். கையால் புரட்டி, சிறிது டேஸ்ட் பார்த்து விட்டு,
    எல்லாம் சரியானபடி உள்ளதை உறுதி செய்து,
    ஒரு வெள்ளை வேஷ்டியில் கிள்ளி கிள்ளி வைத்து,
    நன்கு உலர விடணும், 4 நாட்கள் உலர்ந்ததும், கண்ணாடி பாட்டிலில்
    பத்திரபடுத்தவும். எண்ணெயில் பொரித்தும், அதை குழம்பில்
    போட்டு உறியும் சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.
Working...
X