மாங்காய் தொக்கு ! - என்னைப்பொருத்த வரை உலகத்திலேயே அருமையான தொக்கு இது என்பேன். 'மாதா ஊட்டாத சாதத்தை மாங்காய் ஊட்டும்" என்று என் தாத்தா சொல்வார்
தேவையானவை:
நல்ல புளிப்பு மாங்காய் 1 கிலோ தோல் சீவி துருவி வைக்கவும்.
மிளகாய் பொடி 200 கிராம்
உப்பு அநேகமாய் 100 - 150 போதுமானது
வறுத்து அரைத்த வெந்தயப்பொடி 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி 2 டீ ஸ்பூன்
எண்ணெய் தொக்கு செய்வதற்கு 1/4 கிலோ
கடுகு 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
மாங்காய்களை அலம்பி துடைத்து தோல் சீவி, துருவவும்.
ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்.
அதில் துருவின மாங்காயை போட்டு அடுப்பை நிதானமாய் எரிய விடவும்.
நன்கு கிளறிவிடவும்.
மஞ்சள் பொடி, பெருங்காயபொடி மற்றும் வெந்தயப்பொடி போடவும்.
நன்கு கிளறி விடவும்.
கொஞ்சம் வெந்தார்போல ஆகும் போது உப்பு போடவும்.
மீண்டும் நன்கு கிளறி விடவும்.
எண்ணெய் கசிய ஆரம்பிக்கும் போது மிளகாய் பொடியை போட்டு அடுப்பை பெரிதாக்கி, கைவிடாமல் கிளறி , மிளகாய் பொடி வாசனை போனதும் இறக்கிவிடவும்.
நன்கு ஆறினதும் பாட்டிலில் போட்டு வைக்கவும்.
வருஷத்துக்கும் கெடாது
குறிப்பு : கொஞ்சம் புளிப்பு கம்மியாக இருக்கணும் தொக்கு என்று நினைப்பவர்கள் பெங்களுரா மாங்காய் இல் தொக்கு போடலாம். அல்லது ஊறுகாய் இல் வெல்லம் கொஞ்சம் போடலாம் எங்க அப்பாவுக்காக தனியாக நான் பங்களுராவில் தொக்கு போடுவேன்