Announcement

Collapse
No announcement yet.

தக்காளித் தொக்கு !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தக்காளித் தொக்கு !

    தக்காளித் தொக்கு ! - இதுவும் அருமையான தொக்கு, நிறைய நாள் வைத்துக்கொள்ளலாம்.

    தேவையானவை:

    பெங்களூர் தக்காளி 1 கிலோ
    மிளகாய் பொடி 150 - 200 கிராம்
    உப்பு அநேகமாய் 75 - 100 கிராம் போதுமானது
    வறுத்து அரைத்த வெந்தயப்பொடி 2 டேபிள் ஸ்பூன்
    பெருங்காயப்பொடி 1 டீ ஸ்பூன்
    மஞ்சள் பொடி 2 டீ ஸ்பூன்
    எண்ணெய் தொக்கு செய்வதற்கு 1/4 கிலோ
    கடுகு 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    தக்காளிகளை அலம்பி துடைத்து நறுக்கி, விதைகள் நீக்கி, தண்ணீர் விடாமல் மிக்சி இல் அரைத்துக்கொள்ளவும்.
    ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்.
    அதில் அறத்த தக்காளியை போட்டு அடுப்பை நிதானமாய் எரிய விடவும்.
    நன்கு கிளறிவிடவும்.
    மஞ்சள் பொடி, பெருங்காயபொடி மற்றும் வெந்தயப்பொடி போடவும்.
    நன்கு கிளறி விடவும்.
    கொஞ்சம் நேரம் எடுக்கும் தொக்கு இது, நன்கு கொதித்து, கொதித்து, குறைந்து தொக்குபோல சேர்ந்து வரும் போது உப்பு போடவும்.
    மீண்டும் நன்கு கிளறி விடவும்.
    எண்ணெய் கசிய ஆரம்பிக்கும் போது மிளகாய் பொடியை போட்டு அடுப்பை பெரிதாக்கி, கைவிடாமல் கிளறி , மிளகாய் பொடி வாசனை போனதும் இறக்கிவிடவும்.
    நன்கு ஆறினதும் பாட்டிலில் போட்டு வைக்கவும்.
    இதுவும் வருஷத்துக்கும் கெடாது
    சப்பாத்தி , இட்லி தோசை, தயிர் சாதம் , சண்ட்விச் என்று எதுக்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம்.

    குறிப்பு: தக்காளி அரைத்ததும் நிறைய போல தோன்றும் அதனால் அப்போ உப்பு போடாதீங்கோ, அது கொதித்து குறைந்ததும், அளவைப்பர்த்துக்கொண்டு உப்பு போடுங்கோ. இல்லாவிட்டால் உப்பு அதிகமாகி தொக்கு கரித்து விடும்.

    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart
Working...
X