Announcement

Collapse
No announcement yet.

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்ட

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • #16
    Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்&am

    Originally posted by bmbcAdmin View Post
    பாம்பே சட்னி ஒன்றுதான் செய்து பார்த்தேன்
    அவ்வளவு சரியாக வரவில்லை.

    தப்பாக நினைக்கவேண்டாம் - சிலவற்றின் பெயர் பிடிக்காததால் (ஒரு மாதிரி இருப்பதால்)
    அவற்றை முயற்சிக்கவில்லை.

    டால் அது முன்னமேயெ தெரிந்தது, அது அவ்வளவு இணையாக இல்லை.
    மீண்டும் மாமி ஊரில் இல்லாதபோதுதான் செய்து பார்க்கவேண்டும்
    என்று முன்னமேயே பதில் போட்டிருந்தேன்.
    நன்றி,
    என்.வி.எஸ்
    இதுல தப்பாய் நினைக்க என்ன இருக்கு மாமா, எந்த பேர் பிடிக்கலை உங்களுக்கு, சொல்லுங்கோ பேரை மாத்திடறேன். ...ம்.பார்த்தேன் அந்த திரி இல் சொல்லி இருகீங்க ......போகட்டும் இன்னும் சில போடறேன் பிடிக்கிறதா ...(முதல்ல பேர் பிடிக்கிறதா என்று பாருங்கோ ) பாருங்கோ

    ............ஆமாம் ஒன்று கேட்கவா?......மேலே வெங்காயம் பூண்டு போடாத தளிகை தான் இங்கு போடணும் என்று நீங்க போட்டும் சிலர் அப்படிப்பட்ட குறிப்புகள் போடறாங்களே மாமா?.என்ன பண்ணுவது?
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment


    • #17
      'தேங்காய் துவையல்'

      தேவையானவை :

      தேங்காய் 1 துருவிக்கொள்ளவும்
      குண்டு மிளகாய் வற்றல் 5 - 6
      புளி பேஸ்ட் 1 டீ ஸ்பூன்
      தாளிக்க எண்ணெய் + கடுகு, உளுத்தம் பருப்பு
      உப்பு

      செய்முறை:

      ஒரு வாணலி இல் 1/2 ஸ்பூன் எண்ணை விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் மிளகாய் வற்றலை தாளித்து ஒரு பேசினில் கொட்டிக்கொள்ளவும்.
      அதிலிருந்து மிளகாய் வற்றல் ஐ மட்டும் எடுத்துகொண்டு, அத்துடன் தேங்காய் , உப்பு ,புளி பேஸ்ட் போட்டு மிக்சி இல் அரைக்கவும்.
      தேவை என்றால் மட்டுமே துளி ஜலம் விடுங்கோ....இல்லாவிட்டால் அப்படியே அரைக்கவும்.
      இதை தாளித்து வைத்ததுடன் கொட்டி கிளறவும்.
      அவ்வளவுதான், சுவையான 'தேங்காய் துவையல்' ரெடி.
      சுடு சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.
      தோசை, சப்பாத்திக்கும் தொட்டுக்கலாம்.
      ரசம் செய்யும் போது இதையும் செய்தால் அட்டகாசம் போங்கள்

      குறிப்பு : என். வி.எஸ். மாமா, எங்க அப்பாவுக்கு அம்மா இந்த துவையல் செய்து தருவா சப்பாத்திக்கு. சப்பத்திமேல தடவி மடித்து கொடுத்திடுவா, மத்யானம் சாப்பிடும்போது மெத் என்றும் இருக்கும் ருசியாவும் இருக்கும் என்று. எனவே , இங்கு சில துவையல்களும் தக்காளி தொக்கும் போடுகிறேன். உங்கள் taste க்கு ஒத்து வருதா பாருங்கோ
      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

      http://eegarai.org/apps/Kitchen4All.apk

      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

      Dont work hard, work smart

      Comment


      • #18
        புடலங்காய் துவையல்

        தேவையானவை :

        1/4 கிலோ புடலங்காய்
        2 ஸ்பூன் புளி பேஸ்ட்
        1 -2 மிளகாய் வற்றல் அல்லது 1 ஸ்பூன் மிளகு
        உப்பு
        கொஞ்சம் எண்ணை
        கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
        2 டீ ஸ்பூன் எள்


        செய்முறை :

        புடலங்காயை அலம்பி நறுக்கவும்.
        வாணலி இல் எண்ணெய் விடாமல் எள்ளை 'பட பட' வென பொறியும் வரை வறுக்கவும்.
        தனியே வைக்கவும்.
        பிறகு வாணலி இல் எண்ணெய் விட்டு மிளகாய்வற்றல் போட்டு தாளித்து, நறுக்கி வைத்துள்ள
        புடலங்காயை போட்டு நன்கு வதக்கவும்.
        கொஞ்சம் வதங்கினதும் உப்பு போட்டு வதக்கவும்.
        பிறகு எல்லாவற்றையும் மிக்சி இல் போட்டு அரைக்கவும்;
        வாணலி இல் எண்ணை விட்டு கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து துவையல் மீது கொட்டவும்.
        அவ்வளவுதான் புடலங்காய் துவையல் ரெடி.

        குறிப்பு : எள் போடுவதால் ரொம்ப வாசனையாக நல்லா இருக்கும். நீங்க புடலங்காய்யை கூட்டு செய்யும்போது உள்ளே இருக்கும் விதைகளில் கூட இந்த துவையல் செய்யலாம்.இது சாதத்துடன் மட்டும் அல்ல
        சப்பாத்திக்கு, தோசை இட்லி க்கு கூட தொட்டுக்கொள்ள நல்லா இருக்கும்.

        என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

        http://eegarai.org/apps/Kitchen4All.apk

        http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

        Dont work hard, work smart

        Comment


        • #19
          பீர்கங்காய் துவையல்

          தேவையானவை :

          1/4 கிலோ பீர்கங்காய்
          2 ஸ்பூன் புளி பேஸ்ட்
          10 -12 மிளகாய் வற்றல்
          உப்பு
          கொஞ்சம் எண்ணை
          கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
          2 டீ ஸ்பூன் எள்


          செய்முறை :

          பீர்க்கங்காயை அலம்பி நறுக்கவும்.
          வாணலி இல் எண்ணெய் விடாமல் எள்ளை 'பட பட' வென பொறியும் வரை வறுக்கவும்.
          தனியே வைக்கவும்.
          பிறகு வாணலி இல் எண்ணெய் விட்டு மிளகாய்வற்றல் போட்டு தாளித்து, நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காயை போட்டு நன்கு வதக்கவும்.
          கொஞ்சம் வதங்கினதும் உப்பு போட்டு வதக்கவும்.
          பிறகு எல்லாவற்றையும் மிக்சி இல் போட்டு அரைக்கவும்;
          வாணலி இல் எண்ணை விட்டு கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து துவையல் மீது கொட்டவும்.
          அவ்வளவுதான் பீர்கங்காய் துவையல் ரெடி.

          குறிப்பு : எள் போடுவதால் ரொம்ப வாசனையாக நல்லா இருக்கும். நீங்க பீர்க்கங்காயை கூட்டு செய்யும்போது மீறும் தோலி இல் கூட இந்த துவையல் செய்யலாம்.இது சாதத்துடன் மட்டும் அல்ல சப்பாத்திக்கு, தோசை இட்லி க்கு கூட தொட்டுக்கொள்ள நல்லா இருக்கும்.


          - - - Updated - - -

          தேவையானவை :

          1 கப் துருவின இஞ்சி
          2 ஸ்பூன் புளி பேஸ்ட்
          1/2 ஸ்பூன் வறுத்து பொடித்த வெந்தய பொடி
          1 டீ ஸ்பூன் பொடித்த வெல்லம்
          2 - 4 மிளகாய் வற்றல்
          உப்பு
          கொஞ்சம் எண்ணை
          கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்

          செய்முறை :

          வாணலி இல் எண்ணை விட்டு இஞ்சி, மிளகாய் போட்டு வதக்கவும்.
          மிக்சி இல் புளி பேஸ்ட், வெல்லம் மற்றும் உப்பு போட்டு அரைக்கவும்.
          தண்ணீர் ரொம்ப மட்டாக விடவும்.
          வாணலி இல் எண்ணை விட்டு கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து துவையல் மீது கொட்டவும்.
          அவ்வளவுதான் இஞ்சி துவையல் ரெடி.
          வயத்து கோளாறுக்கு கூட இந்த துவையல் ரொம்ப நல்லது
          என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

          http://eegarai.org/apps/Kitchen4All.apk

          http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

          Dont work hard, work smart

          Comment


          • #20
            தக்காளித் தொக்கு !

            தக்காளித் தொக்கு !

            தேவையானவை:

            பெங்களூர் தக்காளி 1 கிலோ
            மிளகாய் பொடி 150 - 200 கிராம்
            உப்பு அநேகமாய் 75 - 100 கிராம் போதுமானது
            வறுத்து அரைத்த வெந்தயப்பொடி 2 டேபிள் ஸ்பூன்
            பெருங்காயப்பொடி 1 டீ ஸ்பூன்
            மஞ்சள் பொடி 2 டீ ஸ்பூன்
            எண்ணெய் தொக்கு செய்வதற்கு 1/4 கிலோ
            கடுகு 1 டேபிள் ஸ்பூன்

            செய்முறை:

            தக்காளிகளை அலம்பி துடைத்து நறுக்கி, விதைகள் நீக்கி, தண்ணீர் விடாமல் மிக்சி இல் அரைத்துக்கொள்ளவும்.
            ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்.
            அதில் அறத்த தக்காளியை போட்டு அடுப்பை நிதானமாய் எரிய விடவும்.
            நன்கு கிளறிவிடவும்.
            மஞ்சள் பொடி, பெருங்காயபொடி மற்றும் வெந்தயப்பொடி போடவும்.
            நன்கு கிளறி விடவும்.
            கொஞ்சம் நேரம் எடுக்கும் தொக்கு இது, நன்கு கொதித்து, கொதித்து, குறைந்து தொக்குபோல சேர்ந்து வரும் போது உப்பு போடவும்.
            மீண்டும் நன்கு கிளறி விடவும்.
            எண்ணெய் கசிய ஆரம்பிக்கும் போது மிளகாய் பொடியை போட்டு அடுப்பை பெரிதாக்கி, கைவிடாமல் கிளறி , மிளகாய் பொடி வாசனை போனதும் இறக்கிவிடவும்.
            நன்கு ஆறினதும் பாட்டிலில் போட்டு வைக்கவும்.
            இதுவும் வருஷத்துக்கும் கெடாது
            சப்பாத்தி , இட்லி தோசை, தயிர் சாதம் , சண்ட்விச் என்று எதுக்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம்.

            குறிப்பு: தக்காளி அரைத்ததும் நிறைய போல தோன்றும் அதனால் அப்போ உப்பு போடாதீங்கோ, அது கொதித்து குறைந்ததும், அளவைப்பர்த்துக்கொண்டு உப்பு போடுங்கோ. இல்லாவிட்டால் உப்பு அதிகமாகி தொக்கு கரித்து விடும்.

            என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

            http://eegarai.org/apps/Kitchen4All.apk

            http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

            Dont work hard, work smart

            Comment

            Working...
            X