இந்த திரி இல் , எல்லாவிதமான "Side Dishes" அதாவது டிபனுக்கு தொட்டுக்கொள்பவற்றை பார்போம். இவைகளை இட்லி, தோசை , உப்புமா, சப்பாத்தி மற்றும் பூரி கு தொட்டுக்கொள்ளலாம்.
Announcement
Collapse
No announcement yet.
" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்ட
Collapse
X
-
" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்ட
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smartTags: None
-
பாம்பே சட்னி !
தேவையானவை :
1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
3 -4 பச்சை மிளகாய்
4 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
2 தக்காளி
கறிவேப்பிலை
கொத்துமல்லி
உப்பு
கொஞ்சம் எண்ணை
செய்முறை:
தக்காளி, பச்சை மிளகாய் என அனைத்தயும் மிகவும் பொடியாக நறுக்கவும்.
வாணலி இல் எண்ணை வைத்து , கடுகு, உளுந்து போட்டு தாளிக்கவும்.
நறுக்கி வைத்தத்தை போட்டு வதக்கவும்.
கடலை மாவில் தண்ணீ விட்டு கரைத்து வாணலி இல் ஊற்றவும்.
நன்கு கொதித்து கெட்டியானதும் (சட்டினி போல் ஆனதும் ) இறக்கவும்.
கறிவேப்பிலை கொத்தமல்லி தூவி இறக்கவும்.
தோசை இட்லி கு நல்லா இருக்கும்.என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
-
மேத்தி மலாய் மசாலா !
தேவயானவை :
பனீர் - 250 கிராம் ( துண்டமாக்கவும்)
காய்ந்த மேத்தி இலைகள் ( கசூர் மேத்தி - கடைகளில் கிடைக்கும் ) - 2 டேபிள் spoon (வெந்தயக்கீரை தான் 'மேத்தி ' )
மலாய் ( பால் ஏடு) - 4 டேபிள் ஸ்பூன்
முந்திரி விழுது - 1/2 கப்
மிளகு பொடி - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
பால் - 1/2 கப்
எண்ணை - 2 ஸ்பூன்
உப்பு
தண்ணீர் 1/4 கப்
செய்முறை:
ஒரு வாணலி இல் எண்ணை விட்டு சீரகம் போடவும்.
அது பொரிந்ததும் , வெந்தய கீரையை கையால் நொறுக்கி போடவும்.
ஒரு கிளறு கிளறி, முந்திரி விழுது, பால் ஏடு போட்டு நன்கு கிளறவும்.
எண்ணை பிரிந்து வரும்வரை நன்கு வதக்கவும்.
உப்பு மற்றும் மிளகு பொடி போடவும்.
நன்கு கலக்கவும்
பிறகு பால் மற்றும் தண்ணீர் விடவும்.
நன்கு கலக்கவும் , ஒரு கொதி வந்ததும் , நறுக்கி வைத்துள்ள பனீர் துண்டங்களை
போடவும்.
மறுபடி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
சுவையான பஞ்சாபி "மேத்தி மலாய் மசாலா " தயார்.
சப்பாத்தி அல்லது 'நான்' உடன் பரிமாறவும்.என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
-
ஆலு மேத்தி சப்ஜி
தேவையானவை :
1 /2 கிலோ உருளைக்கிழங்கு
1 பெரிய கட்டு வெந்தயக்கீரை
காரத்திற்கு தேவையான மிளகாய் பொடி அல்லது பச்சை மிளகாய்
தளிக்க:
கடுகு
உளுத்தம் பருப்பு
கடலை பருப்பு
எண்ணெய்
தேவையான அளவு உப்பு
பெருங்காயப்பொடி
மஞ்சள் பொடி
செய்முறை :
உருளைக்கிழங்கை உப்பு போட்டு வேகவைக்கவும்.
தோல் உரிக்கவும் , சதுரங்களாக வெட்டி வைக்கவும்.
வெந்தயக்கீரையை நன்கு ஆய்ந்து அலசி நறுக்கவும்.
ஒரு வாணலி இல் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்குகளை போட்டு வதக்கவும்.
கொஞ்சம் வதங்கினதும், நறுக்கி வைத்துள்ள வெந்தயக்கீரையை தூவி நன்கு கிளறவும்.
எல்லாமாக ஒன்று சேர்ந்ததும் இறக்கவும்.
வெந்தய மணமாக சப்ஜி ரொம்ப நல்லா இருக்கும்.
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
-
ஆலு சன்னா
தேவையானவை :
ஒரு கப் வேகவைத்த கொத்துக்கடலை
இரண்டு கப் வேகவைத்த உருளைக்கிழங்கு
4 - 5 பச்சை மிளகாய்
ஒரு இன்ச் இஞ்சி துண்டு
ஒரு ஸ்பூன் சீரகம்
ஒரு ஸ்பூன் கடுகு
கொத்துமல்லி இலைகள் கொஞ்சம்
கறிவேப்பிலை இலைகள்
கொஞ்சம் மஞ்சள் பொடி
உப்பு
எண்ணெய்
பொடிக்க வேண்டியவை:
கொஞ்சம் மிளகு- சீரகம் , 4 ஏலக்காய், ஒரு சின்ன துண்டு லவங்க பட்டை, 4 லவங்கம் , ஒரு பிரிஞ்சி இலை எல்லாவற்றையும் பொடித்து வைத்துக்கொள்ளவும். அதிலிருந்து ஒரு சின்ன ஸ்பூன் பொடியை இந்த கறியமுதுக்கு போடவும்.
செய்முறை :
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் போட்டு தாளிக்கவும்.
கடுகு வெடித்ததும், பச்சை மிளகாய் , துருவின இஞ்சி கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வதக்கவும்.
வேக வைத்த கொத்துக்கடலை யை போட்டு நன்கு மசிக்கவும்.
மேலே சொன்ன பொடியை ஒரு சின்ன ஸ்பூன் போடவும்.
கொஞ்சம் தண்ணீர் விட்டு நன்கு மசிக்கவும்.
மஞ்சள் பொடி போடவும்.
கொஞ்சம் சேர்ந்தாற்போல ஆனதும் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை போடவும்.
நறுக்கி வைத்துள்ள கொத்துமல்லி மற்றும் கறிவேப்பிலையை போடவும்.
நன்கு கிளறவும்.
சேர்ந்தாற்போல ஆனதும் இறக்கவும்.
வாசனை ஆளை தூக்கும்..... ரொம்ப நல்லா இருக்கும்.
குறிப்பு: இதை சப்பாத்தி இல் வைத்து சுருட்டி அலுமினியம் foil இல் சுற்றி மத்தியானத்துக்கு வைக்கலாம். லஞ்ச் க்கு வைக்கலாம். ரொம்ப நல்லா இருக்கும்.
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
-
பென்கன் கா பர்த்தா
பென்கன் கா பர்த்தா அதாவது கத்தரிக்காய் கொத்சு
தேவையானவை :
ஒரு பெரிய குண்டு கத்தரிக்காய்
ஒரு பெரிய பெங்களூர் தக்காளி
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் ஒரு டேபிள் ஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி அரை ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்துமல்லி
பொடித்த சீரகம் அரை ஸ்பூன்
பொடித்த 'கரம் மசாலா' அரை ஸ்பூன்
மிளகாய் பொடி
மஞ்சள் பொடி
ஒரு சிட்டிகை பெருங்காயப்பொடி
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் (தேவையானால் )
தாளிக்க:
கடுகு
சீரகம்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் கொஞ்சம்
செய்முறை :
கத்தரிக்காயை நன்கு அலம்பி, துடைக்கவும்.
கொஞ்சம் எண்ணெய் தடவவும்.
காஸ் ஸ்டவ் இல் நெருப்பில் காட்டி சுடவும்.
எல்லா பக்கமும் நன்கு சுட திருப்பி விடவும்.
நன்கு வெந்ததும், ஒரு பெரிய பேசினில் தண்ணீர் விட்டு இத போடவும்.
ஆறினதும் தோலை எடுக்கவும்.
கையால் நன்கு பிசையவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்.
பிறகு இஞ்சி , பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
நறுக்கின தக்காளி போடவும். பெருங்காயப்பொடி, மஞ்சள் பொடி போடவும்.
நன்கு வதக்கவும்.
மிளகாய் பொடி, சிரகப்பொடி, மஞ்சள் பொடி, பொடித்து வைத்த கரம் மசாலா பொடி என எல்லாம் போடவும்.
உப்பு போடவும்.
அது நன்கு வதங்கினதும், கத்தரிக்காயை போடவும்.
அரை கப் தண்ணீர் விடவும்.
நன்கு கொதிக்கும் வரை அடுப்பில் இருக்கட்டும்.
அப்ப அப்ப கிளறி விடவும்.
கொத்துமல்லி தூவி இறக்கவும் .
தேவையானால் கொஞ்சம் ஆறினதும் எலுமிச்சை சாறு விடவும்.
சப்பாத்தி மற்றும் பூரிக்கு தொட்டுக்கொள்ள நல்லா இருக்கும்.
கரம் மசாலா பொடி :கொஞ்சம் மிளகு- சீரகம் , 4 ஏலக்காய், ஒரு சின்ன துண்டு லவங்க பட்டை, 4 லவங்கம் , ஒரு பிரிஞ்சி இலை எல்லாவற்றையும் பொடித்து வைத்துக்கொள்ளவும். அதிலிருந்து ஒரு சின்ன ஸ்பூன் பொடியை இந்த கறியமுதுக்கு போடவும்.
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
-
'கடி பகோடா'
தேவையானவை :
1 1 /2 கப் கடலை மாவு
2 ஸ்பூன் மிளகாய் பொடி
அரை ஸ்பூன் ஓமம்
ஒரு சிட்டிகை பெருங்கயப்பொடி
கால் ஸ்பூன் சோடா உப்பு
2 கப் திக்கான மோர்
அரை ஸ்பூன் வறுத்து பொடித்த வெந்தயப்பொடி
அல்லது காய்ந்த வெந்தய கீரை
கறிவேப்பிலை
உப்பு
பொரிக்க எண்ணெய்
செய்முறை:
முதலில் ஒரு பேசினில் பாக்கி ஒரு கப் கடலை மாவை போட்டு, ஓமம், சோடா உப்பு, கொஞ்சம் மிளகாய் பொடி, உப்பு போடவும்.
தண்ணீர் விட்டு பகோடா மாவு போல கரைக்கவும்.
ஒரு பக்கமாய் வைக்கவும்.
மோரை நன்கு குழப்பவும்.
உப்பு, அரை கப் கடலை மாவு, கொஞ்சம் மிளகாய் பொடி, வெந்தய பொடி அல்லது பொடித்த வெந்தய கீரை போட்டு நன்கு கலக்கவும்.
மாவு கட்டி தட்டாமல் நன்கு கலக்கவும்.
வாணலி இல் எண்ணெய் துளிவிட்டு கொஞ்சம் ஓமம் மற்றும் கறிவேப்பிலை தாளிக்கவும்.
கரைத்த மோரை அதில் விடவும்.
அது கொதிக்கட்டும். இது தான் 'கடி'
வாணலி இல் எண்ணெய் வைக்கவும்.
சூடான எண்ணெய் இல் கரைத்து வைத்துள்ள மாவை எடுத்து பக்கோடாக்கள் போல போடவும்.
நல்ல பவுன் நிறத்தில் எடுத்து , கொதித்துக்கொண்டிருக்கும் 'கடி' இல் போடவும்.
இது போல எல்லா மாவும்ஆகும் வரை செய்யவும்.
பக்கோடாக்கள் மொத்தமும் போட்டதும் ஒரு கொதி வரும் வரை காத்திருக்கவும்.
பிறகு 'கடி பகோடாவை' அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
இது ஒரு ராஜஸ்த்தானி டிஷ் , சப்பாத்திக்கு பூரிக்கு ரொம்ப நன்னா இருக்கும்.
Last edited by krishnaamma; 10-05-15, 23:16.என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
-
'Mixed Daal '
தேவையானவை :
1 டேபிள் ஸ்பூன் பயத்தம் பருப்பு
1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
1 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
4 - 5 பச்சை மிளகாய் (இரண்டாக நறுக்கவும் )
உப்பு
2 டேபிள் ஸ்பூன் நெய்
1 டீ ஸ்பூன் கடுகு ,
1 டேபிள் ஸ்பூன் சீரகம் கொஞ்சம்
மஞ்சள் பொடி கொஞ்சம்
கறிவேப்பிலை , கொத்துமல்லி கொஞ்சம்.
1 டேபிள் ஸ்பூன் இஞ்சி துருவியது
2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
செய்முறை:
எல்லா பருப்புகளையும் ஒன்றாக போட்டு, நன்கு களைந்து குக்கரில் வைக்கவும்.
மூன்று நான்கு விசில் வரட்டும்.
வாணலி இல் நெய் விட்டு,கடுகு , சீரகம்,மஞ்சள் பொடி, இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.
கடைந்த ,வெந்த பருப்பை இதில் கொட்டவும.
கொஞ்சம்கொதித்ததும் உப்பு போடவும்.
தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விடவும்.
பிறகு கறிவேப்பிலை , கொத்துமல்லி தூவி இறக்கவும்.
கொஞ்சம் ஆறினதும் எலுமிச்சை சாறு விட்டு கலக்கவும்.
'Mixed Daal ' தயார். சப்பாத்திக்கு ரொம்ப நல்லா இருக்கும்.
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
-
'பயத்தம் பருப்பு டால் '
தேவையானவை :
1 கப் பயத்தம் பருப்பு (நன்கு வேக வைக்கவும்.)
2 பெங்களூர் தக்காளி (விதை நீக்கி நறுக்கி வைக்கவும் )
4 - 5 பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கவும் )
1 உருளைக்கிழங்கு ( வேகவைத்து சிறு துண்டங்களாக்கவும் )
உப்பு
கொஞ்சம் எண்ணெய்
கடுகு , சீரகம் கொஞ்சம்
மஞ்சள் பொடி கொஞ்சம்
பெருங்காயம் ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை , கொத்துமல்லி கொஞ்சம்.
தேவையானால் இஞ்சி துருவியது கொஞ்சம்.
செய்முறை:
வாணலி இல் எண்ணெய் விட்டு,கடுகு , சீரகம்,மஞ்சள் பொடி,பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.
நறுக்கி வைத்துள்ள தக்காளியை போட்டு வதக்கவும்.
பிறகு உருளைக்கிழங்கு துண்டுகளைப்போடவும் .
நன்கு வதக்கவும்.
வெந்த பருப்பை இதில் கொட்டவும.
கொஞ்சம்கொதித்ததும் உப்பு போடவும்.
பிறகு கறிவேப்பிலை , கொத்துமல்லி தூவி இறக்கவும்.
'பயத்தம் பருப்பு டால் ' தயார். சப்பாத்தி க்கு ரொம்ப நல்லா இருக்கும்.
குறிப்பு: உருளைக்கிழங்கு வேண்டாதவா தவிர்க்கலாம் .என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
-
உருளைக்கிழங்கு கறி
உருளைக்கிழங்கு கறி
தேவையானவை :
500 Gms. உருளைக்கிழங்கு
2 டீ ஸ்பூன் - மிளகாய் பொடி
1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் உளுந்து
1/2 கடலை பருப்பு
உப்பு
கொஞ்சம் எண்ணெய்
மஞ்சள் பொடி கொஞ்சம்
செய்முறை:
உப்பு போட்டு உருளைக்கிழங்கை வேகவைத்துக்கொள்ளவும்.
ஆறினதும் , தோலுரித்து, சதுரத்துண்டுகளாய் நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு தாளிக்கவும்.
இப்போது வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கை போடவும்.
மெதுவாக கிளறிவிடவும்.
மிளகாய் பொடி போடவும்.
கொஞ்சமாய் உப்பு போடவும். ( ஏற்கனவே கிழங்கில் போட்டிருக்கோம் )
அடுப்பை சிம் இல் வைக்கவும்.
அது மெல்ல மெல்ல வதங்கட்டும்.
அப்பப்போ கிளறி விடணும் .
நன்கு 'மொரு மொரு'பானதும், கறிவேப்பிலை போட்டு ஒரு கிளறு கிளறி இறக்கிடுங்கோ.
அருமையான உருளைக்கிழங்கு கறி தயார்.
இது சப்பாத்தி , பூரிக்கு ரொம்ப நல்லா இருக்கும்.Last edited by krishnaamma; 11-05-15, 00:16.என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
-
Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்&am
Dear bmbcadmin,
Why repetition of the same posts so many times? Error in software? Repeated eleven times, and the screeen shows 9 replies? I find no replies.
Can you explain why it is? Good post but.
Varadarajan
Last edited by R.Varadarajan; 11-05-15, 07:36.
Comment
-
Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்
Sri:
Dear Sir,
Kindly check again,
The title is the same but the contents are found different, so, they are not repetitions.
Thanks for your care and intimation.
BMBCADMIN
Comment
Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்&am
Respected Swamin,
I have checked. Is this the one called "Sticky thread?"
I find Smt.krshnaamma's introduction followed by nine posts which are:
உருளைக்கிழங்கு கறி
பயத்தம் பருப்பு டால் '
Mixed Daal '
கடி பகோடா'
பென்கன் கா பர்த்தா
ஆலு சன்னா
ஆலு மேத்தி சப்ஜி
மேத்தி மலாய் மசாலா !
பாம்பே சட்னி !
The order is from the latest one going back on time.
There are no "Replies" only nine posts,+1 introduction. And all similar!
Is it convenient? The posts can come as new ones so that a reader need not scrawl through the earlier repeated ones. If you go through now you will find the same material occupying the space 10 times, followed my query and your reply and then mine.
I suggest that the posts be individual,or in the same post as recipe1,recipe2, etc. to avoid the members going thru repettitve appearances.
Hope you understand . It is only a suggestion to avoid monotony.
VaradarajanLast edited by R.Varadarajan; 11-05-15, 15:34.
Comment
Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்
ஏதாவது செய்து பார்த்தேளா மாமா?என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்&am
Originally posted by krishnaamma View Postஏதாவது செய்து பார்த்தேளா மாமா?
அவ்வளவு சரியாக வரவில்லை.
தப்பாக நினைக்கவேண்டாம் - சிலவற்றின் பெயர் பிடிக்காததால் (ஒரு மாதிரி இருப்பதால்)
அவற்றை முயற்சிக்கவில்லை.
டால் அது முன்னமேயெ தெரிந்தது, அது அவ்வளவு இணையாக இல்லை.
மீண்டும் மாமி ஊரில் இல்லாதபோதுதான் செய்து பார்க்கவேண்டும்
என்று முன்னமேயே பதில் போட்டிருந்தேன்.
நன்றி,
என்.வி.எஸ்
Comment
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 21:19.
Working...
X
Comment