ஆலு சன்னா
தேவையானவை :
ஒரு கப் வேகவைத்த கொத்துக்கடலை
இரண்டு கப் வேகவைத்த உருளைக்கிழங்கு
4 - 5 பச்சை மிளகாய்
ஒரு இன்ச் இஞ்சி துண்டு
ஒரு ஸ்பூன் சீரகம்
ஒரு ஸ்பூன் கடுகு
கொத்துமல்லி இலைகள் கொஞ்சம்
கறிவேப்பிலை இலைகள்
கொஞ்சம் மஞ்சள் பொடி
உப்பு
எண்ணெய்
பொடிக்க வேண்டியவை:
கொஞ்சம் மிளகு- சீரகம் , 4 ஏலக்காய், ஒரு சின்ன துண்டு லவங்க பட்டை, 4 லவங்கம் , ஒரு பிரிஞ்சி இலை எல்லாவற்றையும் பொடித்து வைத்துக்கொள்ளவும். அதிலிருந்து ஒரு சின்ன ஸ்பூன் பொடியை இந்த கறியமுதுக்கு போடவும்.
செய்முறை :
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் போட்டு தாளிக்கவும்.
கடுகு வெடித்ததும், பச்சை மிளகாய் , துருவின இஞ்சி கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வதக்கவும்.
வேக வைத்த கொத்துக்கடலை யை போட்டு நன்கு மசிக்கவும்.
மேலே சொன்ன பொடியை ஒரு சின்ன ஸ்பூன் போடவும்.
கொஞ்சம் தண்ணீர் விட்டு நன்கு மசிக்கவும்.
மஞ்சள் பொடி போடவும்.
கொஞ்சம் சேர்ந்தாற்போல ஆனதும் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை போடவும்.
நறுக்கி வைத்துள்ள கொத்துமல்லி மற்றும் கறிவேப்பிலையை போடவும்.
நன்கு கிளறவும்.
சேர்ந்தாற்போல ஆனதும் இறக்கவும்.
வாசனை ஆளை தூக்கும்..... ரொம்ப நல்லா இருக்கும்.
குறிப்பு: இதை சப்பாத்தி இல் வைத்து சுருட்டி அலுமினியம் foil இல் சுற்றி மத்தியானத்துக்கு வைக்கலாம். லஞ்ச் க்கு வைக்கலாம். ரொம்ப நல்லா இருக்கும்.
Announcement
Collapse
No announcement yet.
" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்ட
Collapse
X
-
ஆலு மேத்தி சப்ஜி
தேவையானவை :
1 /2 கிலோ உருளைக்கிழங்கு
1 பெரிய கட்டு வெந்தயக்கீரை
காரத்திற்கு தேவையான மிளகாய் பொடி அல்லது பச்சை மிளகாய்
தளிக்க:
கடுகு
உளுத்தம் பருப்பு
கடலை பருப்பு
எண்ணெய்
தேவையான அளவு உப்பு
பெருங்காயப்பொடி
மஞ்சள் பொடி
செய்முறை :
உருளைக்கிழங்கை உப்பு போட்டு வேகவைக்கவும்.
தோல் உரிக்கவும் , சதுரங்களாக வெட்டி வைக்கவும்.
வெந்தயக்கீரையை நன்கு ஆய்ந்து அலசி நறுக்கவும்.
ஒரு வாணலி இல் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்குகளை போட்டு வதக்கவும்.
கொஞ்சம் வதங்கினதும், நறுக்கி வைத்துள்ள வெந்தயக்கீரையை தூவி நன்கு கிளறவும்.
எல்லாமாக ஒன்று சேர்ந்ததும் இறக்கவும்.
வெந்தய மணமாக சப்ஜி ரொம்ப நல்லா இருக்கும்.
Leave a comment:
-
மேத்தி மலாய் மசாலா !
தேவயானவை :
பனீர் - 250 கிராம் ( துண்டமாக்கவும்)
காய்ந்த மேத்தி இலைகள் ( கசூர் மேத்தி - கடைகளில் கிடைக்கும் ) - 2 டேபிள் spoon (வெந்தயக்கீரை தான் 'மேத்தி ' )
மலாய் ( பால் ஏடு) - 4 டேபிள் ஸ்பூன்
முந்திரி விழுது - 1/2 கப்
மிளகு பொடி - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
பால் - 1/2 கப்
எண்ணை - 2 ஸ்பூன்
உப்பு
தண்ணீர் 1/4 கப்
செய்முறை:
ஒரு வாணலி இல் எண்ணை விட்டு சீரகம் போடவும்.
அது பொரிந்ததும் , வெந்தய கீரையை கையால் நொறுக்கி போடவும்.
ஒரு கிளறு கிளறி, முந்திரி விழுது, பால் ஏடு போட்டு நன்கு கிளறவும்.
எண்ணை பிரிந்து வரும்வரை நன்கு வதக்கவும்.
உப்பு மற்றும் மிளகு பொடி போடவும்.
நன்கு கலக்கவும்
பிறகு பால் மற்றும் தண்ணீர் விடவும்.
நன்கு கலக்கவும் , ஒரு கொதி வந்ததும் , நறுக்கி வைத்துள்ள பனீர் துண்டங்களை
போடவும்.
மறுபடி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
சுவையான பஞ்சாபி "மேத்தி மலாய் மசாலா " தயார்.
சப்பாத்தி அல்லது 'நான்' உடன் பரிமாறவும்.
Leave a comment:
-
பாம்பே சட்னி !
தேவையானவை :
1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
3 -4 பச்சை மிளகாய்
4 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
2 தக்காளி
கறிவேப்பிலை
கொத்துமல்லி
உப்பு
கொஞ்சம் எண்ணை
செய்முறை:
தக்காளி, பச்சை மிளகாய் என அனைத்தயும் மிகவும் பொடியாக நறுக்கவும்.
வாணலி இல் எண்ணை வைத்து , கடுகு, உளுந்து போட்டு தாளிக்கவும்.
நறுக்கி வைத்தத்தை போட்டு வதக்கவும்.
கடலை மாவில் தண்ணீ விட்டு கரைத்து வாணலி இல் ஊற்றவும்.
நன்கு கொதித்து கெட்டியானதும் (சட்டினி போல் ஆனதும் ) இறக்கவும்.
கறிவேப்பிலை கொத்தமல்லி தூவி இறக்கவும்.
தோசை இட்லி கு நல்லா இருக்கும்.
Leave a comment:
-
" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்ட
இந்த திரி இல் , எல்லாவிதமான "Side Dishes" அதாவது டிபனுக்கு தொட்டுக்கொள்பவற்றை பார்போம். இவைகளை இட்லி, தோசை , உப்புமா, சப்பாத்தி மற்றும் பூரி கு தொட்டுக்கொள்ளலாம்.Tags: None
Leave a comment: