* "தேர்தல் பிரச்சாரத்தில் 'நான் யாருடைய பெண்ணையும் இழுத்துக்கொண்டு
ஓடிவிடவில்லை' என்று கூறியவர் யார்?"
-- அரவிந்த் கெஜ்ரிவால்.
* "தமிழக வேட்பாளர்களில் அதிகபட்ச சொத்து கொண்ட கோடீஸ்வர
வேட்பாளர் யார்? அவரின் சொத்து மதிப்பு என்ன"
-- கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார்.
அவரது சொத்து மதிப்பு 283 கோடி.
* " 'அம்மா குடிநீரைவிட ரெயில்வே குடிநீர் விலை அதிகம்' என்று
சுட்டிக்காட்டிப் பிரசாரம் செய்கின்றனர் அ.தி.மு.க-வினர்.
இரண்டுக்குமான விலை வித்தியாசம் என்ன?"
-- அம்மா குடிநீர் 10 ரூபாய். ரெயில்வே குடிநீர் 15 ரூபாய்.
* "சமீபத்தில் ஒரு தமிழ் நடிகையும், இந்தி நடிகையும் நரேந்திர மோடிக்குத்
தங்கள் ஆதரவை தெரிவித்தார்கள். அவர்கள் யார்"
-- தமிழ் நடிகை சமந்தா ; இந்தி நடிகை சோனாக்க்ஷி சின்ஹா.
-- ஆனந்த விகடன். 23 - 04 - 2014.